விஜே மணிமேகலை பைக்கை திருடி CCTV இல் சிக்கிய திருடன் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!

0
விஜே மணிமேகலை பைக்கை திருடி CCTV இல் சிக்கிய திருடன் - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!
விஜே மணிமேகலை பைக்கை திருடி CCTV இல் சிக்கிய திருடன் - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!
விஜே மணிமேகலை பைக்கை திருடி CCTV இல் சிக்கிய திருடன் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு பிரபலமானவர் விஜே மணிமேகலை. அவருடைய விலை உயர்ந்த பைக் தொலைந்து போன நிலையில் திருடியவர் முகம் தெரியும் அளவிற்கு சிசிடிவி பதிவு ஒன்று கிடைத்திருப்பதாக வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

விஜே மணிமேகலை:

சன் மியூசிக் சேனலில் ஆங்கராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது விஜய் டிவியில் டாப் ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியின் மூலம் கலக்கி வருபவர் விஜே மணிமேகலை. அவர் சில ஆண்டுகளுக்கு முன் ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் வந்த நிலையில் தனியாக பல கஷ்டங்களை தாண்டி வாழ்ந்து தற்போது சின்னத்திரையில் தனக்கொரு இடத்தை பிடித்திருக்கிறார். மணிமேகலை சமீபத்தில் BMW கார் வாங்கி இருந்தார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை தம்பி, தங்கையுடன் வெளியிட்ட புகைப்படம் – இணையத்தில் வைரல்!

இயற்கையாகவே நகைச்சுவை குணத்துடன் இருக்கும் அவர் வாழ்க்கையில் தனியாக இருந்து சம்பாரித்து தற்போது வாழ்ந்து வருகிறார். அவரும் அவருடைய கணவரும் இணைந்து தனியாக யூடுயூப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றனர். அதில் ஏகப்பட்ட ரசிகர்கள் அவர்களை ஃபலோ செய்து வருகின்றனர். இந்நிலையில் மணிமேகலை தனது சமூக வலைதள பக்கத்தில் திருமணத்திற்கு பின் முதன்முறையாக வாங்கிய விலை உயர்ந்த பைக்கை காணவில்லை என பதிவிட்டிருந்தார்.

அதை கண்டுபிடித்து கொடுக்க உதவுமாறு அவர் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் அந்த வண்டியை நிறுத்தி வைத்த இடத்தில் இருந்து சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோவை மணிமேகலை தனது யூடுயூப் சேனலில் வெளியிட்டு இருக்கிறார். அதில் இருவர் வந்து பைக்கை எடுத்துக் கொண்டு போவது தெளிவாக விழுந்துள்ளது. அந்த பகுதியில் அடிக்கடி அப்படி தான் பைக் திருடு போவதாகவும் தன்னுடைய பொருளை நாம தான் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என மணிமேகலை அந்த வீடியோவில் காட்டி இருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!