TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!

0
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 - உடனே பாருங்க!
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 - உடனே பாருங்க!
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!

டிஎன்பிஎஸ்சி தகுதி தேர்விற்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை PDF வடிவத்தில்‌ சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு துறைகளுக்கான பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 முதலான தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி குரூப் 2 தேர்வு மே 22 ஆம் தேதியும், குரூப் 4 தேர்வு ஜூன் 24 ஆம் தேதியும் நடைபெறவுள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்வு எழுத தகுதியான பல தேர்வர்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரருக்கான ஒரு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வழங்கியுள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? அமைச்சரவையில் மாற்றங்கள்!

அதாவது விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது விண்ணப்பதாரரின் சான்றிதழ்களை PDF வடிவத்தில்‌ 200 KBக்கு மிகாமல்‌ பதிவேற்றம் செய்யும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பதாரர்கள் அனைத்து சான்றிதழ்களையும் பதிவிட இசேவை மையம் முதலான பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை பதிவு செய்வதற்கு ஏதுவாக முன்னரே அனைத்து சான்றிதழ்களையும் ஸ்கேன் செய்துகொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பதிவேற்றம்‌ செய்யப்பட்ட சான்றிதழ்களை விண்ணப்பதாரர்‌கள் தங்களது ஒருமுறைப்‌ பதிவின்‌ மூலம்‌ சரிபார்த்துக்‌கொள்ளவும்‌ வழிவகை செய்யப்பட்டுள்ளது. சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யும் போது ஏதேனும் தவறுகள் இருந்தாலோ அல்லது பதிவேற்றம் செய்யப்படாமல் இருந்தாலோ தேர்விற்கான அனுமதி சீட்டினை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சான்றிதழ்களைப்‌ பதிவேற்றம்‌ செய்ய அல்லது மறு பதிவேற்றம்‌ செய்ய அனுமதிக்கப்படுவர்‌. எழுத்துத்‌ தேர்விற்குப்‌ பின்னர்‌ சான்றிதழ்‌ பதிவேற்றம்‌ செய்ய முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்தான விவரங்களை அறிய விரும்பினால் [email protected] அல்லது  [email protected] ஆகிய  மின்னஞ்சல் முகவரி அல்லது தேர்வாணையத்தின்‌ 1800 419 0958 இந்த தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல்‌ மாலை 5.45 மணிக்குள் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!