EPFO ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – முகம் பதிவு செய்யும் வசதி அறிமுகம்!

0
EPFO ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு - முகம் பதிவு செய்யும் வசதி அறிமுகம்!
EPFO ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு - முகம் பதிவு செய்யும் வசதி அறிமுகம்!
EPFO ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – முகம் பதிவு செய்யும் வசதி அறிமுகம்!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்திடம் பென்சன் (EPFO Pension) வாங்குவோர் முகம் பதிவு செய்யும் வசதியை (face recognition facility) பயன்படுத்தி டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

EPFO:

ஓய்வூதியதாரர்கள் எளிதாக வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்காக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) புதிய முகம் பதிவு செய்தல் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள 73 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். ஒவ்வொரு ஓய்வூதியதாரரும் ஆண்டுக்கு ஒருமுறை வாழ்நாள் சான்றிதழ் (life certificate) சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் பென்சன் தொடர்ந்து கிடைக்கும். வாழ்நாள் சான்றிதழ் என்பது ஓய்வூதியதாரர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான சான்று.

Exams Daily Mobile App Download

வயது முதிய ஓய்வூதியதாரர்கள் அலைச்சலை தவிர்க்கவும், எளிதாக வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கவும் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் (Digital life certificate) முறை சில ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் ஓய்வூதியம் பெறுவோர் தங்களது டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிப்பதற்கான புதிய வசதியை ஓய்வூதிய நிதி அமைப்பு EPFO கடந்த சனிக்கிழமை அறிமுகப்படுத்தியது. புதிய ‘முகத்தை அடையாளம் காணும் வசதி’ மூலம், ஓய்வூதியம் பெறுவோர் இப்போது நாட்டில் எங்கிருந்தும் EPFO போர்ட்டலில் தங்கள் டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழை எளிதாகச் சமர்ப்பிக்கலாம்.

முகம் பதிவு செய்யும் வசதி விவரங்கள் :
  • வாழ்நாள் சான்றிதழைத் தாக்கல் செய்வதற்காக, முதுமையின் காரணமாக பயோமெட்ரிக் (கைரேகை மற்றும் கருவிழி) கைப்பற்றுவதில் சிரமங்களை எதிர் கொள்ளும் வயதான ஓய்வூதியதாரர்களுக்கு EPFO ‘முகத்தை அடையாளம் காணும் வசதி’ உதவும்.
  • மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், ஓய்வூதியம் பெறுவோருக்கான முக அங்கீகார தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியதாக தொழிலாளர் அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 4) மின்தடைக்கான பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு

  • CBT அதன் 231 வது கூட்டத்தில், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான EPFO சேவைகளை மேலும் மேம்படுத்துவதற்காக ஓய்வூதியத்தை மையப்படுத்திய விநியோகத்திற்கு முதன்மை ஒப்புதல் அளித்தது.
  • ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் 1995 (EPS’95) இன் அனைத்து ஓய்வூதியதாரர்களும் தொடர்ந்து ஓய்வூதியம் பெற ஒவ்வொரு ஆண்டும் ஜீவன் பிரமான் பத்ரா (JPP) / டிஜிட்டல் லைப் சான்றிதழ் (DLC) சமர்ப்பிக்க வேண்டும்.
  • 2015-16 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ்கள், ஓய்வூதியம் பெறுவோர் பயோமெட்ரிக் சரிபார்ப்புக்கு பிறகு சான்றிதழைப் பெற தங்கள் ஆதார் அட்டை எண்ணைப் பயன்படுத்த அனுமதிக்கின்றன.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!