TNPSC குரூப் 1 தேர்வு அறிவிப்பு – 2,00,000 வரை ஊதியம்! விண்ணப்பிக்க கடைசி நாள் ஆக. 22!

2
TNPSC குரூப் 1 தேர்வு அறிவிப்பு - 2,00,000 வரை ஊதியம்! விண்ணப்பிக்க கடைசி நாள் ஆக. 22!
TNPSC குரூப் 1 தேர்வு அறிவிப்பு - 2,00,000 வரை ஊதியம்! விண்ணப்பிக்க கடைசி நாள் ஆக. 22!
TNPSC குரூப் 1 தேர்வு அறிவிப்பு – 2,00,000 வரை ஊதியம்! விண்ணப்பிக்க கடைசி நாள் ஆக. 22!

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது ஒருங்கிணைந்த சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான (Group 1) பணியிட அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் குரூப் 1 தேர்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

TNPSC குரூப் 1 தேர்வு:

தமிழகத்தில் பல்வேறு அரசு பணிகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் TNPSC குரூப் 1 தேர்வு 2022 அறிவிப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இன்று ( 21.07.2022) tnpsc.gov.in இல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு மூலம் துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர், வணிகவரி உதவி ஆணையர் உள்பட 93 பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பு அடிப்படையில் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 22.08.2022 ஆகும்.

TN Job “FB  Group” Join Now

மேலும் விண்ணப்பதாரர்கள் tnpscexams.in என்ற இணையதளத்தில் ஒரு முறை பதிவு மற்றும் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தி பதிவு செய்யலாம். முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என 3 கட்டங்களாக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. இதையடுத்து இந்த பதவிகளுக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ. 56,100 – 2,05,700 வரை மாத சம்பளமாக வழங்கப்படும். மேலும் இந்த TNPSC குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் 21 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும், அதிகபட்ச வயது வரம்பு பதவிக்கு பதவி வேறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரிலிமினரி தேர்வு வரும் 30.10.2022 என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த குரூப் 1 தேர்வு குறித்து கூடுதல் விவரங்கள் தெரிந்து கொள்ள TNPSC அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Group 1 கல்வித்தகுதி:

  • TNPSC குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
  • உடல் தகுதி – குறைந்தபட்ச உடல் தகுதிகள் பதவிக்கு பதவி வேறுபடும்.

மூர்த்தியிடம் கதிர் பற்றி சண்டை போடும் பார்வதி, ஜீவாவை கடைக்கு வர சொல்லும் மீனாவின் அப்பா – இன்றைய எபிசோட்!

விண்ணப்பிக்கும் முறை:

  • tnpscexams.in இல் TNPSC ஒரு முறை பதிவு செய்ய பதிவு செய்யவும்.
  • TNPSC உள்நுழைவு ஐடி மற்றும் கடவுச்சொல் மூலம் உள்நுழையவும்.
  • இப்போது, ’தற்போதைய பயன்பாடு’ என்பதைக் கிளிக் செய்து.
  • ‘இப்போது விண்ணப்பிக்கவும்’ பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  • TNPSC குரூப் 1 சேவைகளைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் கல்வித் தகுதி, தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தேர்வு மைய விவரங்களை உள்ளிட்டு சரிபார்க்கவும்.
  • “இறுதியாக எனது ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஒப்புக்கொள்கிறேன்” என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் அறிவிப்பைச் சரிபார்த்து உறுதிப்படுத்தவும்.
  • பின்னர், கட்டணப் பிரிவுக்குச் செல்லும் அடுத்த கட்டத்திற்குச் செல்லவும். டெபிட் கார்டு / கிரெடிட் கார்டு / NEFT ஆகியவற்றிலிருந்து கட்டண முறை விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, பணம் செலுத்துவதற்கு மேலும் தொடரவும்.
  • வெற்றிகரமாக பணம் செலுத்திய பிறகு, எதிர்கால குறிப்புக்காக உங்கள் TNPSC குழு 1 விண்ணப்பத்தை அச்சிடவும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!