தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு – ஏப்ரல் 26 கடைசி நாள்!

0
தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு - ஏப்ரல் 26 கடைசி நாள்!
தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு - ஏப்ரல் 26 கடைசி நாள்!
தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு – ஏப்ரல் 26 கடைசி நாள்!

தமிழகத்தில் கொரோனா வருகைக்கு பின் வேலைவாய்ப்பின்மை அதிகம் நிலவியது. அதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். தற்போது நிலை சீராகி வருவதால் அனைத்து துறைகளில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி மருத்துவ கல்லூரி வேலைவாய்ப்பு வெளியாகி உள்ளது. மேலும் தகுதியுள்ளவர்கள் 26.04.2022 க்குள் விண்ணப்பிக்கலாம்.

மருத்துவமனை வேலைவாய்ப்பு:

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தேசிய நலவாழ்வு குழுமத்தின் பல்வேறு திட்டங்களில் தற்காலிக அடிப்படையில் மனநல ஆலோசகர், மருந்தாளுனர், தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 26 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்நிலையில் மனநல ஆலோசகர் (Psychologist) பணியில் 3 இடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க M.Sc Psychology / M.Phil Clinical Psychology / M.A or M.Sc Psychology படித்திருக்க வேண்டும். மேலும் மாத சம்பளம் ரூ.18,000 வழங்கப்படும். இதை அடுத்து தரவு உள்ளீட்டாளர் (Data entry operator) பணியில் காலியிடங்களின் எண்ணிக்கை 1 ஆகும். இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர் மற்றும் கணினி இயக்க தெரிந்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

TN TRB தேர்வுக்கு விண்ணப்பித்து இருப்போர் கவனத்திற்கு – TET தயாராவது எப்படி? எளிய வழிமுறைகள்!

தகுதியானவர்கள் தேர்தெடுக்கப்பட்டு மாத சம்பளம் ரூ.10,000 ஆகும். இந்த வகையில் பாதுகாவலர் (Security) பணியில் காலியிடங்களின் எண்ணிக்கை 4 ஆகும். இப்பணிக்கு விண்ணப்பிக்க 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். முன்னாள் ராணுவத்தினரும் விண்ணப்பிக்கலாம். மேலும் மாத சம்பளம் ரூ. 6,300 வழங்கப்படும். இந்த வகையில் துப்புரவு பணியாளர் (Sanitary Worker) பணியில் காலியிடங்களின் எண்ணிக்கை 4 ஆகும்.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் சம்பளம் ரூ.5,000 ஆகும். மருத்துவமனை பணியாளர் (Hospital Worker) பணியில் காலியிடங்களின் எண்ணிக்கை 6 ஆகும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சம்பளம் ரூ.5,000 வழங்கப்படும். இதையடுத்து மருந்தாளுனர் (Pharmacist) பணியில் காலியிடங்களின் எண்ணிக்கை 1 ஆகும். Diploma in Pharmacy படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் சம்பளம் ரூ.10,000 ஆகும். இந்த வகையில் சமூகப் பணியாளர் (Social Worker) பணியில் காலியிடங்களின் எண்ணிக்கை 7 ஆகும். M.A Social Work (Medical / Psychiatry) Master of Social Work (Medical / Psychiatry) படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்கள் தேர்தெடுக்கப்பட்டு சம்பளம் 18,000 வழங்கப்படும்.

நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://tirunelveli.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை இணைத்து “முதல்வர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருநெல்வேலி – 627011” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!