தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு – ஏப்ரல் 4 கடைசி நாள்!

0
தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு - ஏப்ரல் 4 கடைசி நாள்!
தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு - ஏப்ரல் 4 கடைசி நாள்!
தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு – ஏப்ரல் 4 கடைசி நாள்!

நாமக்கல் மாவட்ட வருவாய்த்துறை, அருமையான வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த அறிவிப்பு அடிப்படையில் மொத்தம் 13 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஏப்ரல் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

வருவாய்த்துறை வேலைவாய்ப்பு:

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வருவாய்த்துறையின் கீழான ஆட்சி அமைப்பு இருக்கிறது. இந்த அமைப்பு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அவருடைய வழிகாட்டுதலின் கீழ் இயங்குகின்றன. இந்த மாவட்ட வருவாய்த்துறை அமைப்பில் வருவாய் கிராமம், உள்வட்டம், வருவாய் வட்டம் மற்றும் மாவட்டம் வரை கீழ்கண்ட வருவாய்த்துறை அலுவலர்கள் நிர்வகிக்கின்றனர். இந்த வருவாய்த்துறையின் வழியாகத்தான் தமிழ்நாடு அரசின் பல்வேறு நலத்திட்டப் பணிகள் செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

EPFO அக்கவுண்ட் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – வங்கி கணக்கை அப்டேட் செய்வது எப்படி?

இந்நிலையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய்த்துறையின் கீழ் உள்ள வட்டாட்சியர், கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: அலுவலக உதவியாளர் (Office Assistant):

காலியிடங்களின் எண்ணிக்கை : 11 பணியிடங்கள்.

விண்ணப்பதாரர் கல்வித் தகுதி : 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம் : ரூ 15,700 – 50,000

பணியின் பெயர்: இரவுக் காவலர் (Night Watchman)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2 பணியிடங்கள்.

விண்ணப்பதாரர் கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

மாத சம்பளம் : ரூ 15,700 – 50,000

விண்ணப்பதாரர் வயது வரம்பு: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க,விண்ணப்பதாரர் வயது 18 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இருப்பினும் அரசு விதிகளின் படி, SC/SCA/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், BC/MBC/DNC பிரிவுகளுக்கு 2 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3b9228e0962a78b84f3d5d92f4faa000b/uploads/2022/03/2022030546.pdf என்ற இணையதளப் பக்கத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர், வருவாய்த்துறை அ-பிரிவு, (முதல் தளம்), மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாமக்கல் – 637003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் கூடுதல் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!