இந்திய அஞ்சலக வங்கியில் 650 காலிப்பணியிடங்கள் – இன்றே கடைசி நாள்! உடனே விண்ணப்பிக்கவும்!

0
இந்திய அஞ்சலக வங்கியில் 650 காலிப்பணியிடங்கள் - இன்றே கடைசி நாள்! உடனே விண்ணப்பிக்கவும்!
இந்திய அஞ்சலக வங்கியில் 650 காலிப்பணியிடங்கள் - இன்றே கடைசி நாள்! உடனே விண்ணப்பிக்கவும்!
இந்திய அஞ்சலக வங்கியில் 650 காலிப்பணியிடங்கள் – இன்றே கடைசி நாள்! உடனே விண்ணப்பிக்கவும்!

இந்திய அஞ்சலக வங்கியில் உள்ள 650 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பே வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி என்பதால் விருப்பமுள்ள விண்ணப்பதாரர் விரைவில் விண்ணப்பிக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அஞ்சல் துறை காலிப்பணியிடங்கள்:

இந்திய அஞ்சலகக் கட்டண வங்கியில் (IPPB) காலியாக உள்ள 650 பணிகளுக்கான விண்ணப்பங்களை அஞ்சல் துறை தற்போது வெளியிட்டுள்ளது. இந்திய அஞ்சல் துறையில் உள்ள கிராம அஞ்சல் பணியாளர்கள் அனைவரும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 10 அல்லது 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது 10, 12 ஆம் வகுப்பிற்கு நிகரான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றவர் மட்டுமே இந்த பணியிடங்களுக்கு தேர்வாக முடியும்.

அலுவலக ஊழியர்களுக்கு ஜாக்பாட் – நிரந்த WFH முறை? 50% நிறுவனங்கள் முடிவு!

மேலும் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் கிராம அஞ்சல் பணியாளராக குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது பணியாற்றிருக்க வேண்டும். அதாவது எழுத்துத் தேர்வின் அடிப்படையிலேயே தகுதியான விண்ணப்பதாரர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்விற்கான எழுத்துத் தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்வுக் கட்டணம் ரூ.750 செலுத்த வேண்டும். ஏப்ரல் 30, 2022 ன் படி 20 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வாகும் தேர்வாளர்கள் தற்காலிக அடிப்படையிலேயே பணியில் நியமிக்கப்படுவார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பணியாளர்களின் செயல்திறனின் அடிப்படையில் ஒரு ஆண்டு நீட்டிக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது.

Exams Daily Mobile App Download

இப்பணிக்கு தேர்வாகும் ஊழியர்களுக்கு மாத சம்பளமாக ரூ.30,000 வரைக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர் http://www.ippbonline.com/ என்கிற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் விரைவில் விண்ணப்பிக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!