அலுவலக ஊழியர்களுக்கு ஜாக்பாட் – நிரந்த WFH முறை? 50% நிறுவனங்கள் முடிவு!

0
அலுவலக ஊழியர்களுக்கு ஜாக்பாட் - நிரந்த WFH முறை? 50% நிறுவனங்கள் முடிவு!
அலுவலக ஊழியர்களுக்கு ஜாக்பாட் - நிரந்த WFH முறை? 50% நிறுவனங்கள் முடிவு!
அலுவலக ஊழியர்களுக்கு ஜாக்பாட் – நிரந்த WFH முறை? 50% நிறுவனங்கள் முடிவு!

இந்தியாவில் கொரோனா பேரலை பாதிப்புகளுக்கு பிறகு பெரும்பாலான அதாவது 50% நிறுவனங்கள் நிரந்தர WFH முறையை தனது ஊழியர்களுக்கு வழங்க முடிவு செய்திருப்பதாக ஆய்வுத்தகவல்கள் தெரிவிக்கிறது.

WFH முறை

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் ஒப்பீட்டளவில் மந்தமாக இருப்பதால் இந்தியாவில் உள்ள பல நிறுவனங்கள் ஊழியர்களை இப்போது நிரந்தரமாக வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்கின்றன. அந்த வகையில் 50%க்கும் அதிகமான நிறுவனங்கள் ரிமோட் ஒர்க்கிங் ஆப்ஷனை ஊழியர்களுக்கு திறந்து வைத்துள்ளதாக கணக்கெடுப்பு கூறுகிறது. இந்தத் தரவு CIEL HR நடத்திய சமீபத்திய கணக்கெடுப்பில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இப்போது பல நிறுவனங்களின் நிர்வாகிகள், நீண்ட காலத்திற்கு நெகிழ்வான வேலை மாதிரியை பின்பற்ற இருப்பதாக கூறுகிறார்கள்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி நிலுவைத்தொகை? உண்மை நிலவரம் என்ன?

அந்த வகையில் Mondelez மற்றும் Tata Steel ஆகியவை நிரந்தரமாக வீட்டிலிருந்து பணிபுரியும் (WFH) பணிகளுக்கு ஊழியர்களை பணியமர்த்துகின்றன. அதே நேரத்தில் மாருதி சுசுகி, Mphasis மற்றும் ITC ஆகியவை குறிப்பிட்ட பணிகளுக்கு இருப்பிட மற்றும் நெகிழ்வான அணுகுமுறையை மேற்கொள்கின்றன. இந்த ஊழியர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் அலுவலகத்திற்கு வருகிறார்கள். இது குறித்து CIEL HR சர்வீசஸின் தலைமை நிர்வாகி ஆதித்யா மிஸ்ரா கூறுகையில், வீட்டில் இருந்து பணிபுரியும் ஊழியர்கள் முன்பு இருந்த அதே சம்பளத்தைப் பெறுகிறார்கள்.

இருப்பினும், நிரந்தர அடிப்படையில் ரிமோட் ரோல்களுக்கு புதிதாக பணியமர்த்தப்பட்டவர்கள் 15% குறைந்த சம்பளம் பெறுகின்றனர். மேலும், Mondelez இந்தியா நிறுவனத்தின் HR தலைவர் ஷில்பா வைட், இந்த நிறுவனம் ரிமோட் ரோல்களை வரையறுக்கப்பட்ட முறையில் பரிசீலித்து வருவதாக தெரிவித்தார். அதன்படி, புதிதாக பணியமர்த்தப்பட்டவர்களில் 10% பேர் நிரந்தர ரிமோட் ரோல்களில் இருப்பார்கள். அதே நேரத்தில் வணிகம் மற்றும் பணியாளர்கள் இருவருக்கும் சிறந்த முறையில் சேவை செய்யும் நடைமுறைகளையும், கொள்கைகளையும் இந்நிறுவனம் பின்பற்ற விரும்புகிறது.

Exams Daily Mobile App Download

டாடா ஸ்டீல் நிறுவனம் கடந்த டிசம்பர் 2020ல் ‘அஜில் வொர்க்கிங் மாடல்’ கொள்கையை அறிமுகப்படுத்தியது. அதன் ஒரு பகுதியாக, அலுவலக ஊழியர்களுக்கான வேலை நிலைகள் இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டன. அந்த வகையில், வீட்டிலிருந்து முழுமையாக வேலை செய்யும் பிரிவில் பணியாளர் இந்தியாவில் எந்த இடத்திலிருந்தும் வேலை செய்யலாம். மற்றபடி, குறிப்பிட்ட இடத்தில் இருந்து வேலை செய்ய வேண்டிய அதிகாரிகள், ஒரு வருடத்தில் வரம்பற்ற நாட்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யலாம். மாருதி சுஸுகி நிறுவனம் நெகிழ்வுத் தன்மையின் அடிப்படையில் ஒரு ஹைப்ரிட் வேலை மாதிரியை தேர்ந்தெடுத்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!