IndBank வங்கியில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

0
IndBank வங்கியில் வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
IndBank வங்கியில் வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
IndBank வங்கியில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக IndBankயில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

வேலைவாய்ப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டு வேலைவாய்ப்புகள் குறையத் தொடங்கியது. தற்போது கொரோனா பரவல் குறைய தொடங்கிய பிறகு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. அத்துடன் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் IndBankயில் இருக்கும் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் அக்கவுண்ட் ஓப்பனிங் டிப்பார்ட்மென்ட் பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் NISM DP, SORM சான்றிதழுடன் பட்டப்படிப்பு பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

TN TRB தேர்வர்கள் கவனத்திற்கு – விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

அத்துடன் அக்கவுண்ட் ஓப்பனிங் டிப்பார்ட்மென்டில் டிமேட் மற்றும் டிரேடிங் A/C உள்ளிட்டவற்றில் குறைந்தபட்சமாக 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். DP பணியிடத்திற்கு NISM DP சான்றிதழுடன் ஏதேனும் பட்டப்படிப்பு மற்றும் குறைந்தபட்சமாக 5 வருட பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். இதையடுத்து Dealer- for Stock Broking Terminals பணியிடத்திற்கு B.Com படித்தவராக இருக்க வேண்டும். ஆராய்ச்சி ஆய்வாளர் பதவிக்கு MBA அல்லது அதற்கு இணையான முதுகலைப் பட்டப்படிப்பு மற்றும் NISM – ஆராய்ச்சி ஆய்வாளர் சான்றிதழ் பெற்றவராக இருக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு நேர்காணல் முறையில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download

அதன்பின் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் ஸ்கிரீனிங் கமிட்டி முதலில் அனைத்து விண்ணப்பங்களையும் மதிப்பாய்வு செய்யும், பின்னர் நேர்காணல் மற்றும் இறுதித் தேர்வு நடத்தப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பும் நபர்கள் https://corporate.indbankonline.com/documents/Advertisement.pdf என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இதையடுத்து பூர்த்தி செய்யப்பட்ட ஆவணத்தை “Head Administration No 480, 1st Floor Khivraj Complex I, Anna Salai, Nandanam, Chennai-35” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஆன்லைன் மூலமாகவும் அனுப்பலாம். இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். அதனால் விண்ணப்பித்தார்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!