நான்கு முறை காதல் தோல்வி, KPY பாலா வாழ்க்கையில் நடந்த சோகம் – ரசிகர்கள் உருக்கம்!
விஜய் டிவி “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி மூலமாக மக்களை சிரிக்க வைக்கும் நகைசுவை நடிகராக திகழ்பவர் பாலா. இந்நிலையில் அவர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சோகமான கதையை பற்றி விஜய் டிவியின் நீயா நானா ஷோவில் தெரிவித்துள்ளார்.
KPY பாலா:
விஜய் டிவியில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் சாமானியராக கலந்து கொண்டு அதில் தன்னுடைய திறமையை காட்டி சின்னத்திரை வெள்ளித்திரை என பலர் கலக்கி வருகின்றனர். அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கிய புகழ் தற்போது பல படங்களில் பிசியாக இருக்கிறார். அவரை போலவே தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருப்பவர் தான் காமெடியன் பாலா. இவர் கலக்க போவது யாரு சீசன் 6ல் ஒரு போட்டியாளாராக கலந்து கொண்டு முதலிடத்தை பிடித்தார்.
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்கும் பிரபல வில்லன் – ப்ரோமோ ரிலீஸ்!
இந்நிலையில் பாலா ஜுங்கா, தும்பா, காக்டெய்ல், புலிக்குத்தி பாண்டி போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், 90ஸ் கிட்ஸ் vs 2கே கிட்ஸ், அது இது எது என பல நிகழ்ச்சிகளில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்து அவர் மக்களை மகிழ்வித்து வருகிறார். மேலும் இவரது திறமையை பாராட்டும் விதமாக விஜய் டெலிவிஷன் அவார்ட் நிகழ்ச்சியில் அவருக்கு சிறந்த காமெடியன் விருது கொடுக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
பாலா விஜய் டிவியில் விவாத மேடை நிகழ்ச்சியான நீயா நானாவில் அடிக்கடி கலந்து கொள்வார். இந்நிலையில் சமீபத்தில் அவர் பங்கேற்ற போது அவர் காதல் பற்றி பேசி இருக்கிறார். அதில் இதுவரை நான்கு முறை காதல் தோல்வியை சந்தித்து இருப்பதாகவும், அவை ஒருதலை காதல் தான் என்றும் அவர் கூறி இருக்கிறார். மேலும் 2019ல் ஒரு பெண்ணை பார்த்து அப்பவே காதல் வந்ததாகவும் அந்த காதலை அந்த பெண்ணிடம் சொல்ல உங்களை அண்ணன் போல நினைத்துவிட்டதாக அவர் சொல்லிவிட்டதாகவும் அதற்கு பிறகு என் வாழ்க்கையில் காதல் என்பதே இல்லை என மனம் உருகி சொல்லி இருக்கிறார்.