கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு – சித்தி ரஞ்சினி பரபரப்பு புகார்!

0
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு - சித்தி ரஞ்சினி பரபரப்பு புகார்!
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு - சித்தி ரஞ்சினி பரபரப்பு புகார்!
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு – சித்தி ரஞ்சினி பரபரப்பு புகார்!

கள்ளக்குறிச்சி கலவரம் மற்றும் மாணவி மரணம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் மாணவியின் சித்தி ரஞ்சினி புதிய புகார் ஒன்றை வைத்துள்ளார்.

பரபரப்பு புகார்:

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. எப்போது உடலை பெற்றுக்கொள்கிறீர்கள் .ஒவ்வொரு முறையும் புதிய புதிய பிரச்சனைகளை எழுப்புகிறீர்கள் என நீதிபதி கூறினார். இந்நிலையில் பள்ளி மாணவியின் உடலை நாளை காலை 6 -7 மணிக்குள் பெற்றுக் கொள்கிறோம் என பெற்றோர் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தனர். மாணவியின் உடலை பெற்றுக்கொண்டு நாளையே அடக்கம் செய்ய வேண்டும் என நீதிபதி கூறினார். இறுதி ஊர்வலத்தின் போது காவல்துறையின் பாதுகாப்பு அவசியமில்லை என பெற்றோர் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

Exams Daily Mobile App Download

கள்ளக்குறிச்சி மாணவியின் வழக்கில் பள்ளி முதல்வர், தாளாளர், செயலாளர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாணவியின் சித்தி ரஞ்சினி புதிய புகார் ஒன்றை வைத்துள்ளார். அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், மாணவியின் தற்கொலை முயற்சிக்கு தமிழ் ஆசிரியை தான் காரணம். நான் எல்லா டீச்சர்கள் மீதும் குறை சொல்ல மாட்டேன். இந்த ஒரு டீச்சர் மீது மட்டுமே குறை சொல்வேன். பல மாணவர்கள் நேராக சென்று இந்த தமிழ் டீச்சர் பற்றி குறை சொல்லி இருக்கிறார்கள். அவர் பலரை மோசமாக நடத்தியதாக குற்றச்சாட்டு உள்ளது.

கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை விவகாரம் – நீதிபதியின் பரபரப்பு கருத்து!

இந்த தமிழ் டீச்சர், மாணவிகளை மோசமாக அடிப்பார். மோசமாக நடத்துவார். குறிப்பாக மாணவர்கள் முன் தவறாக திட்டுவார். அவமானப்படுத்துவார். இதனால் மாணவிகளுக்கு அழுத்தம் அதிகம் ஆகிவிடுகிறது. அதனால் அவர் மீது ஆக்சன் எடுக்க வேண்டும். தயவு செய்து அவரை கைது செய்து, விசாரணை நடத்த வேண்டும் என்று மாணவியின் சித்தி ரஞ்சினி கூறியுள்ளார். மேலும் மாணவி மரணம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதாவது வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கார்த்திகா என இரண்டு ஆசிரியைகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிதாக தமிழ் ஆசிரியை மீது மாணவியின் சித்தி புகார் அளித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!