இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக KL ராகுல் – BCCI செயலாளர் கருத்து! ரசிகர்கள் விமர்சனம்!

0
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக KL ராகுல் - BCCI செயலாளர் கருத்து! ரசிகர்கள் விமர்சனம்!
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக KL ராகுல் - BCCI செயலாளர் கருத்து! ரசிகர்கள் விமர்சனம்!
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக KL ராகுல் – BCCI செயலாளர் கருத்து! ரசிகர்கள் விமர்சனம்!

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோஹ்லி விலகியதை தொடர்ந்து தற்போது அடுத்த கேப்டன் நியமனம் குறித்து BCCI ஆலோசித்து வருகிறது. இந்நிலையில் BCCI முன்னாள் செயலாளர் சஞ்சய் ஜக்டேல் KL ராகுலுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

சஞ்சய் ஜக்டேல் பரிந்துரை:

இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ தற்போது அடுத்த இந்திய டெஸ்ட் அணி கேப்டன் நியமனம் குறித்து ஆலோசனை கூட்டத்தை மேற்கொள்ள உள்ளது. டெஸ்ட் போட்டிகளின் அடுத்த கேப்டன் யார் என்று அனைத்து தரப்பிலும் கேள்வி எழுந்துள்ள நிலையில், இது குறித்து ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுத்து கேப்டன் நியமிக்கப்படுவார் என்று BCCI தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த டெஸ்ட் அணியின் கேப்டன் யார் என்று ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் கவனத்திற்கு – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்!

ஜனவரி 15ம் தேதி கேப் டவுன் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா, தென்னாபிரிக்கா அணிகள் மோதிய 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது தொடரை கைப்பற்ற தவறியது. இதை தொடர்ந்து விராட் கோஹ்லி தனது டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். தற்போது அடுத்த டெஸ்ட் அணி கேப்டன் யார் என்று அனைத்து தரப்பிலும் கேள்வி எழுந்த நிலையில் BCCI முன்னாள் செயலாளர் சஞ்சய் ஜக்டேல் டெஸ்ட் அணியின் துணை கேப்டன் KL ராகுலை பரிந்துரை செய்துள்ளார்.

தமிழக பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – பள்ளிக்கல்வி இயக்குனரின் முக்கிய அறிவுறுத்தல்!

கடந்த ஜனவரி 3 ஆம் தேதி நடைபெற்ற இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக விராட் கோஹ்லி அணியில் இடம்பெறவில்லை. இதனால் KL ராகுல் அணியை வழிநடத்தினார். இப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. மேலும் IPL தொடரில் பஞ்சாப் அணியை KL ராகுல் வழிநடத்தினார். பஞ்சாப் அணி ஒரு முறை கூட காலிறுதி சுற்றுக்கு முன்னேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் KL ராகுல் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்க வாய்ப்பு குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!