1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 23 பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை அறிவிப்பு!

0
1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 23 பள்ளிகள் திறப்பு - கல்வித்துறை அறிவிப்பு!1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 23 பள்ளிகள் திறப்பு - கல்வித்துறை அறிவிப்பு!
1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 23 பள்ளிகள் திறப்பு - கல்வித்துறை அறிவிப்பு!
1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 23 பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை அறிவிப்பு!

முதல்வர் ரங்கசாமியின் அறிவுரைப்படி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பதை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வந்தது. மேலும் கடந்த ஆண்டுகளில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எதுவும் நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாத இறுதியில் இருந்து கொரோனா பரவல் குறைந்துள்ள வந்ததால், மீண்டும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. மேலும் நடப்பு ஆண்டு கட்டாயமாக அனைத்து மாணவர்களுக்கும் ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

TN Job “FB  Group” Join Now

இதன் அடிப்படையில் தேர்வுகள் நடைபெற்று கோடைவிடுமுறைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரியில், காமராஜர் கல்வித்துறை வளாகத்தில் அமைச்சர் நமச்சிவாயம் கல்வியாண்டு நாட்காட்டியை வெளியிட்டார். இந்த நாட்காட்டியில் பள்ளிகள் செயல்படும் நாள், விடுமுறை நாட்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு கடந்த 5ம் தேதி தொடங்கிய பொதுத்தேர்வுகள் இன்று 31ம் தேதியுடன் முடிவடைகிறது. மேலும் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் 1ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.

அரசு ஊழியர்களின் கவனத்திற்கு – பழைய மற்றும் புதிய ஓய்வூதிய திட்டத்தின் நன்மைகள்!

இதையடுத்து முதலமைச்சர் ரங்கசாமியின் அறிவுறுத்தலின்படி 2022-23ம் கல்வியாண்டுக்கு புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் ஒன்று முதல் 10, 12ம் வகுப்புகளுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் 23ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 17ம் தேதி வெளியிடப்படும் என குறிப்பிட்ட அவர், அன்று முதல் அரசு பள்ளிகளில் 11ம் வகுப்பு சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கப்படும். இருப்பினும் வகுப்பு தொடங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். கோடை விடுமுறை முடிந்து, வரும் ஜூன் 23ம் தேதி பள்ளி திறக்கும் நாளிலேயே மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடை தொகை வழங்கப்படும். அன்றைய தினமே மாணவர் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here