JioPhone Next ஸ்மார்ட்போன் விற்பனை இன்று முதல் தொடக்கம் – ஆன்லைனில் புக் செய்வது எப்படி?

0
JioPhone Next ஸ்மார்ட்போன் விற்பனை இன்று முதல் தொடக்கம் - ஆன்லைனில் புக் செய்வது எப்படி?
JioPhone Next ஸ்மார்ட்போன் விற்பனை இன்று முதல் தொடக்கம் - ஆன்லைனில் புக் செய்வது எப்படி?
JioPhone Next ஸ்மார்ட்போன் விற்பனை இன்று முதல் தொடக்கம் – ஆன்லைனில் புக் செய்வது எப்படி?

முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ புதிதாக ஜியோ போன் நெக்ஸ்ட் என்னும் மலிவு விலை போனை விற்பனை செய்ய உள்ளது. இந்த மொபைல் போனை EMI மூலம் பெறுவது குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

JioPhone Next:

முன்னணி தொலை தொடர்பு நிறுவனமாக இயங்கி வரும் ஜியோ தற்போது புதிய ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்துகிறது. ஜியோ நிறுவனத்தின் வருகையால் இன்டர்நெட் பயன்படுத்தும் அளவு அதிகமாகியுள்ளது. அதனை தொடர்ந்து ஜியோ நிறுவனம் போன் ஒன்றை அறிமுகம் செய்தது. தற்போது இந்திய மொபைல் போன் மற்றும் மொபைல் நெட்வொர்க் சந்தையில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை உருவாக்கி வருகிறது ஜியோ. அதனை தொடர்ந்து ஜியோ போன் நெக்ஸ்ட் என மலிவு விலையில் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்கிறது இந்நிறுவனம்.

கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 43% பேருக்கு வேலை – ‘நாக்குரி ஜாப்ஸ்பீக்’ நிறுவனம் அறிக்கை!

இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.6499க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பயனர்களுக்கு 4ஜி இணைப்புடன் மலிவு விலையில் ஸ்மார்ட்போன் வழங்க இந்த மாடல் கண்டறியப்பட்டது. இந்த மொபைல் போனை வாங்க ஜியோவின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று அதில் முழு பெயர் மற்றும் மொபைல் எங்களை பதிவிட வேண்டும். அதனை தொடர்ந்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள் என்பதை கிளிக் செய்த பின் மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்படும். அதன்மூலம் மொபைல் போன் பெற பதிவு செய்துகொள்ள முடியும்.

HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு – Amazon Web Services வணிகத்தை மேம்படுத்தும் இலக்கு!

அதேபோல் பயனர்கள் WhatsApp வழியாகவும் ஜியோபோன் நெக்ஸ்ட் வாங்க பதிவு செய்ய முடியும். WhatsApp மூலம் 7018270182 என்ற எண்ணிற்கு Hi என்று அனுப்ப வேண்டும். அதனை தொடர்ந்து இருப்பிடத்தை பதிவு செய்ய வேண்டும் என கேட்கப்படும். அதன் பின் அருகிலுள்ள கடைக்குச் சென்று JioPhone Next ஐ பெறுவதற்கான அறிவிப்பு வழங்கப்படும். இவ்வாறு பெறப்படும் மொபைல் போனானது குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இலவச டெலிவரி செய்யப்படும்.

இந்த மொபைல் போனின் திட்டங்கள்:

ஆல்வேஸ் ஆன் பிளான்:

இந்த திட்டத்திற்கு 24 மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ.300 அல்லது 18 மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ.350 செலுத்த வேண்டும். அதனுடன் பயனர்களுக்கு 5GB டேட்டா மற்றும் 100 நிமிட அழைப்பு நன்மைகளும் வழங்கப்படுகிறது.

லார்ஜ் பிளான்:

இந்த திட்டத்திற்கு 24 மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ.450 அல்லது 18 மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ.500 செலுத்த வேண்டும். அதனுடன் பயனர்களுக்கு தினமும் 1.5GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங் நன்மைகளும் வழங்கப்படுகிறது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? சங்கத்தினர் கோரிக்கை!

எக்ஸ்எல் பிளான்:

இந்த திட்டத்திற்கு 24 மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ.500 அல்லது 18 மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ.550 செலுத்த வேண்டும். அதனுடன் பயனர்களுக்கு தினமும் 2GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங் நன்மைகளும் வழங்கப்படுகிறது.

எக்ஸ் எக்ஸ் எல் பிளான்:

இந்த திட்டத்திற்கு 24 மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ.550 அல்லது 18 மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ.600 செலுத்த வேண்டும். அதனுடன் பயனர்களுக்கு தினமும் 2.5 GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங் நன்மைகளும் வழங்கப்படுகிறது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து EMI திட்டங்களைப் பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் செயலாக்கக் கட்டணமாக ரூ.501 செலுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!