JEE Advanced 2023 தேர்வின் முக்கிய விவரங்கள் வெளியீடு – தேர்வர்கள் கவனத்திற்கு!

0
JEE Advanced 2023 தேர்வின் முக்கிய விவரங்கள் வெளியீடு - தேர்வர்கள் கவனத்திற்கு!
JEE Advanced 2023 தேர்வின் முக்கிய விவரங்கள் வெளியீடு - தேர்வர்கள் கவனத்திற்கு!
JEE Advanced 2023 தேர்வின் முக்கிய விவரங்கள் வெளியீடு – தேர்வர்கள் கவனத்திற்கு!

JEE Advanced 2023 தேர்வின் தேதிகள், கட்டண விவரம், விண்ணப்ப கட்டணம் போன்ற முக்கிய விவரங்களை ஐஐடி வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க விருப்பமுள்ள மாணவர்கள் தேர்வு குறித்த தகவல்களை இப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

JEE (ADVANCED) 2023:

ஐஐடி கவுகாத்தி வரும் ஆண்டிற்கான JEE Advanced தேர்வு குறித்த விவரங்கள் அனைத்தையும் அதிகாரபூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. மத்திய நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு JEE தான் நுழைவு தேர்வாக உள்ளது. தற்போதைய அறிவிப்பின் அப்படி, JEE 2023 ADV தேர்வு ஜூன் 4ம் தேதி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்விற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவுகள் ஏப்ரல் 30 ஆம் தேதி காலை 10மணி முதல் மே 4ம் தேதி மாலை 5 மணி வரை அனுமதிக்கப்படும்.

Exams Daily Mobile App Download

பெண் தேர்வர்கள், SC, ST மற்றும் PwD தேர்வர்களும் ரூ. 1450 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், மற்ற அணைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.2900 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து பதிவு செய்யும் நபர்களுக்கு தனிப்பட்ட கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் மே 5 மாலை 5 மணி வரை பணத்தை செலுத்திக் கொள்ளலாம்.

வெகு நாட்கள் கழித்து ஆறுதல் அளித்த தங்கம் விலை.. ரூ.464 குறைவு – நகை பிரியர்கள் உற்சாகம்!

Follow our Instagram for more Latest Updates

JEE (ADVANCED ) 2023 தேர்வில் 2 தாள்கள் உள்ளது. முதல் தாள் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையும், 2ம் தாள் பிற்பகல் 2:30 முதல் மாலை 5:30 மணி வரையும் நடைபெறும், தேர்வர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும், அதிக விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!