TCS நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் – வாரத்தில் 3 நாட்கள் மட்டும் வேலை! சம்பளம் 8% வரை அதிகரிப்பு!

0
TCS நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் - வாரத்தில் 3 நாட்கள் மட்டும் வேலை! சம்பளம் 8% வரை அதிகரிப்பு!
TCS நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் - வாரத்தில் 3 நாட்கள் மட்டும் வேலை! சம்பளம் 8% வரை அதிகரிப்பு!
TCS நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் – வாரத்தில் 3 நாட்கள் மட்டும் வேலை! சம்பளம் 8% வரை அதிகரிப்பு!

இந்தியாவில் அதிக லாபம் ஈட்டும் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) இந்த மாதம் முதல் சுமார் 50,000 ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கப் போவதாக அறிவித்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காண்போம்.

சம்பள உயர்வு

நாடு முழுவதும் கொரோனா பேரலைத்தொற்று பாதிப்புகள் நிலையற்ற தன்மையுடன் இருக்கும் வேலையில் முன்னணி IT நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை மீண்டுமாக அலுவலகத்திற்கு அழைக்க தயக்கம் காட்டி வருகிறது. ஆனால் இந்தியாவின் முதன்மை தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) ஏற்கனவே அறிவித்தபடி, இந்த மாதம் முதல் சுமார் 50,000 ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கப் போவதாக தகவல் அளித்துள்ளது. அந்த வகையில் தற்போது உயர்மட்ட ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும், அதுவும் ஒரு வாரத்திற்கு 3 நாட்களுக்கு மட்டும் அலுவலக வேலை நாளாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த ஊழியர்கள் மீதமுள்ள 2 நாட்கள், அவர்கள் வழக்கமாக செய்வது போல் வீட்டிலிருந்து வேலை செய்யலாம். இப்போது 6 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்ட டிசிஎஸ் நிறுவனம், இந்த மாதம் முதல் மூத்த நிலையில் இருக்கும் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கப்போவதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் சுமார் 50000 ஊழியர்கள் வாரத்தில் 3 நாட்கள் அலுவலகத்திலிருந்து வேலை செய்ய அழைக்கப்படுவார்கள். இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும் என்று TCS நிறுவனத்தின் CEO & MD, ராஜேஷ் கோபிநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரங்கள் இதோ!

இந்த ஆண்டின் நடுப்பகுதியில், அதாவது ஜூன்-ஜூலைக்குள் பெரும்பாலான ஊழியர்கள் (80 சதவீதம்) அலுவலகத்திலிருந்து வேலை செய்யத் தொடங்குவார்கள் என்று அவர் நம்புகிறார். மேலும் 2022-23ம் நிதியாண்டில், TCS நிறுவனத்தின் ஊழியர்களின் சம்பளம் 6 முதல் 8 சதவீதம் வரை அதிகரிக்கும் என்றும் கோபிநாதன் உறுதிப்படுத்தி உள்ளார். கடந்த நிதியாண்டிலும் சம்பளத்தில் இதே போல உயர்வு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் டிசிஎஸ், 2021-22 நிதியாண்டின் கடைசி காலாண்டில் 35,209 புதிய ஊழியர்களை நியமித்ததன் மூலம் இந்நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 5,92,195 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!