மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – டபுள் ஜாக்பாட் அறிவிப்பு விரைவில் அமல்!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - டபுள் ஜாக்பாட் அறிவிப்பு விரைவில் அமல்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - டபுள் ஜாக்பாட் அறிவிப்பு விரைவில் அமல்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – டபுள் ஜாக்பாட் அறிவிப்பு விரைவில் அமல்!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, அகவிலைப்படி உயர்வு மற்றும் 18 மாத டிஏ அரியர் தொகை குறித்து இந்த மாத இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளன. இது ஊழியர்களின் சம்பளத்தில் பெரிய அதிகரிப்பை ஏற்படுத்தும். இதனால் சுமார் 1 கோடியே 68 லட்சம் ஊழியர்கள் மற்றும் 48 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.

ஜாக்பாட் அறிவிப்பு:

மத்திய அரசு ஊழியர்களுக்கு DA உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிலும், மோடி அரசாங்கம் இந்த மாத இறுதிக்குள் அரசு ஊழியர்களுக்கு 2 பெரிய பரிசுகளை வழங்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வகையில் வெகு நாட்களாக எதிர்பார்த்து வந்த ஊழியர்களின் அகவிலைப்படி 3 % அதிகரிக்க உள்ளது. இதன் அடிப்படையில் மொத்த DA 31% இல் இருந்து 34% ஆக உயரும். இதை அடுத்து 18 மாத DA நிலுவை தொகை குறித்தும் இந்த மாத இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது. இது ஊழியர்களின் சம்பளத்தில் பெரிய அதிகரிப்பை ஏற்படுத்தும். இருப்பினும் இது குறித்து அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC உதவி இயக்குனர் காலிப்பணியிடங்கள் 2022 – விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

தற்போது, செப்டம்பர் 2021 வரை AICPI தரவுகளின்படி அகவிலைப்படி 32.81% ஆக உள்ளது. டிசம்பர் மாதத்திற்கான புள்ளிவிவரங்கள் இன்னும் வரவில்லை. டிசம்பர் 2021-ன் CPI (IW) எண்ணிக்கை 125 ஆக இருந்தால், அகவிலைப்படி 3% அதிகரிக்கப்படும். இது ஜனவரி 2022 முதல் வழங்கப்படும். இதை அடுத்து ஜனவரி முதல் ஜூலை வரையிலான 18 மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவை தொகை மொத்தமாக ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில், நிலுவையில் உள்ள DA ஒரே முறையில் வழங்கப்பட வேண்டும் என தேசிய கூட்டு ஆலோசனை கவுன்சில் செயலர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் நிலுவையில் உள்ள DA குறித்து முடிவு எடுக்கப்பட்டால், ஜனவரி முதல் ஜூன் வரையிலான சம்பளம் சுமார் 2 லட்சம் வரை வழங்கப்படும். டிஏ 33% ஆகவும், அடிப்படை சம்பளம் ரூ 18,000 ஆகவும் இருந்தால், ஊழியர்களுக்கான டிஏ ரூ 5940 ஆகவும், டிஏ-ஹெச்ஆர்ஏ-வைச் சேர்த்தால் சம்பளம் ரூ 31,136 ஆகவும் இருக்கும். மேலும் டிஏ 34 சதவீதமாக இருந்தால், ரூ.18,000 அடிப்படை சம்பளம் உள்ள ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு ரூ.6,480 ஆகவும், ரூ.56,000 சம்பளம் கொண்டவர்களுக்கு அதிகரிப்பு ஆண்டுக்கு ரூ.20,484 ஆகவும் இருக்கும். இந்த வகையில் ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ. 18,000 என்றால், அவர் 3 மாதங்களுக்கு (4,320+3,240+4,320) ரூ.11,880க்கான DA நிலுவைத் தொகையை பெறலாம். அதிகபட்சம் ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.56,000 என்றால் அவருக்கு 3 மாத டிஏ பாக்கி (13,656 + 10,242 + 13,656) ரூ.37,554 கிடைக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!