LPG சமையல் சிலிண்டர் மானியம் பெற இனி ‘இது’ கட்டாயம் – மத்திய அரசு தகவல்!

0
LPG சமையல் சிலிண்டர் மானியம் பெற இனி 'இது' கட்டாயம் - மத்திய அரசு தகவல்!
LPG சமையல் சிலிண்டர் மானியம் பெற இனி 'இது' கட்டாயம் - மத்திய அரசு தகவல்!
LPG சமையல் சிலிண்டர் மானியம் பெற இனி ‘இது’ கட்டாயம் – மத்திய அரசு தகவல்!

ஏழை எளிய மக்கள் முதல் பணக்கார வர்க்கம் வரை மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக சமையல் எரிவாயு சிலிண்டர் இருக்கிறது. மக்கள் சிலிண்டர் வாங்கும் போது அதற்கான மானியம் பெற முக்கியமான ஒன்று குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.

சிலிண்டர் மானியம்:

மக்களின் தேவை அதிகமாக அதிகமாக சிலிண்டர் விலையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1000யை நெருங்கி இருக்கிறது. ஆனாலும் வேறு வழியில்லாமல் மக்கள் சிலிண்டர் வாங்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. மத்திய அரசு மக்களின் நிதிச்சுமையை குறைக்க சிலிண்டர் வாங்கும் தொகையில் இருந்து குறிப்பிட்ட தொகையை மத்திய அரசிடம் இருந்து மக்களுக்கு மானியமாக வழங்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

இந்த மானிய தொகை வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. ஆனால் 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் வந்ததை அடுத்து இந்த மானிய தொகை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின் பரவல் குறைந்து இயல்பு வாழ்கை தொடங்கியதும் மீண்டும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இப்போது பலருக்கு இந்த மானியம் தொகை வழங்கப்படவில்லை என புகார் வருகிறது. இந்நிலையில் இந்த புகார்களுக்கு விளக்கம் கொடுக்கும் வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

SBI வங்கி வாடிக்கையாளர்கள் தொலைபேசியில் சேவைகளை பெறுவது எப்படி? முழு விபரம் இதோ!

அதில் சமையல் சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்கப்படும் என தெரிவித்தார். ஆனால் இதற்கு சில விதிமுறைகள் உண்டு அதாவது, உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகள் மட்டுமே மத்திய அரசு தெரிவித்துள்ள மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மானியம் பெற ஆதார் கார்டு வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அதேபோல அந்த வங்கி கணக்கை சிலிண்டர் கணக்குடன் இணைத்திருக்க வேண்டும். உங்களது சிலிண்டர் நிறுவனத்தின் இணையதளம் மூலமாக இதனை எளிமையாக செய்யலாம். அல்லது SMS மூலமாகவும் சிலிண்டர் இணைப்புடன் பதிவு செய்யப்பட்ட மொபல் நம்பரிலிருந்து சிலிண்டர் விநியோகஸ்தருக்கு SMS அனுப்பி ஆதாரை இணைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!