அனைத்து சீரியலிலும் ஒரே காட்சி தானா? விஜய் டிவியை கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!

0
அனைத்து சீரியலிலும் ஒரே காட்சி தானா? விஜய் டிவியை கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!
அனைத்து சீரியலிலும் ஒரே காட்சி தானா? விஜய் டிவியை கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!
அனைத்து சீரியலிலும் ஒரே காட்சி தானா? விஜய் டிவியை கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்திலுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான காட்சிகள் தான் காட்டப்பட்டு வருவதால் நெட்டிசன்கள் பலரும் விஜய் தொலைக்காட்சி சீரியல்களை கலாய்த்து வருகின்றனர்.

விஜய் டிவி:

விஜய் தொலைக்காட்சி சீரியல்களை தான் அதிகமாக மக்கள் விரும்பி பார்த்து வருகின்றனர். ஆனாலும், இந்த சீரியல்களை வைத்து தான் அதிகமாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அதாவது ஒரு வாரத்தில் முடிக்க வேண்டிய காட்சிகளை பல வருடங்களாக ஒட்டிக் கொண்டிருக்கின்றனர். அதிலும் பாரதி கண்ணம்மா சீரியலை சொல்லவே தேவையில்லை. ஒரே ஒரு DNA டெஸ்ட் எடுத்துவிட்டால் சீரியலிலே முடிந்துவிடும். ஆனால், DNA டெஸ்ட்டை மட்டும் எடுக்காமல் மக்களை ஏமாற்றி எபிசோடுகளை இழுத்து கொண்டிருக்குகின்றனர். பலரும் இந்த சீரியல்களை கலாய்த்து கொண்டிருந்தாலும் அந்த தொடர்களையும் பார்க்க மிக பெரிய கூட்டமே இருக்கிறது.

கோபியை வீட்டிற்கு விடாமல் செய்த ராதிகா, அம்மாவை காப்பாற்ற ஆதாரம் திரட்டும் எழில் – “பாக்கியலட்சுமி” சீரியலில் இன்றைய எபிசோட்!

பாரதி கண்ணம்மா தொடர் மட்டுமல்லாமல் பாக்கியலட்சுமி தொடரும் இதே போல தான் நெட்டிசன்களால் அதிகமாக கலாய்க்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு பெண் இவ்வளவு அப்பாவியாகவா இருக்க முடியும். ரசிகர்களை சீரியல் இயக்குனர்கள் முட்டாளாக்கி கொண்டிருக்கின்றனர் என ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர். இது மட்டுமல்லாமல் ஒரு சீரியலில் வரும் காட்சிகள் பல சீரியல்களில் காட்டப்படுகிறது. தியா ஆர் பாடி ஹம் என்கிற ஹிந்தி சீரியலின் டப்பிங் தான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட என் கணவன் என் தோழன் என்கிற தொடர்.

பணத்தை சீக்கரம் ஏற்பாடு செய்ய சொல்லும் மூர்த்தி, முல்லையை நினைத்து வருத்தப்படும் கதிர் – இன்றைய எபிசோட்!

இதே தொடரை மீண்டும் ராஜா ராணி சீசன் 2 ஆக ஒளிபரப்பி வருகின்றனர். ஏன் ஒரே கதையை வேறு வேறு சீரியல் பெயரில் ஒளிபரப்ப வேண்டும் என ரசிகர்கள் கடுப்பாகினர். பாரதி கண்ணம்மா சீரியலில் ஏற்கனவே சீலிங்கில் சுற்றிக்கொண்டிருக்கும் ஃபேன் கீழே விழுவது போன்ற காட்சிகள் இரண்டு முறை இடம் பெற்றிருந்தது. தற்போது ராஜா ராணி சீரியலிலும் இதே போன்ற காட்சிகள் இடம் பெற்றதால் ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர். சீரியலில் கதையை வேறுவிதமாக கொண்டு சொல்ல முடியாவிட்டால் சீரியலை முடிக்க வேண்டியது தானே, ஏன் ஒளிபரப்பான காட்சிகளை மட்டுமே வைத்து சீரியலை ஓட்ட வேண்டும் என ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here