கோபியை வீட்டிற்கு விடாமல் செய்த ராதிகா, அம்மாவை காப்பாற்ற ஆதாரம் திரட்டும் எழில் – “பாக்கியலட்சுமி” சீரியலில் இன்றைய எபிசோட்!

0
கோபியை வீட்டிற்கு விடாமல் செய்த ராதிகா, அம்மாவை காப்பாற்ற ஆதாரம் திரட்டும் எழில் -
கோபியை வீட்டிற்கு விடாமல் செய்த ராதிகா, அம்மாவை காப்பாற்ற ஆதாரம் திரட்டும் எழில் - "பாக்கியலட்சுமி" சீரியலில் இன்றைய எபிசோட்!
கோபியை வீட்டிற்கு விடாமல் செய்த ராதிகா, அம்மாவை காப்பாற்ற ஆதாரம் திரட்டும் எழில் – “பாக்கியலட்சுமி” சீரியலில் இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி வீட்டிற்கு கிளம்ப ஆனால் ராதிகா இந்த நேரத்தில் என்னுடன் இருக்க வேண்டும் என சொல்கிறார். பின் எழில் பாக்கியாவை காப்பாற்ற தேவையான ஆதாரங்களை திரட்டுகிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபிக்கு ஈஸ்வரி போன் செய்து கொண்டே இருக்க ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. ராதிகாவிடம் சொல்லிவிட்டு கோபி கிளம்ப இந்த மாதிரி நேரத்தில் எங்களுடன் நீங்க இருக்க வேண்டும் என ராதிகா சொல்கிறார். பின் மயூரா எங்களுடன் இருங்க அங்கிள் என சொல்ல கோபி சரி என சொல்கிறார். பின் வீட்டில் அனைவரும் பாக்கியாவை நினைத்து வருத்தமாக இருக்கின்றனர். அப்போது எழில் வர அம்மாவை இன்று இரவு வெளியே அனுப்ப முடியாது என சொன்னதாக சொல்கிறார். நீங்க எல்லாரும் வருத்தப்படாமல் இருக்க வேண்டும் என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

செல்வி அக்காவை இருக்க சொல்ல நான் எங்கையும் போகவில்லை என சொல்கிறார். பின் மீதமுள்ள சாப்பாட்டை செல்வி எடுத்துக் கொண்டு வெளியே கொட்ட வருகிறார். அப்போது பார்த்த எழில் இது என்னது என கேட்கிறார். அப்போது அக்கா சமைத்த சாப்பாடு தான் என சொல்ல எழில் இதை சாப்பிட்டு தான குழந்தைகளுக்கு முடியாமல் போனது அப்பறம் எப்படி இதை நாய்க்கு போடுவீங்க என கேட்கிறார். இதை தான் நாங்க சாப்பிட்டோம் எங்களுக்கு ஒன்றும் ஆகவில்லை என சொல்ல எழில் உண்மையாகவே நீங்க சாப்பிட்டீங்களா என கேட்கிறார்.

ஆமாம் ஆன்டி எல்லாருக்கும் சேர்த்து தான் சமைத்தார் என சொல்ல எழில் சாப்பாட்டை பரிசோதனை செய்ய வாங்கி கொள்கிறார். பின் இனியா கோபிக்கு போன் செய்ய கோபி போனை எடுக்கவில்லை. ராதிகாவிடம் முக்கியமான போன் என சொல்லி போனை எடுக்க அப்போது இனியா ஈஸ்வரியிடம் அப்பா தான் போன் செய்வதாக சொல்கிறார். இனியா போனை எடுத்து அம்மாவை போலீஸ் கைது செய்துவிட்டதாக சொல்கிறார். பின் ஈஸ்வரி பேச நான் முக்கியமான மீட்டிங்கில் இருந்தேன் என கோபி சொல்கிறார். பின் கோபி வீட்டிற்கு கிளம்ப வேண்டும் என ராதிகாவிடம் சொல்ல ஆனால் ராதிகா விடுவதாக இல்லை.

பணத்தை சீக்கரம் ஏற்பாடு செய்ய சொல்லும் மூர்த்தி, முல்லையை நினைத்து வருத்தப்படும் கதிர் – இன்றைய எபிசோட்!

அதனால் கோபிக்கு என்ன செய்வது என தெரியவில்லை. ராதிகா என்னுடன் இருங்கள் என சொல்ல கோபிக்கு என்ன செய்வது என தெரியவில்லை. பின் எழில் போலீஸ் ஸ்டேஷனுக்கு வர அங்கே தன்னுடைய அம்மா சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டு எதுவும் ஆகவில்லை என சொல்கிறார். உண்மையை நிரூபிக்க அந்த சாப்பாட்டை எழில் சாப்பிட்டு காட்டுகிறார். ஆனாலும் போலீசார் எழிலை வெளியே போக சொல்கிறார். அதனால் பாக்கியா எழிலை பார்த்து வருத்தப்படுகிறார். பின் நேராக எழில் அந்த ஆசிரமத்திற்கு சென்று சொல்ல ஆனால் அவர்கள் நம்பாமல் எழிலை சத்தம் போடுகின்றனர். பின் எழில் அவர்களிடம் பாக்கியா கொடுத்த சாப்பாட்டை வாங்கி கொண்டு செல்கிறார். பாக்கியாவை நினைத்து ஈஸ்வரி ராமமூர்த்தி எல்லாரும் வருத்தமாக இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here