IPL 2022 CSK vs LSG: Dream11 & போட்டி கணிப்பு – உத்தேச XI அணி!

0
IPL 2022 CSK vs LSG: Dream11 & போட்டி கணிப்பு - உத்தேச XI அணி!
IPL 2022 CSK vs LSG: Dream11 & போட்டி கணிப்பு - உத்தேச XI அணி!
IPL 2022 CSK vs LSG: Dream11 & போட்டி கணிப்பு – உத்தேச XI அணி!

இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) இரண்டாவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை (மார்ச்.31) பிரபோர்ன் மைதானத்தில் வைத்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்திற்கான ட்ரீம் 11 கணிப்பு, உத்தேச XI அணி குறித்த விவரங்களை இப்போது காணலாம்.

போட்டி கணிப்பு

இந்த ஆண்டிற்கான IPL போட்டிகள் துவங்கி கடந்த ஒரு சில வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 5 போட்டிகள் முடிவு பெற்றுள்ளது. இத்துடன் நாளை நடக்க இருக்கும் (மார்ச்.31) ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் தங்களது தொடக்க ஆட்டங்களில் தோல்விகளை சந்தித்துள்ள நிலையில், இந்த போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்ற முனைப்பில் உள்ளன.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சிஎஸ்கே மற்றும் கேஎல் ராகுலின் எல்எஸ்ஜி ஆகிய இரு அணிகளுக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனை டாப்-ஆர்டர் பேட்டர்களின் செயல்திறன் தான். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியை பொருத்தளவு ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவோன் கான்வே ஆகியோர் பவர்பிளேயில் சென்னைக்கு சிறப்பான தொடக்கத்தை வழங்க தவறினார்கள். அதே நேரத்தில் ராபின் உத்தப்பா, கேப்டன் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை தரவில்லை.

ஆனால், முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் அரைசதம் மற்றும் டெத் ஓவர்களில் அவரது பினிஷிங் டச்கள் ஆகியவை CSK அணி நல்ல ஸ்கோரை பெற உதவியது. இப்போது மொயீன் அலி வேறு CSK அணியில் இணைந்திருப்பதால் டாப்-ஆர்டரில் சிறப்பான ஆட்டம் வெளிப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதுவே LSG அணியை பொறுத்தமட்டில், தீபக் ஹூடாவின் ஆல்-ரவுண்ட் ஷோ மற்றும் ஆயுஷ் படோனியின் அரைசதம் மறக்க முடியாத ஆட்டமாக இருந்தது. குறிப்பாக, சிஎஸ்கே அணியின் சற்று அனுபவமற்ற பந்துவீச்சு தாக்குதலுக்கு எதிராக மிடில்-ஆர்டர் லக்னோ அணிக்காக சிறப்பாக செயல்பட்டது. இருப்பினும் இந்த போட்டியில் தோல்வியுற்றது.

Dream11 பேண்டஸி டிப்ஸ் இதோ:

பிளேயிங் XI அணிகள்:

  • CSK அணி: ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயீன் அலி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா (C), எம்எஸ் தோனி (WK), ஷிவம் துபே, மிட்செல் சான்ட்னர், டுவைன் பிராவோ, ஆடம் மில்னே, துஷார் தேஷ்பாண்டே
  • LSG: கே.எல். ராகுல் (C), குயின்டன் டி காக் (WK), மணீஷ் பாண்டே, எவின் லூயிஸ், க்ருனால் பாண்டியா, தீபக் ஹூடா, ஆயுஷ் படோனி, அவேஷ் கான், மொஹ்சின் கான், ரவி பிஷ்னோய், துஷ்மந்த சமீரா

Dream11 பேண்டஸி தேர்வுகள்: குழு 1:

  • பேட்டர்ஸ்: ராபின் உத்தப்பா, கேஎல் ராகுல், குயின்டன் டி காக், மொயீன் அலி
  • பந்துவீச்சாளர்கள்: துஷ்மந்த சமீரா, ரவி பிஷ்னோய், டுவைன் பிராவோ, க்ருனால் பாண்டியா
  • ஆல்-ரவுண்டர்கள்: தீபக் ஹூடா, ரவீந்திர ஜடேஜா
  • விக்கெட் கீப்பர்: எம்எஸ் தோனி
  • கேப்டன்: கேஎல் ராகுல்
  • துணை கேப்டன்: தீபக் ஹூடா
  • ட்ரீம் 11 பேண்டஸி தேர்வுகள்: குழு 2:
  • பேட்டர்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், கேஎல் ராகுல், அம்பதி ராயுடு, எவின் லூயிஸ்
  • பந்துவீச்சாளர்கள்: டுவைன் பிராவோ, அவேஷ் கான், ரவீந்திர ஜடேஜா, ரவி பிஷ்னோய், க்ருனால் பாண்டியா
  • ஆல்-ரவுண்டர்: மொயின் அலி
  • விக்கெட் கீப்பர்: குயின்டன் டி காக்
  • கேப்டன்: குயின்டன் டி காக்
  • துணை கேப்டன்: டுவைன் பிராவோ
  • ட்ரீம் 11 பேண்டஸி தேர்வுகள்: குழு 3
  • பேட்டர்ஸ்: கேஎல் ராகுல், மணீஷ் பாண்டே, அம்பதி ராயுடு
  • பந்துவீச்சாளர்கள்: டுவைன் பிராவோ, ரவி பிஷ்னோய், அவேஷ் கான்
  • ஆல்ரவுண்டர்கள்: ரவீந்திர ஜடேஜா, தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, ஷிவம் துபே
  • விக்கெட் கீப்பர்: குயின்டன் டி காக்
  • கேப்டன்: ரவீந்திர ஜடேஜா
  • துணை கேப்டன்: தீபக் ஹூடா

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!