IPL 2021 : MI vs KKR இன்று பலப்பரீட்சை – உத்தேச 11 அணி & பிட்ச் ரிப்போர்ட்!

0
IPL 2021 MI vs KKR இன்று பலப்பரீட்சை - உத்தேச 11 அணி & பிட்ச் ரிப்போர்ட்!
IPL 2021 MI vs KKR இன்று பலப்பரீட்சை - உத்தேச 11 அணி & பிட்ச் ரிப்போர்ட்!
IPL 2021 : MI vs KKR இன்று பலப்பரீட்சை – உத்தேச 11 அணி & பிட்ச் ரிப்போர்ட்!

ஐபிஎல் போட்டியில் இன்று நடைபெற இருக்கும் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் கோதாவில் மல்லுக்கட்ட உள்ளன. அதற்கான பிட்ச் ரிப்போர்ட், உத்தேச அணி விவரம் மற்றும் வெற்றி வாய்ப்பு குறித்த அலசலை இங்கு காணலாம்.

MI vs KKR இன்று பலப்பரீட்சை:

ஐபிஎல் இன்று நடக்க உள்ள 34வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சையில் இறங்க உள்ளன. பலம் வாய்ந்த இரண்டு அணிகள் மோத உள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளனர்.

IPL 2021, DC vs SRH LIVE Updates: 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி அணி!

பலம் வாய்ந்த நடப்பு சாம்பியன் மும்பை அணி இந்த சீசனில் தடுமாறி வருகிறது. இதுவரை 8 ஆட்டங்களில் 4 வெற்றி, 4 தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. கடந்த போட்டியில் சென்னை அணியிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கேப்டன் ரோஹித் சர்மா, ஆல் ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா போன்றோர் இல்லாதது மிகப்பெரிய இழப்பாக கருதப்பட்டது. பவுலிங்கை பொறுத்தவரை பவுல்ட், பும்ராஹ், ஆடம் மில்னே, ராகுல் சாகர் ஆகியோர் அசத்தி வருகின்றனர். ஆனால் பேட்டிங் ஆர்டர் மோசமான பார்மில் உள்ளது. சென்னை அணிக்கு ஏதிராக 156 ரன்களை சேஸ் செய்ய இயலாமல் 136 ரன்கள் தான் எடுத்தது.

எனவே தோல்வியில் இருந்து மீண்டு வெற்றி பாதைக்கு திரும்ப முயற்சிக்கும் இன்றைய போட்டியில் ரோஹித் களமிறங்குவாரா? என்பதும் சந்தேகமாகவே உள்ளது. அதே போல் கொல்கத்தா அணி கடந்த போட்டியில் பெங்களூர் அணியை 92 ரன்களில் சுருட்டி அசத்தியது. சூழல் ஜாலம் காட்டிய வருண் சக்கரவர்த்தி, வேகத்தில் மிரட்டிய ரசல் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். அதேபோல் பேட்டிங்கிலும் வெங்கடேஷ், சுப்மன் கில், ரசல், மோர்கன் ஆகியோர் பார்மில் உள்ளனர். 6வது இடத்தல் இருக்கும் கொல்கத்தா அணி இன்றைய போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி பட்டியலில் முன்னேற முனைப்பு காட்டும்.

இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் விளையாட உள்ள போட்டிகள் – BCCI அட்டவணை வெளியீடு!

பிட்ச் ரிப்போர்ட்:

இந்த போட்டி ஷார்ஜா ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானம் பேட்டிங்கிற்கே அதிகம் ஒத்துழைக்கும். இதனால் இன்றைய போட்டியில் வான வேடிக்கைகளை எதிர்பார்க்கலாம். இதுவரை இவ்விரு அணிகள் நேருக்கு நேர் 28 முறை மோதியுள்ளன. அதில் மும்பை அணி 22 முறை வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது. கொல்கத்தா அணி 6 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் மும்பையின் கையே ஓங்கி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணி வீரர்கள் (உத்தேச விவரம்):
  • மும்பை இந்தியன்ஸ் – குயின்டன் டி காக் (wk), இஷான் கிஷன், ரோஹித் சர்மா (C), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, கீரான் பொல்லார்ட், ஆடம் மில்னே, ராகுல் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட்
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, இயோன் மோர்கன், தினேஷ் கார்த்திக் (wk), சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல், லோக்கி பெர்குசன், வருண் சக்கரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!