இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் விளையாட உள்ள போட்டிகள் – BCCI அட்டவணை வெளியீடு!

0
இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் விளையாட உள்ள போட்டிகள் - BCCI அட்டவணை வெளியீடு!
இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் விளையாட உள்ள போட்டிகள் - BCCI அட்டவணை வெளியீடு!
இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் விளையாட உள்ள போட்டிகள் – BCCI அட்டவணை வெளியீடு!

இந்திய கிரிக்கெட் அணி 2021-22 ஆண்டில் சொந்த மண்ணில் விளையாட உள்ள போட்டிகளின் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டு உள்ளது. அதன்படி ஜூன் 2022 இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து டி 20 போட்டிகளுடன் இது முடிவடைகிறது.

இந்திய அணி அட்டவணை:

இந்திய அணி T20 உலக கோப்பை தொடருக்கு பின்னர் உள்ளூரில் விளையாட உள்ள போட்டிகளுக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் செயலர் ஜெய் ஷா அவர்கள் வெளியிட்டு உள்ளார். டி 20 உலகக் கோப்பை இறுதிக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு நவம்பர் 17 முதல் இப்போட்டிகள் தொடங்க உள்ளன. இந்திய அணி நான்கு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் 14 டி 20 போட்டிகளை நடத்த உள்ளது.

சென்னையில் குடிநீர் வரி, கட்டணங்களை செலுத்த செப்.30 வரை கால அவகாசம் – வாரியம் அறிவிப்பு!

நவம்பர் 2021 மற்றும் மார்ச் 2022 இல் நியூசிலாந்து மற்றும் இலங்கை தலா இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று டி 20 போட்டிகளில் கலந்து கொள்ள இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. 2022 பிப்ரவரியில் மேற்கிந்திய தீவுகள் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் பல டி 20 களுக்கு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும். இதற்கு மத்தியில் டிசம்பர்-ஜனவரி மாதங்களில் அனைத்து வடிவிலான தொடருக்காக இந்தியா தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

செப்.25 வரை பள்ளிகளை மூட உத்தரவு – மாநில அரசு அறிவிப்பு!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கான்பூர் மற்றும் மும்பையில் நடைபெற உள்ளன. பெங்களூரு மற்றும் மொஹாலி ஆகிய மைதானங்களில் இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெறும்.

இந்தியா vs நியூசிலாந்து (2021)
  • முதல் டி 20- நவம்பர் 17 ஜெய்ப்பூர்
  • 2 வது டி 20- நவம்பர் 19, ராஞ்சி
  • 3 வது டி 20- நவம்பர் 21, கொல்கத்தா
  • முதல் டெஸ்ட்- நவம்பர் 25-29, கான்பூர்
  • 2 வது டெஸ்ட்- டிசம்பர் 03-07, மும்பை
இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் (2022)
  • முதல் ஒருநாள்- பிப்ரவரி 06, அகமதாபாத்
  • 2 வது ஒருநாள்- பிப்ரவரி 09, ஜெய்ப்பூர்
  • 3 வது ஒருநாள்- பிப்ரவரி 12, கொல்கத்தா
  • முதல் டி 20- பிப்ரவரி 15, கட்டாக்
  • 2 வது டி 20- பிப்ரவரி 18, விசாகப்பட்டினம்
  • 3 வது டி 20- பிப்ரவரி 20, திருவனந்தபுரம்
இந்தியா vs இலங்கை (2022)
  • முதல் டெஸ்ட்- பிப்ரவரி 25-01 மார்ச், பெங்களூரு
  • 2 வது டெஸ்ட்- மார்ச் 05-09, மொஹாலி
  • முதல் டி 20- மார்ச் 13, மொஹாலி
  • 2 வது டி 20- மார்ச் 15, தர்மசாலா
  • 3 வது டி 20- மார்ச் 18, லக்னோ
இந்தியா vs தென்னாப்பிரிக்கா (2022)
  • முதல் டி 20- ஜூன் 09, சென்னை
  • 2 வது டி 20- ஜூன் 12, பெங்களூரு
  • 3 வது டி 20- ஜூன் 14, நாக்பூர்
  • 4 வது டி 20- ஜூன் 15, ராஜ்கோட்
  • 5 வது டி 20- ஜூன் 19, டெல்லி.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!