ரூ.55,000 ஊதியத்தில் வங்கி பணியாளர் தேர்வு வாரிய வேலைவாய்ப்பு – 4135 காலிப்பணியிடங்கள்!

0
ரூ.55,000 ஊதியத்தில் வங்கி பணியாளர் தேர்வு வாரிய வேலைவாய்ப்பு - 4135 காலிப்பணியிடங்கள்!
ரூ.55,000 ஊதியத்தில் வங்கி பணியாளர் தேர்வு வாரிய வேலைவாய்ப்பு - 4135 காலிப்பணியிடங்கள்!
ரூ.55,000 ஊதியத்தில் வங்கி பணியாளர் தேர்வு வாரிய வேலைவாய்ப்பு – 4135 காலிப்பணியிடங்கள்!

இந்தியாவில் உள்ள பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் ப்ரோபேஷனரி அதிகாரி பதவிக்கு தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க, வங்கிப் பணியாளர் தேர்வாணையம் (IBPS) தேவையான அனைத்து விவரங்களையும் வெளியிட்டுள்ளது. இது குறித்த முக்கிய விவரங்களை இந்த பதிவில் காண்போம்.

பொதுத்துறை வங்கி பணி:

வங்கிப் பணியாளர் தேர்வாணையம் மூலம் SBI, RBI, NABARD, SIDBI, LIC & இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மற்றும் IBPS உறுப்பினர்களாக இருக்கும் பிற வங்கிகள் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் தனது சேவையை வழங்கி வருகிறது. 2011 ஆம் ஆண்டில் இந்தியன் வங்கியில் அதிகாரிகள் மற்றும் எழுத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பொதுவான ஆட்சேர்ப்பு செயல்முறையை IBPS தொடங்கியது. இதற்கான IBPS PO தேர்வு இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களிலும் ஆன்லைன் முறையில் மட்டுமே நடத்தப்படுகிறது. தற்போது 4135 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை தனது அதிகாரபூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது.

SSC GD தேர்வர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் தேர்வுகள்! முன்பதிவிற்கு முந்துங்கள்!!

IBPS PO 2021 தேர்வுக்கான விண்ணப்ப பதிவு அக்டோபர் 20 முதல் நவம்பர் 10ம் தேதி வரை அனுமதிக்கப்படுகிறது. மேலும், தொழில்நுட்பப் பிழைகளையும் தவிர்க்க IBPS PO 2021 விண்ணப்பப் படிவத்தை நிரப்ப Internet Explorer 8, Mozilla FireFox 3.0, Google Chrome 3.0 போன்ற இணையதளங்களை பயன்படுத்துமாறு பரிந்துரைத்துள்ளது. ஆன்லைன் விண்ணப்பத்திற்காக கட்டணங்கள் ஒருமுறை செலுத்தப்பட்டால் எந்த கணக்கிலும் திருப்பித் தரப்பட மாட்டாது அல்லது வேறு எந்தத் தேர்வு அல்லது தேர்வுக்காக அவற்றை மாற்ற முடியாது. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IBPS PO Prelims Mock Test – Free Registration

ப்ரோபேஷனரி அதிகாரி பணிகளுக்கு 4135 காலியிடங்கள், 11 பொதுத்துறை வங்கிகளில் உள்ளது. இதற்கான தேர்வுகள் ஆன்லைனில் முதன்மை, மெயின்ஸ் மற்றும் நேர்காணல் என்ற மூன்று கட்டங்களாக நடத்தப்படும். இதற்கு 10/11/2021 அன்று அல்லது அதற்கு முன் பட்டதாரியாக இருக்க வேண்டும். 01/10/2021 தேதியின்படி 20 வயது முதல் 30 வயது வரை வயது வரம்பு இருக்க வேண்டும். இந்த பணிகளுக்கு மாதம் ரூ. 52,000 முதல் 55,000 வரை ஊதியமாக வழங்கப்படும் என்றும் பணி குறித்த கூடுதல் விவரங்கள் அனைத்தையும் www.ibps.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளுமாறு விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2021 Pdf

Apply Online

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!