‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யா இன்ஸ்டாவில் செய்த சாதனை – ரசிகர்கள் வாழ்த்து மழை!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஐஸ்வர்யா இன்ஸ்டாவில் செய்த சாதனை - ரசிகர்கள் வாழ்த்து மழை!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஐஸ்வர்யா இன்ஸ்டாவில் செய்த சாதனை - ரசிகர்கள் வாழ்த்து மழை!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யா இன்ஸ்டாவில் செய்த சாதனை – ரசிகர்கள் வாழ்த்து மழை!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ஐஸ்வர்யாவாக நடித்து வரும் நடிகை சாய் காயத்ரி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் தற்போது 5 லட்சம் பின்தொடர்பவர்களை பெற்று சாதனை நிகழ்த்தியுள்ள நிலையில் அவரது இந்த வெற்றிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை காயத்ரி

மக்களின் மாபெரும் வரவேற்பை பெற்று TRP ரேட்டிங்கில் முதன்மை இடத்தை பிடித்து வரும் ஒரு முன்னணி சீரியல் விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஆகும். குறிப்பாக ஒற்றுமை, பாசத்துக்கு பெயர் போன இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஐஸ்வர்யா என்ற புது அறிமுகத்தால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதாவது குடும்பத்தாருக்கு தெரியாமல் கண்ணன், ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்ள இவர்கள் இருவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருந்து துரத்தப்படுகிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ், தமிழும் சரஸ்வதியும் சீரியல்களின் மகா சங்கமம் – படப்பிடிப்பு தள வீடியோ வைரல்!

இப்போது கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் மூர்த்தியின் வீட்டுக்கு எதிரே உள்ள வீட்டில் குடிவந்துள்ளார்கள். இப்படி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் கதைக்களம் சண்டை, சச்சரவுமாக நகர்ந்து வர இதில் புது அறிமுகமாக ஐஸ்வர்யா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சாய் காயத்ரி. தற்போது விஜே தீபிகாவுக்கு ரீபிளேஸ்மெண்டாக ஐஸ்வர்யா கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சாய் காயத்ரி ரசிகர்ளின் நன் மதிப்பை பெற்று வருகிறார்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து வில்லி பரினா விலகல்? வெளியான தகவல்! ரசிகர்கள் ஷாக்!

ஏற்கனவே ‘ஈரமான ரோஜாவே’ சீரியலில் அகிலா என்ற கதாப்பாத்திரம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை சாய் காயத்ரி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் 5 லட்சம் பின்தொடர்பவர்களை பெற்றிருக்கிறார். வழக்கமாக ஒவ்வொரு சினிமா அல்லது சின்னத்திரை பிரபலங்களுக்கு கிடைக்கும் அதிகளவு பாலோயர்கள் தற்போது நடிகை சாய் காயத்ரிக்கும் கிடைத்துள்ளது. இந்த வெற்றிக்காக சாய் காயத்ரியின் ரசிகர்கள் வலைதளங்களில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!