Telegram பயனர்கள் கவனத்திற்கு – புதிதாக பிரீமியம் கட்டண சேவை அறிமுகம்!

0
Telegram பயனர்கள் கவனத்திற்கு - புதிதாக பிரீமியம் கட்டண சேவை அறிமுகம்!
Telegram பயனர்கள் கவனத்திற்கு – புதிதாக பிரீமியம் கட்டண சேவை அறிமுகம்!

பிரபல டெக் செயலியான டெலிகிராம் , மற்ற ஆப்களை போல் புதிதாக பிரீமியம் கட்டண சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சேவை மூலம் எக்ஸ்குளூசிவ் ஸ்டிக்கர்ஸ், விரைவான தரவிறக்க வசதி உட்பட பல வசதிகளை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் கூடுதல் வசதிகள் குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

பிரீமியம் கட்டண சேவை:

பிரபல இன்ஸ்டன்ட் மெசேஜிங் செயலியான டெலிகிராம் டாப் 5 செயலிகளில் ஒன்றாக மாறியுள்ளது. இந்த செயலியை உலகம் முழுவதும் சுமார் 70 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸப் , இன்ஸ்டாவை தொடர்ந்து மக்கள் மத்தில் அதிக வரவேற்பை பெற்றிருக்கும் செயலி டெலிகிராம் ஆகும். இந்த செயலி தற்போது பிரீமியம் கட்டண சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பிரீமியம் சேவையை பெற, மாதம் ஒன்றுக்கு 4.99 அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ.390 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த பிரீமியம் சேவையில் இணையும் சந்தாதாரர்கள், வழக்கமான சேவையை விட இரு மடங்கு அதிகமான சேவையை பெற முடியும். அதாவது 4 GB வரை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். மேலும், பிரீமியம் சந்தாதாரர்களின் பங்களிப்புகள் பல பத்தாண்டுகள் பயன்பாட்டை மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் உதவும். அதே நேரம், டெலிகிராமின் இலவச பதிப்பு, சுதந்திரம் மற்றும் பயனர்களின் முதன்மை மதிப்புகளை நிலைநிறுத்தி, ஒரு தொழில்நுட்ப நிறுவனம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை மறுவரையறை செய்யும் வகையில் தொடருமென டெலிகிராம் தனது தளத்தில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

1.பிரீமியம் சந்தாதாரர்கள், நீண்ட பயோடேட்டா உடன் இணைப்பில், வழக்கமான 3 கணக்குகளுக்கு பதிலாக 4 கணக்குகளை இணைத்து கொள்ளலாம்.

2.மேலும் 4GB வரையிலான வீடியோ அல்லது கோப்புகளை அனுப்ப இயலும். இலவச பதிப்பில், 2GB அளவுள்ள ஆவணங்களை மட்டுமே அனுப்ப இயலும்.

3.டெலிகிராம் கணக்கில் 1,000 சேனல்களை பின் தொடரலாம். 20 சாட் கோப்புகள் வரை உருவாக்கி கொள்ளலாம். 200 அல்லது அதற்கு மேற்பட்டோருடன் சாட் (Chat) செய்யலாம்.

4.டெலிகிராம் சேவையை மேம்படுத்தும் விதமாக , குரல் மூலம் செய்தி உருவாக்கம் (voice-to-text messages ) செய்யும் வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்.

5.இந்த கட்டண சேவை மூலம் இலவச பதிப்பை விட, பிரீமியம் சந்தாதாரர்களுக்கு, நெட்வொர்க் இணைய வேகத்திற்கு ஏற்ப, அதிவிரைவில் டவுன்லோடு செய்து கொள்ளும் வசதி கிடைக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!