சர்வதேச செய்திகள் – மே 2019

0

சர்வதேச செய்திகள் – மே 2019

இங்கு மே மாதத்தின் சர்வதேச செய்திகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அனைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

மே மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF Download

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF – மே 2019

சர்வதேச செய்திகள்

மாலத்தீவு முன்னாள் ஜனாதிபதி நஷீத் புதிய சபாநாயகராக பரிந்துரைக்கப்பட்டார்

 • மாலத்தீவில் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் புதிய பாராளுமன்றம் அல்லது மஜிலிஸின் சபாநாயகராக பரிந்துரைக்கப்பட்டார். மக்களின் பாராளுமன்றம் அல்லது மஜிலிஸின் சபாநாயகராக மாலத்தீவின் ஜனநாயகக் கட்சியால் நஷீத் ஒரு மனதாக பரிந்துரைக்கப்பட்டார்.

முதல்  ஐ.நா. வசிப்பிட சபையின் நிர்வாகக் குழுவிற்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டது

 • கென்யாவின் நைரோபியில் ஆரம்பிக்கப்பட்ட குழுவின் வருடாந்திர அமர்வில், முதல் ஐ.நா. வசிப்பிட சபையின் நிர்வாகக் குழுவிற்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
 • ஐ.நா.- வாழ்விடம் குழுவின் சிறப்பு தீம் : “Innovation for Better Quality of Life in Cities and Communities”.

ஜப்பான் புதிய பேரரசரை பெறுகிறது

 • புதிய ரெய்வா ஏகாதிபத்திய காலத்தின் துவக்கத்தை ஜப்பான் வரவேற்றது, புதிய பேரரசரராக, நருஹிடோ (59) பதவி ஏற்றார். இதற்கு முன்பு நருஹிடோவின் தந்தை அக்கிஹிட்டோ பேரரசராக (85) இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது காலம் ஹெய்செய் ஏகாதிபத்திய காலமாகும்.

JeM தலைவர் மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு

 • காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். படையினர் மீது தாக்குதல் நடத்தி 44 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா.சபை அறிவித்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு சபையின் 1267 குழுவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார்.

 திபெத்திய பீடபூமியில் டெனிசோவான்ஸ் வாழ்ந்துள்ளதாக கண்டுபிடிப்பு

 • 1,60,000 ஆண்டுகளுக்கு முன்னால் திபெத்திய பீடபூமியில் டெனிசோவான்ஸ் வாழ்ந்ததற்கான ஆதாரம் சீனாவின் சியாஹே, கான்சுவில் உள்ள பைஷியா கார்ஸ்ட் குகைகளில் இருந்து பெறப்பட்ட கடைவாய்ப்பற்களுடன் கூடிய தாடை எழும்பு பகுப்பாய்வின் மூலம் கண்டுபிக்கப்பட்டுள்ளது. டெனிசோவான்ஸ் அல்லது டெனிசோவா ஹோமினின்கள் குறித்த முதல் ஆதாரம் முதன்முதலில் சைபீரியாவிலுள்ள அல்தாய் மலைகளில் உள்ள ஒரு குகையில் 2008ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

நேபாளம், காத்மாண்டுவை இந்தியா மற்றும் சீனாவுடன் இணைக்கும் இரயில்வே கட்டுமானத்தை ஆரம்பிக்க திட்டம்

 • நேபாளம் காத்மாண்டுவை இந்தியா மற்றும் சீனாவுடன் இணைக்கும் இரயில்வே கட்டுமானத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளது; இது பிர்குஞ்ச்-காத்மாண்டு மற்றும் ரசுவகாதி-காத்மாண்டு இரயில்வேயின் விரிவான திட்ட அறிக்கை மூலம் காத்மாண்டுவை இந்தியா மற்றும் சீனாவுடன் இரயில் மூலம் இரண்டு ஆண்டுகளுக்குள் இணைக்கத் திட்டமிட்டுள்ளது.

இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக சந்திப்பு

 • இந்தியா-அமெரிக்கா இடையே புது தில்லியில் இருதரப்பு வர்த்தக கூட்டம் நடைபெற்றது. வர்த்தக, கைத்தொழில் மற்றும் சிவில் விமானத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு; அமெரிக்க வர்த்தக அமைச்சகத்தின் செயலாளர் திரு. வில்பர் ரோஸ் ஆகியோர் கூட்டுத் தலைமையில் இந்த இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

 ஆர்க்டிக் கவுன்சிலின் பார்வையாளராக இந்தியா மீண்டும் தேர்வு

 • ஆர்க்டிக் கவுன்சிலின் அரசுகளுக்கு இடையிலான மன்றத்தின் பார்வையாளராக இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆர்க்டிக் மாநிலங்களுக்கு இடையில் பொதுவான பிரச்சினைகள், குறிப்பாக நிலையான வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் தொடர்புகளை ஊக்குவிக்கிறது ஆர்க்டிக் கவுன்சில்.

பங்கபந்து ஷேக் முஜிபூர் ரஹ்மானின் வாழ்க்கையைப் பற்றிய திரைப்படம்

 • வங்கதேச விடுதலைப் போரின் ஆவணப்படம், பங்கபந்து ஷேக் முஜிபூர் ரஹ்மானின் வாழ்க்கையைப் பற்றிய படைப்புகளை திரைப்படமாக இந்தியா, வங்கதேசம் இணைந்து தயாரிக்க உள்ளது.

ஈரான் அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து வெளியேற முடிவு

 • சர்வதேச சக்திகளுடனான அணுசக்தி உடன்படிக்கையில் இருந்து ஓரளவு வெளியேற ஈரான் அறிவிக்க உள்ளது. அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறி ஒரு வருடம் ஆன நிலையில் இந்த நகர்வு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவும், இங்கிலாந்தும் இந்தியா பசிபிக் ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்புதல்

 • இந்தியா-பசிபிக் ஒத்துழைப்பு, காலநிலை மாற்றங்கள், பேரழிவு நிலைத்தன்மை, மூன்றாம் உலக நாடுகளில் பிற பகுதிகளில் உள்ள வளர்ச்சி ஆகியவற்றில் தங்கள் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியா மற்றும் இங்கிலாந்து ஒப்புக்கொண்டது.

 சோச்சியில் புதினை சந்திக்கவுள்ளார் பம்பியோ

 • ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதின் ஒரு உயர் இராணுவ விமான சோதனை மையத்திற்கு சென்று புதிய ஆயுதங்களை ஆய்வு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு ஆண்டிற்குப்பிறகு மாஸ்கோவிற்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான மிக உயர்மட்ட பேச்சுவார்த்தை நடக்க உள்ளது, இதில் ரஷ்ய ஜனாதிபதி புதினை சோச்சியில் உள்ள ரிசார்ட்டில் திரு.பம்பியோ சந்திக்கவுள்ளார்.

சீன கடற்படை இரண்டு புதிய கைடட் மிஸைல் டெஸ்ட்ராயரை அறிமுகப்படுத்தியது

 • சீன கடற்படை மேலும் இரண்டு புதிய கைடட் மிஸைல் டெஸ்ட்ராயரை அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் இத்தகைய ஏவுகணைகளின் எண்ணிக்கை 20வது ஆக உயர்ந்துள்ளது.
 • சீன வரலாற்றில் முதல் முறையாக சீன கடற்படை இந்தியப் பெருங்கடலில் டிஜிபோட்டியில் லாஜிஸ்டிக் தளங்களைக் கொண்டுள்ளது. அது மட்டுமின்றி அரபிக் கடலில் உள்ள பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தை உருவாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரியா நாட்டின் ஆரம்ப பள்ளிகளில் ஹிஜாப் அணிய தடை

 • ஆரம்ப பள்ளிகளில் ஹிஜாப் எனும் தலைமறைவை அணிவதற்கு தடை விதிப்பதற்கான ஒரு சட்டத்தை ஆஸ்திரியா ஒப்புக் கொண்டுள்ளது. இருப்பினும், சீக்கிய சிறுவர்கள் அணியும் பாட்கா மற்றும் யூதர்கள் அணியும் கிப்பா அணிய எந்த பாதிப்பும் இருக்காது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

விக்கிபீடியாவின் அனைத்து மொழி பதிப்புகளையும் தடை செய்தது சீனா

 • சீனாவில் அனைத்து மொழி பதிப்புகளையும் உள்ளடக்கிய ஆன்லைன் என்சைக்ளோபீடியா விக்கிபீடியாவை தடை செய்தது. நெட்வொர்க் குறுக்கீட்டின் (OONI) திறந்த ஆய்வுக்கூடம் வெளியிட்ட அறிக்கையின்படி, சீனா கடந்த மாதம் முதல் விக்கிபீடியாவின் அனைத்து மொழி பதிப்புகளையும் தடை செய்யத் தொடங்கியது.

தகுதி அடிப்படையிலான குடியேற்ற கொள்கையை முன்வைக்கவுள்ளார் டிரம்ப்

 • அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், குடும்ப உறவுகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு மாறாக தகுதி அடிப்படையில் வெளிநாட்டவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் குடியேற்றக் கொள்கைகளை கொண்ட ஒரு புதிய திட்டத்தை அறிவிக்க திட்டமிட்டுள்ளார்.
 • இந்த நடவடிக்கை கிரீன் கார்டுக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இந்திய தொழில் வல்லுனர்களுக்கு காத்திருப்புக்கான காலத்தை குறைக்க வழிவகுக்கும்.

யுஏஇ எண்ணெய்க் கப்பல்கள் சேதம் குறித்த ஆய்வில் யு.எஸ். மற்றும் பிரான்ஸ் இணைந்தது

 • யுஏஇ கடற்கரையில் ஏற்பட்ட வணிக கப்பல்கள் சேதம் குறித்த விசாரணையில் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் யுஏஇ உடன் இணைந்தது. ஓமன் கடலில் நான்கு வர்த்தக சரக்கு கப்பல்கள் மீதான தாக்குதல் குறித்த விசாரணைகளில் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ், யுஏஇக்கு உதவுகின்றது.

சுந்தரம்கிளேட்டன் அமெரிக்காவில் புது யூனிட்டை அமைத்தது

 • டிவிஎஸ் குழுவின் உறுப்பினரான சுந்தரம்-கிளேட்டன் லிமிடெட் (SCL) தெற்கு கரோலினாவில் ஒரு புது யூனிட்டை அமைப்பதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் இந்த யூனிட்டை, அதன் துணை நிறுவனங்கள் மூலம் அமைத்துள்ளது.

கனடா மற்றும் மெக்ஸிக்கோ மீதான உலோக வரியை அமெரிக்கா உயர்த்துகிறது

 • கனடா மற்றும் மெக்ஸிகோவிலிருந்து இறக்குமதியாகும் எஃகு மற்றும் அலுமினிய உலோகங்கள் மீது அமெரிக்க வரிகளை உயர்த்துவதற்கான ஒப்பந்தத்தில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். அது அண்டை நாடுகளுக்கு இடையே மோதலை உருவாக்குவதோடு புதிய அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தையும் தடை செய்கிறது.

 ஜப்பானில், ஓட்டுநரில்லா டிராக்டர்கள் இயக்கத்திற்கு வந்தன

 • ஜப்பானில் ஓட்டுநரில்லா டிராக்டர் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது இவ்வகை டிராக்டர்கள் செல்லும் வழிகளில் தடங்கல் ஏற்படாதவாறும், ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தின் மூலம் U- திருப்பங்களில் செல்லுமாறும், தேவைப்படும் போது தானாகவே நிறுத்தும் படி வடிவமைக்கபட்டுள்ளது. இவ்வகை ஓட்டுநரில்லா டிராக்டர்கள் டிசம்பர் 2018 ல் சந்தைக்கு வந்தது.

ஜோகோ விடோதோ இரண்டாவது முறையாக இந்தோனேசியாவின் ஜனாதிபதியாக   தேர்ந்தெடுக்கப்பட்டார்

 • இந்தோனேசியாவின் ஓய்வுபெற்ற தளபதியான பிரபபோவோ சுபியாண்டோவை தோற்கடித்து ஜோகோ விடோதோ நாட்டின் ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இந்தியாவிற்கான உயர் ஆணையராக மொய்னுல் ஹக் -ஐ பாகிஸ்தான் அரசு நியமித்துள்ளது

 • இந்தியாவிற்கான உயர் ஆணையராக தற்போதையய பிரான்ஸ் தூதரக உள்ள மொய்னுல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார் . இவர் பாகிஸ்தான் அரசின்  வெளியுறவு துறை நெறிமுறைத் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

 செர்பியாவில் சட்டமியற்றுபவர்கள் பரோல் இல்லாமல் ஆயுள் தண்டனையை   அறிமுகப்படுத்துவதற்கு தண்டனைக் குறியீட்டை சீர்திருத்தியுள்ளனர்

 • செர்பியாவில், சட்டமியற்றுபவர்கள் ஐரோப்பா கவுன்சில் தெரிவித்த எதிர்ப்புகள் இருந்தபோதிலும் பரோல் இல்லாமல் ஆயுள் தண்டனையை அறிமுகப்படுத்துவதற்கு தண்டனைக் குறியீட்டை சீர்திருத்தியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர முற்படுகின்ற  செர்பியாவில் தற்போது வரை அதிகபட்ச தண்டனை 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை ஆகும்.

சாக்கோஸ்  தீவு ஐ.நா. தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது

 • ஐ.நா. பொதுச் சபையின் இங்கிலாந்தின் “காலனித்துவ நிர்வாகத்தை” திரும்பப்பெற மற்றும் ஆறு மாதங்களுக்குள் நிபந்தனையற்ற வகையில் சாக்கோஸ் தீபகற்பத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று கோரிய தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த 116 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இந்தியப்பெருங்கடலில் உள்ள மொரிஷியஸ் நாட்டின் சுயாட்சியை மீட்டெடுக்கும் நோக்கில் இந்த ஆதரவை இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஷஹீன் -2 ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது பாகிஸ்தான்

 • பாகிஸ்தான் ராணுவம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஷஹீன் -2 ஏவுகணையை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சோதனை செய்தது. அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் இந்த ஏவுகணை 1,500 கி.மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள இலக்கை குறி வைத்து தாக்க கூடிய வல்லமை படைத்தது.

தெரேசா மே ஜூன் 7-ம் தேதி பதவி விலக முடிவு

 • கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து வருகிற ஜூன் 7-ம் தேதி பதவி விலகுவதாக அறிவித்துள்ளார் தெரேசா மே. அதன் பின்னர் அடுத்த ஒரு வாரத்திலேயே புதிய தலைவருக்கான தேர்தல் பணி தொடங்கிவிடும் என அறிவித்துள்ளார்.

மலேசியா பிளாஸ்டிக் கழிவுகளை வெளிநாட்டுகளுக்கு  திருப்பி அனுப்பவுள்ளது

 • அமெரிக்கா, யு.கே., கனடா மற்றும் ஆஸ்திரேலியா உட்பட நாடுகளுக்கு 3,000 மெட்ரிக் டன் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் கழிவுகள் திருப்பி அனுப்பப்படும் என்று மலேசியா தெரிவித்துள்ளது. மலேரியாவில் அசுத்தமான கழிவுகளை கொண்ட அறுபது கன்டெய்னர்  சட்டவிரோதமாக  கடத்தப்பட்டு உள்ளே  வந்துள்ளது.

இஸ்ரேலின் பிரதமர் நெத்தன்யாகு கூட்டணி பெரும்பாண்மை அமைப்பதில் தோல்வி

 • இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு கூட்டணி பெரும்பான்மை அமைப்பதில் தோல்வியுற்றார், வரும் செப்டம்பர் 17ம் தேதி பொது பாராளுமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இஸ்ரேல் நாட்டின் வரலாற்றில் பெரும்பாண்மை நிரூபிக்காமல் ஆட்சி கலைந்து இதுவே முதல் முறை

US National Spelling Bee போட்டியில் ஆறு இந்திய மாணவர்கள் வெற்றி

 • அமெரிக்காவில் நடைபெற்ற US National Spelling Bee போட்டியில் 550 க்கும் மேற்பட்ட போட்டியாளர்களை தோற்கடித்து 50,000 அமெரிக்க டாலர்கள் மதிக்கதக்க வீடுகளையும் US National Spelling Bee பட்டத்தையும் வென்ற 8 வெற்றியாளர்களில் ஆறு மாணவர்கள் இந்திய நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ரிஷிக் காந்தாஸ்ரி, ஷாகத் சுந்தர், ஷிருதிகா பாடி, சோஹம் சுகதங்கர், அபிஜாய் கொடலி, ரோஹன் ராஜா ஆகியோர் ஆவர்.

தெற்கு சூடான் மீதான தடையை ஐ.நா. நீட்டித்தது

 • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், தெற்குசூடான் மீதான பொருளாதார மற்றும் ஆயுதத் தடையை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டித்துள்ளது. 2020 மே 31 வரை சூடானில் இந்தத் தடை நீடிக்கும் எனத் தெரிவித்துள்ளது. தெற்கு சூடானில் ஆயுதத்தடை மற்றும் போரை தூண்டியதற்காக எட்டு தெற்கு சூடானிய நாட்டினர் மீது சொத்து முடக்கம் மற்றும் உலகளாவிய பயண தடை விதிக்கப்பட்டுள்ளது.

Download PDF

சர்வதேச செய்திகள் Video in Tamil

பொது அறிவு பாடக்குறிப்புகள்

To Follow  Channel – Click Here

Whatsapp குரூப்பில் சேர – கிளிக்செய்யவும்
Telegram Channel ல் சேர – கிளிக்செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!