சர்வதேச செய்திகள் – ஏப்ரல் 2019

0

சர்வதேச செய்திகள் – ஏப்ரல் 2019

இங்கு ஏப்ரல் மாதத்தின் சர்வதேச செய்திகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அனைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

ஏப்ரல் மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF Download
மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF – ஏப்ரல் 2019

சிகாகோ மேயரானார் கருப்பு இன பெண்

  • முன்னாள் மத்திய வழக்கறிஞரான லோரி லைட்ஃபுட் (Lori Lightfoot) அமெரிக்காவின் மூன்றாவது பெரிய நகரமான சிகாகோவுக்கு மேயரானார். ஒரு ஆப்பிரிக்க அமெரிக்க பெண், சிகாகோ மேயராக தேர்ந்தெடுக்கப்படுவது வரலாற்ற்றில் இதுவே முதல் முறையாகும்.

அமெரிக்கா F-35 போர் ஜெட் திட்டத்தில் துருக்கி பங்கு பெறுவதை நிறுத்தி வைத்துள்ளது

  • ரஷ்ய S-400 வான் பாதுகாப்பு முறையை வாங்க துருக்கியின் தலைநகரான அன்காரா முடிவு செய்த பிறகு, அமெரிக்கா தனது F-35 போர் ஜெட் திட்டத்தில் துருக்கி பங்கு பெறுவதை நிறுத்தி வைக்க முடிவுசெய்துள்ளது.

நருஹியோவின் புதிய சகாப்தம் ‘ரெய்வா’

  • ஜப்பானின் வரவிருக்கும் நருஹியோவின் புதிய சகாப்தத்தின் பெயர் “ரெய்வா” என அரசாங்கம் அறிவித்துள்ளது.
  • 200 ஆண்டுகளில் ஏசிட்டோ பேரரசர் ஏப்ரல் 30 அன்று பதவியில் இருந்து இறங்கவுள்ளார் இதுவே “Heisei” சகாப்தத்தை முடிவுக்கு கொண்டு வரவுள்ளது. புதிய சகாப்தம் மே 1 முதல் அமலுக்கு வருகிறது.

அமெரிக்கா, தென்கொரியா பாதுகாப்புத் தலைவர்கள் சந்திப்பு

  • கொரிய தீபகற்பத்தின் அணுவாயுதமயமாக்கல் தொடர்பாக, அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பாட்ரிக் ஷானஹான், தென்கொரியா தேசிய பாதுகாப்புச் செயலர் ஜியோங் கியோங்-டூவை வாஷிங்டனில் உள்ள பென்டகனில் சந்தித்தார்.

இஸ்தான்புல் உலகின் மிகப்பெரிய விமான நிலையத்தை திறந்துள்ளது

  • புதிய இஸ்தான்புல் விமான நிலையம், உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக பதிவாகியுள்ளது. இந்த விமான நிலையத்தால் வருடத்திற்கு 90 மில்லியன் பயணிகளை கையாள முடியும் என்று கூறப்படுகிறது. 

லண்டன் 24×7 மாசு கட்டுப்பாட்டு கட்டணம் வசூலிக்கும் முதல் நகரம் ஆனது

  • சிறப்பு அல்ட்ரா குறைந்த உமிழ்வு மண்டலம் (ULEZ) என்னும் திட்டத்தை செயல்படுத்தும் முதல் நகரம் லண்டன் ஆகும், இங்கு உமிழ்வு தரங்களை பூர்த்தி செய்யாத பழைய வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை செயல் படுத்தியுள்ளது.

நெத்தன்யாகு இஸ்ரேல் தேர்தலில் 5ஆம் முறை வெற்றி பெற்றுள்ளார்

  • இஸ்ரேல் பிரதம மந்திரி பெஞ்சமின் நேதன்யாகு இஸ்ரேலின் தேசிய தேர்தலில் ஐந்தாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார், 2009 முதல் தொடர்ந்து நாட்டை வழிநடத்தி வருகிறார், இவரின் ஆட்சி காலம் 13 ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

வட கொரியா மீதுள்ள பொருளாதார தடையை ஜப்பான் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது

  • ஜப்பான் வட கொரியா மீதுள்ள வர்த்தகம் மற்றும் பிற தடைகளை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளது.
  • வட கொரியாவின் அணுஆயுத சோதனை மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை ஆகியவை ஜப்பான் நீடித்த பொருளாதார தடைக்கு காரணமாக அமைந்தது.

பகுதி தானியங்கி ஆயுதங்களை தடை செய்வதற்கு நியூசிலாந்து பாராளுமன்றம் வாக்களித்துள்ளது

  • கிறிஸ்ட்சர்ச் நகரில் நடந்த துப்பாக்கி சூடு நிகழ்வின் எதிரொலியாக நியூசிலாந்தின் பாராளுமன்றம், இராணுவ பாணி மற்றும் சட்டவிரோதமான ஆயுதங்களை தடை செய் முடிவு.

சூடான் அதிபர் ஓமர் அல் பஷீர் கைது செய்யப்பட்டார்

  • 30 ஆண்டுகளாக சூடானைக் ஆட்சி செய்த ஜனாதிபதி ஒமர் அல்-பஷீர் இராணுவத்தின் ஆட்சிக்கவிழ்ப்பில் கைது செய்யப்பட்டார், மற்றும் இரண்டு ஆண்டு கால இராணுவ ஆட்சிக்குப் பின் தேர்தல் நடைபெறும் என சூடான் ராணுவம் அறிவித்துள்ளது
  • 2003 ஆம் ஆண்டில் தொடங்கிய கிளர்ச்சியின் போது, ​​இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐ.சி.சி), விதித்த தீர்ப்பால் பஷீர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

BRI மூலம் தனது சொந்த உலகளாவிய தீர்மானகரமான கடற்படை சக்தியை சீனா உருவாக்க முயற்சி

  • பெருகிவரும் பல பில்லியன் டாலர் பெல்ட் மற்றும் சாலை முன்முயற்சியால் சீனா தனது சொந்த உலகளாவிய தீர்மானகரமான கடற்படை சக்தியை உருவாக்க முயல்கிறது, என பென்டகன் அமெரிக்க காங்கிரசுக்குத் தெரிவித்துள்ளது.
  • ஆசிய நாடுகள், ஆபிரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பாவிற்கான இணைப்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்த BRI கவனம் செலுத்துகிறது.

ஈகுவேடார் அசாங்கேயின் குடியுரிமையை ரத்து செய்துள்ளது. 

  • ஜூலியன் அசாங்கேவுக்கு புகலிடம் அளித்து பல ஆண்டுகளுக்கு பின்னர், தற்போது ஈகுவேடார் அசாங்கேயின் குடியுரிமையை ரத்து செய்துள்ளது.
  • அசாங்கே 2012-ல் ஈக்வடார் ஜனாதிபதியாக இருந்த ரபேல் கோரியாவால் தஞ்சம் அடைந்தார், ஆனால் தற்போது அசாங்கே தனது புகலிடம் விதிகளை மீறியதாக கூறி இந்த முடிவை எடுத்துள்ளது.

அபுதாபி சர்வதேச புத்தக கண்காட்சி, ADIBF 2019,

  • இந்த மாதம் 24 முதல் 30 வரை நடைபெறும் அபுதாபி சர்வதேச புத்தக கண்காட்சியில், ADIBF 2019 இல், இந்தியாவை கெளரவ விருந்தினராக யுஏஇ அறிவித்துள்ளது. இந்த கண்காட்சி ஐக்கிய அரபு நாடுகளின் வளமான பாரம்பரியத்தை முன்னிலைப்படுத்தி அதன் நம்பகத்தன்மை நவீனத்துவம், கலாச்சார மற்றும் இலக்கிய வெளியீட்டை வெளிப்படுத்துகிறது.

உலகின் மிகப்பெரிய விமானத்தின் முதல் சோதனை

  • கலிபோர்னியாவில் உள்ள மோஜவே பாலைவனத்தில் உலகின் மிகப்பெரிய விமானம், முதன்முறையாக சோதனை செய்யப்பட்டது. இது Stratolaunch Systems Corp. ஆல் உருவாக்கப்பட்ட கார்பன் கலப்பு விமான வகையின் முதல் விமானம் ஆகும். உலகின் மிகப்பெரிய விமானம் வெள்ளை வானூர்தி ராக் என்றழைக்கப்படுகிறது, இதன் றெக்கை ஒரு அமெரிக்க கால்பந்து மைதானத்தின் நீளம் கொண்டிருக்கும்.

நேபாள பௌத்த மடம்இந்தியா மறு நிர்மாணம்  

  • நேபாளத்தில் சோய்ஃபேல் குண்டலிங் என்ற பௌத்த மடத்தை இந்தியா மறு நிர்மாணம் செய்து கொடுத்துள்ளது. சிந்துபால் சௌக் மாவட்டத்தில், லிசாங்கு என்ற கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள இந்த மடத்தை ஷியால்பா டென்ஸின் ரின்போசே நேற்று திறந்து வைத்தார். இந்தியா அளித்த89 கோடி நேபாள ரூபாய் நிதியுதவியுடன் இந்த மடம் கட்டப்பட்டுள்ளது.

உக்ரைன் அதிபர் தேர்தல்நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி வெற்றி

  • ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரைன் நாட்டின் அதிபர் தேர்தலில் நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தியாவின் ஹஜ் ஒதுக்கீட்டை 2 லட்சமாக சவுதி அரேபியா அதிகரித்துள்ளது

  • சவுதி அரேபியா இந்தியாவின் ஹஜ் பயணிகள் ஒதுக்கீட்டை ஒரு லட்சத்து எழுபது ஆயிரத்திலிருந்து இரண்டு லட்சமாக அதிகரித்து ஒரு முறையான உத்தரவை வழங்கியுள்ளது. இந்த ஹஜ் பயணிகள் ஒதிக்கீடு அதிகரிப்பின் மூலம் உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், பீகார் போன்ற பெரிய மாநிலங்களிலிருந்து வரும் அனைத்து ஹஜ் விண்ணப்பதாரர்களும் இந்த ஆண்டு யாத்திரைக்கு செல்ல வழிவகுக்கும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாய்லாந்தில் களை [வீட்] திருவிழா

  • தாய்லாந்து, பான் ராம் களை விழா எனும் அதன் முதல் களை விழாவை கொண்டாடுகிறது. 2018 ஆம் ஆண்டில் மருத்துவ நோக்கங்களுக்காக மரிஜுவானா பயன்படுத்துவதை சட்டப்பூர்வமாக்கிய முதல் தென்கிழக்கு ஆசிய நாடாக தாய்லாந்து ஆனது. கனடா, ஆஸ்திரேலியா, இஸ்ரேல் மற்றும் பாதிக்கும் மேற்பட்ட அமெரிக்க நாடுகளைத் தொடர்ந்து, தாய்லாந்து தாராளமயமாக்கலைத் தழுவிய அரசாங்கங்களின் வளர்ந்து வரும் பட்டியலில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பெய்ஜிங்கில் வெளியுறவு செயலாளர் ‘இருதரப்பு ஆலோசனை’

  • இந்தியாவின் வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே, “இருதரப்பு ஆலோசனைகளுக்காக” பெய்ஜிங்கிற்கு வருகை தந்தார். ஜெய்ஷ்-இ- முகம்மது, பயங்கரவாத அமைப்பு நிறுவனரான, மசூத் ஆசாரை, ஒரு சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா அதன் நிலையை மதிப்பாய்வு செய்யலாம் என நம்பப்படுகிறது

ஈரானிடம் எண்ணெய் இறக்குமதி செய்பவர்கள் மீதும் பொருளாதார தடை என அமெரிக்கா எச்சரிக்கை

  • ஈரானிய எண்ணெய் இறக்குமதியாளர்கள் தங்கள் இறக்குமதியை விரைவில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் அல்லது அமெரிக்கா அந்த நாட்டின் மீதும் பொருளாதாரத் தடையை விதிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் மற்றும் ஆறு உலக சக்தி நாடுகளுக்கு இடையேயான 2015 அணுசக்தி உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக வெளியேறிய பின்னர், நவம்பர் மாதம் ஈரானிய எண்ணெயின் ஏற்றுமதிக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை மீண்டும் கொண்டுவந்தது.

ரஷ்யாவின் புடின் வட கொரியாவின் கிம் சந்திப்பு

  • திரு புடின் மற்றும் திரு கிம் ஆகியோர் விளாடிவோஸ்டாக் அருகில் உள்ள ரஷ்கி தீவின் பார் ஈஸ்டர்ன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் ஒருவரையொருவர் சந்திக்க உள்ளனர். இதனைத் தொடர்ந்து இரு நாட்டின் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பரந்த பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளது.

அனைத்து உள்ளூர் அரசுத் தேர்தல்களும் EVMs மூலம் நடத்த வங்கதேசம் திட்டம்

  • வங்கதேசத்தில், அனைத்து உள்ளூர் அரசுத் தேர்தல்களும் இப்போது மின்னணு வாக்களிப்பு இயந்திரம் (EVM) மூலம் நடைபெறும் எனத் தகவல். EVM உயர் தொழில்நுட்பத்துடன் செழுமையாக இருப்பதாகவும், உள்ளூர் தேர்தலில் அதைப் பயன்படுத்துவது குறித்து அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், வங்கதேச தேர்தல் ஆணைய செயலாளர் ஹெலாலுதின் அஹமத் தெரிவித்தார். வங்கதேச தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் மூன்றாவது பாலின மக்களைக் கொண்டுவர முடிவு செய்துள்ளது.

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் உலகின் மிகப்பெரிய உட்புற நீர்வீழ்ச்சி

  • சுற்றுலாவிற்கு வரும் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் உலகின் மிகப்பெரிய உட்புற நீர்வீழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது.

கானா மருத்துவ ட்ரோன் சேவையை தொடங்கியது

  • கானா, தொலைதூர இடங்களுக்கு மருத்துவப் பொருட்களை எடுத்துச் செல்ல ட்ரோன் சேவையை துவங்கியது, இது “உலகின் மிகப்பெரிய டிரோன் விநியோக சேவையாக” மாறும் என்று அறிவித்த ஜனாதிபதி நானா அகுபோ-அட்டோ தெரிவித்தார்.

அபுதாபி சர்வதேச புத்தக கண்காட்சியில் 2019ல் இந்திய பெவிலியன்

  • 29 வது அபுதாபி சர்வதேச புத்தக கண்காட்சியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை பிரதம மந்திரி திரு சைப் பின் சையத் அல் நஹாயன் இந்தியா பெவிலியனை திறந்துவைத்தார். 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 முதல் 30 வரை நடைபெறும் புத்தக கண்காட்சிக்கான சிறப்பு விருந்தினராக இந்தியா திகழ்கிறது குறிப்பிடத்தக்கது.

ஒரு மில்லியன் இனங்கள் அழியும் ஆபத்துக்காலத்தில் உள்ளது: U.N. அறிக்கை

  • AFP மூலம் பெறப்பட்ட U.N. அறிக்கையின் படி சுமார் ஒரு மில்லியன் இனங்கள் வரை மனித பாதிப்பு காரணமாக அழியும் ஆபத்துக்காலத்தில் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரேனிய மொழிப் பயன்பாட்டை பலப்படுத்த சட்டம்

  • உத்தியோகபூர்வ அமைப்புகளில் உக்ரேனிய மொழியை பயன்படுத்துவதற்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பண்டைய கல்லறையில் மம்மீக்களை கண்டுபிடித்தனர்

  • அஸ்வானின் தெற்கு நகரில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பண்டைய கல்லறையில் மம்மிக்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். இந்த கல்லறை 332 பி.சி. அலெக்ஸ்சாண்டர் மாமன்னர், கிரேக்க-ரோமன் காலத்தைச் சேர்ந்தது. இது அஸ்வான் நிலப்பகுதியின் அடையாளத்தில் ஒன்றான அகா கானின் மசூதி அருகே உள்ளது, இந்தியாவில் முஸ்லீம் உரிமைகளுக்காக பாடுபட்ட இவரது உடல் 1957 ல் அவரது மரணத்திற்குப் பின்னர் இங்கு புதைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

துபாயின் புர்ஜ் கலிஃபா கோபுரத்தில் இலங்கை கொடி

  • 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு அன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக துபாயின் பிரபல சின்னமான உயரமான கட்டிடம் புர்ஜ் கலிஃபா கோபுரத்தில் இலங்கையின் கொடியை வண்ண விளக்குகளால் ஒளிர விட்டுள்ளனர்.

இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ராஜினாமா

  • 250 க்கும் மேற்பட்ட உயிர்சேதமடைந்த ஈஸ்டர் தாக்குதல், உளவுத்துறையில் “ஒரு பெரிய பின்னடைவு” என்று அரசாங்கம் கூறியதை அடுத்து இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று பாதுகாப்பு மந்திரி ஹேமசீரி பெர்னாண்டோ பதவி விலகியுள்ளார்.

கத்தாரின் வெளியேறும் விசா அமைப்பு முடிவடைய உள்ளது: ஐ. நா

  • கத்தார் அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களுக்குமான தனது சர்ச்சைக்குரிய வெளியேறும் விசா அமைப்புகளை அகற்றுவதற்கு முடிவெடுத்துள்ளதாக ஐ. நா தகவல். 

இம்ரான் கானைச் சந்தித்தார் ஜி ஜின்பிங், இந்தோ–பாக் உறவுகளை முன்னேற்றுவிக்க அழைப்பு

  • சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கானைச் சந்தித்தார், புல்வாமாவில் JeM அமைப்பால் நடத்தப்பட்ட தற்கொலைப்படை பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையில் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து தங்கள் உறவுகளை மேம்படுத்த அழைப்பு விடுத்தார்.

வங்கதேசம்-சீனா-இந்தியா-மியான்மர் (BCIM) பொருளாதார வழித்தடம்

  • பெல்ட் மற்றும் ரோடு கூட்டத்திலிருந்து (BRF) இந்தியா வெளியேற எடுத்த முடிவால் சீனாவின் தலைமையிலான பெல்ட் மற்றும் சாலை முன்முயற்சி (BRI) ஆகியவற்றின் திட்டங்கள் பட்டியலில் இருந்து வங்கதேசம்-சீனா-இந்தியா-மியான்மர் (BCIM) பொருளாதார வழித்தடத்தை வெளியேற்றுவதற்கு வழிவகுக்கலாம் எனத்தகவல்.

இந்தோனேஷியா ஜகர்த்தாவிலிருந்து தலைநகரத்தை நகர்த்த திட்டமிட்டுள்ளது

  • இந்தோனேஷியா ஒரு புதிய தலைநகரத்தை நிர்மாணிப்பதற்கான திட்டங்களை அறிவித்துள்ளது. அதன் தற்போதைய தலைநகரான ஜகார்த்தா, மாசுபாடு, போக்குவரத்து நெரிசல் மற்றும் நகரம் மூழ்கி வரும் பிரச்சனை ஆகியவற்றால் போராடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா–சீனாவின் பார்மா அணி சந்திப்பு

  • அடுத்த மாதம் பெய்ஜிங்கில் திட்டமிடப்பட்ட சீனாவுடனான, மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் முதல் கூட்டத்தில் இந்தியா ஒரு உயர் மட்ட குழுவை அனுப்ப திட்டமிட்டுள்ளது.

கம்போடியாவில் ஆங் சான் சூ கீ

  • மியன்மார் சிவிலியன் தலைவர் ஆங் சான் சூ கீ கம்போடியாவுக்கு முதல் அதிகாரப்பூர்வ பயணம் வருகிறார். கம்போடியாவிற்கு மூன்று நாள் பயணமாக வருகிறார்.

PDF Download

To Read in English: Click Here

To Follow  Channel –கிளிக் செய்யவும்
Whatsapp குரூப்பில் சேர – கிளிக்செய்யவும்
Telegram Channel ல் சேர – கிளிக்செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!