நாடு முழுவதும் ஒரே நாளில் 56,000 பேருக்கு கொரோனா – பொதுமக்கள் அச்சம்!!
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக நேற்று ஒரே நாளில் 56,211 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவல்:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. மக்களுக்கு கொரோனா கட்டுப்பாடு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா, ஹரியானா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வருகிறது.
TN Job “FB
Group” Join Now
இதனால் பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒரு பக்கம் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 1 கோடிக்கு அதிகமானோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இருந்த போதிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.
தமிழகத்தில் வாக்குப்பதிவு நாளன்று அத்தியாவசிய சேவைகள் தொடரும் – TNEB அறிவிப்பு!!
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனாவால் 56,211 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 20 லட்சத்து 95 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 37,000 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
தமிழகத்தில் ஊழியர்களுக்கு Work From Home – சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!!
இதுவரை கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியே 13 லட்சத்து 93 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தற்போது நிலவரப்படி 5.40 லட்சம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் இதுவரை 1,62,114 பேர் உயிரிழந்துள்ளனர்.