மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி (DA)உயர்வு? விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி (DA)உயர்வு? விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி (DA)உயர்வு? விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி (DA)உயர்வு? விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு மிக விரைவில் மகிழ்ச்சியான செய்தி வெளியாக காத்திருக்கிறது. இந்த முறை அதிக சம்பள உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அகவிலைப்படி (DA) 4% உயர்வு:

ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கத்தால் பொருட்களின் விலை உயருகிறது. இதை எதிர்கொள்வதற்காக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். அதாவது ஜனவரி – ஜூன் மற்றும் ஜூலை – டிசம்பர் என இரண்டு அரையாண்டுகளுக்கு ஒரு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். இந்த ஆண்டு ஜனவரியில், 7வது ஊதியக் குழுவின் கீழ் அகவிலைப்படியை உயர்த்தி அரசு அறிவித்தது. இந்த முறை, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான டிஏ மற்றும் டிஆர் 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இருப்பினும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏஐசிபிஐ 126 க்கு மேல் இருந்தால், இந்த மாதத்தில் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி மற்றும் பிப்ரவரியில் ஏஐசிபிஐ 125.1 மற்றும் 125 ஆக இருந்தது, மார்ச் மாதத்தில் அது 126 ஆக உயர்ந்தது. ஏஐசிபிஐ அந்த அளவில் இருந்தால், அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் டிஏ உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஜூலை – டிசம்பர் அரையாண்டு தொடங்கிவிட்ட நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என தகவல்கள் கூறுகின்றன.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ‘இதனை’ செய்யாவிடில் கார்டு ரத்து

வழக்கமாக அகவிலைப்படி சராசரியாக 3% உயர்த்தப்படும். ஆனால், இந்த முறை அகவிலைப்படி 4% உயர்த்தப்படும் என அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகின்றனர். மேலும் அடிப்படை சம்பளம் 18000 ரூபாய் என வைத்துக்கொள்வோம். அதன்படி தற்போதைய 34%தின் படி அகவிலைப்படி மாதம் 6120 ரூபாய் கிடைக்கிறது. மேலும் அகவிலைப்படி 38% ஆக உயர்த்தப்பட்டால் மாதம் கூடுதலாக 720 ரூபாய் அகவிலைப்படி கிடைக்கும். அதாவது மொத்த அகவிலைப்படி 6840 ரூபாயாக உயரும். ஆண்டு சம்பளம் 8640 ரூபாய் உயரும். இதையடுத்து 56900 ரூபாய் அடிப்படை சம்பளம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு மாத அகவிலைப்படி 21622 ரூபாயாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!