முக்கிய திட்டங்கள் – நவம்பர் 2018

0
முக்கிய திட்டங்கள் – நவம்பர் 2018
மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 2018
நவம்பர் மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF Download

இங்கு நவம்பர் மாதத்தின் முக்கிய நாட்கள், கருப்பொருள் மற்றும் அன்றைக்கு நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

அடல் ஓய்வூதிய திட்டம்

  • ஒரு கோடி 20 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் அடல் ஓய்வூதிய யோஜனாவில் இணைந்துள்ளனர்.
  • உத்தரபிரதேசம், பீகார், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்கள் அடல் ஓய்வூதியத் திட்டத்தில் முதன்மையான பங்களிப்பாளர்களாகும்.
  • 18 முதல் 40 வயது வரை உள்ள அனைத்து இந்திய குடிமக்களுக்கும் இந்த திட்டம் கிடைக்கிறது. இதன் கீழ், சந்தாதாரர்கள் 60 வயது முதல் ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 1000 ரூபாய் 5000 ரூபாய் ஓய்வூதியம் பெறமுடியும்.

‘ஜீரோ ஹங்கர்'[பசியில்லா நிலை]

  • வறுமை, பசி ஆகியவற்றை ஒழிக்க முற்படும் முயற்சியில், 20 க்கும் மேற்பட்ட நாடுகள் விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி பற்றிய புதிய ‘ஜீரோ ஹங்கர்’ [பசியில்லா நிலை] அறிவிப்புக்கு உறுதியளித்திருக்கின்றன.
  • சீனாவின் சங்ஷாவில் நடைபெற்ற சர்வதேச வளர்ச்சி ஒத்துழைப்பு பற்றிய ஒரு மன்றத்தின் முடிவில் இந்த உறுதிப்பாடு எடுக்கப்பட்டது.

உலக கழிப்பறை தினப் போட்டி

  • குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கான ஸ்வச்ச பாரத் உலக கழிப்பறை தினப் போட்டியை அறிவித்தது. திறந்த வெளியில் மலம் கழிப்பது ஒழிக்கப்பட்ட [ODF] நிலையில் சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம், சுகாதார மக்கள் இயக்கத்தை மீண்டும் தீவிரப்படுத்துவதற்கு இந்தியாவின் அனைத்து மாவட்டங்களையும் ஊக்குவிப்பதே இந்த போட்டியின் நோக்கமாகும்.

‘நகர்ப்புற கஃபே: வாழ்வாதாரத்திற்கான நதி‘

  • தூய்மை கங்கா தேசிய இயக்கம் ஐ.நா ஹேபிடேட்டுடன் கூட்டுசேர்ந்து புதுடில்லியில் ‘நகர்ப்புற கஃபே: வாழ்வாதாரத்திற்கான நதி’ என்ற கொள்கை உரையாடலை ஏற்பாடு செய்தது.

ஆப்ரேஷன் கிரீன்ஸ்

  • ஆப்ரேஷன் கிரீன்ஸ் – நாடு முழுவதும், அனைத்து காலங்களிலும் டி.ஒ.பி பயிர்கள் என அழைக்கப்படும் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகிவை விலை ஏற்ற தாழ்வின்றி கிடைப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.
  • மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் அமைச்சகம் ஆப்ரேஷன் கிரீன்ஸ் அமல்படுத்தவதுற்கான நெறிமுறை உத்திகளுக்கு அனுமதியை வழங்கியது.

இந்திய காற்று விசையாழி [டர்பைன்] சான்றளிப்பு திட்டம் (IWTCS)

  • புதிய ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், சென்னை எரிசக்திக்கான தேசிய நிறுவனத்துடன் ஆலோசனை செய்து, இந்தியக் காற்று டர்பைன் சான்றளிப்புத் திட்டம் (IWTCS) என்று அழைக்கப்படும் புதிய திட்டத்தின் ஒரு வரைவை தயாரித்துள்ளது. பல்வேறு வழிகாட்டுதல்களை டர்பைன் சான்றிதழ் திட்டம் (IWTCS) சேர்த்துக்கொள்கிறது.
  • IWTCS பின்வரும் பங்குதாரர்களுக்கு உதவுவதற்கும் எளிதாக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது; (i.) அசல் கருவி உற்பத்தியாளர்கள் (OEM கள்) (ii.) இறுதி பயனர்கள் – நுட்பங்கள், SNA கள், உருவாக்குநர்கள், IPP கள், உரிமையாளர்கள், அதிகாரிகள், முதலீட்டாளர்கள் மற்றும் காப்பீடு நிறுவனங்கள் (iii.) சான்றிதழ் நிறுவனங்கள் (IV) சோதனை ஆய்வகங்கள்.

எல்லை பகுதி மேம்பாட்டுத் திட்டம்

  • அசாம், நாகலாந்து, சிக்கிம், குஜராத், ராஜஸ்தான் மற்றும் உத்தராகண்ட் ஆகிய ஆறு எல்லைப்பகுதி மாநிலங்களுக்கு 113 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்த தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் வசிக்கும் மக்களின் பிரச்சினைகளை சீர்செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
  • உயர்கல்வி ஆசிரியர்களுக்கு கல்வியாளர்களுக்கான தலைமை (LEAP) மற்றும் உயர்      கல்வி ஆசிரியர்களுக்கு கற்பித்தலுக்கான ஆண்டு புத்துணர்வு நிகழ்ச்சி (ARPIT)
  • மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மத்திய மாநில மந்திரி சத்ய பால் சிங் இரண்டு புதிய முயற்சிகளை அறிமுகப்படுத்தினார்; புது தில்லியில் உயர்கல்வி ஆசிரியர்களுக்கு கல்வியாளர்களுக்கான தலைமை (LEAP), உயர் கல்வி ஆசிரியர்களுக்கு கற்பித்தலுக்கான ஆண்டு புத்துணர்வு நிகழ்ச்சி (ARPIT).

பிரதான் மந்திரி கிருஷி சின்சாயி யோஜனா (PMKSY)

  • பிரதான் மந்திரி கிருஷி சின்சாயி யோஜனாவின் (PMKSY) கீழ் உத்திரபிரதேச விவசாயிகள் புதிய பாசன நுட்பங்களை பயன்படுத்துகின்றனர்.
  •  இந்தியாவின் எல்லாப் பகுதியிலும் உள்ள விவசாய நிலங்கள் அனைத்திற்கும் ஏதேனும் ஒரு உத்திரவாதமான பாசன வசதியை ஏற்படுத்தி நீர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை அவர்களுக்குத் தருவதே பிரதமரின் வேளாண் பாசனத் திட்டத்தின் நோக்கமாகும்.

போக்குவரத்து பிரிப்புத் திட்டம் [Traffic Separation Scheme]

கேரளா கடற்கரையில் வர்த்தக கப்பல்கள் மற்றும் மீன்பிடி கப்பல்களுக்கு இடையே மோதல் சம்பவங்களைத் தடுக்க இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் ஒரு போக்குவரத்து பிரிப்புத் திட்டம் (Traffic Separation Scheme-TSS) நிறுவப்பட வேண்டும் என்று கப்பல் இயக்குனரக பொதுப்பணித் துறை முன்மொழிந்துள்ளது.

நரி சஷக்திகரன் சங்கல்ப் திட்டம்

உத்திரப்பிரதேசத்தில், நரி சஷக்திகரன் சங்கல்ப் திட்டம் அல்லது மகளிர் அதிகாரமளித்தல் பிரச்சாரம் லக்னோவில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களால் தொடங்கப்பட உள்ளது.

ஒரு மாதக் காலம் நடைபெறும் பிரச்சாரம் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் மாநிலத்தில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஹுனார் ஹாத் மேளா

புது தில்லியில் மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. முக்தார் அப்பாஸ் நக்வி புது தில்லி பிரகதி மைதானத்தில் ஹுனார் ஹாத் மேளாவை துவக்கி வைத்தார். கலைஞர்களின் அதிகாரமளித்தலுக்கு உதவும் வகையில் இந்த மேளா உள்ளது. ஹுனார் ஹாத் நவம்பர் 14 முதல் நவம்பர் 27 வரை பிரகதி மைதானத்தில் நடைபெற உள்ளது.

நகர் எரிவாயு விநியோகத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா (CGD)

9 வது சி.ஜி.டி. ஏலத் திட்டத்தின் கீழ் 129 மாவட்டங்களில் 65 புவியியல் பகுதிகள் (GAs) உள்ள நகர் எரிவாயு விநியோகத் திட்டத்திற்கான (CGD) அடிக்கல் நாட்டு விழா பிரதமரால் அமைக்கப்படும்.

 ‘நமது வாக்கு– நமது எதிர்காலம்‘

ஹைதராபாத்தில் உள்ள தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் பிராந்திய எல்லை பணியகம் ஏற்பாடு செய்த “நமது வாக்கு – எமது எதிர்காலம்” எனும் தலைப்பில் ஐந்து நாள் கண்காட்சி தெலங்கானாவில் திறந்து வைக்கப்பட்டது.

ஒரு குடும்பம் ஒரு வேலை திட்டம்

சிக்கிம் அரசாங்கம் ஒரு குடும்பம் ஒரு வேலைத் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 17,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும்.

சௌபாக்யா திட்டம்

மத்தியப் பிரதேசம், திரிபுரா, பீகார், ஜம்மு மற்றும் காஷ்மீர், மிசோரம், சிக்கிம், தெலுங்கானா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 8 மாநிலங்கள் 100% வீடுகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.

டிசம்பர் 31, 2018-ற்குள் நாட்டில் 100% வீடுகள் மின்மயமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாஷா சங்கம்

22 இந்திய மொழிகளுக்கு பள்ளி மாணவர்களை அறிமுகப்படுத்த பாஷா சங்கம் என்ற தனித்துவமான முயற்சியை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தின் கீழ் இந்த முயற்சி 22ம் தேதி தொடங்கப்பட்டது இது டிசம்பர் 21 ஆம் தேதி வரை தொடரும்.

‘ரைதாரா மணியல்லி ராஜ்ய சர்காரா‘

கர்நாடக அரசு விவசாயிகளுடன் இணையும் பொருட்டு, டிசம்பர் மாதம் முதல் ‘ரைதாரா மணியல்லி ராஜ்ய சர்காரா’ எனும் திட்டத்தை தொடங்க திட்டம்.

PDF Download

2018 முக்கிய தினங்கள் PDF Download

நடப்பு நிகழ்வுகள்  2018

நடப்பு நிகழ்வுகள்  WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

Facebook   Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!