EPFO கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – முக்கிய அறிவுறுத்தல் வெளியீடு!

0
EPFO கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு - முக்கிய அறிவுறுத்தல் வெளியீடு!
EPFO கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு - முக்கிய அறிவுறுத்தல் வெளியீடு!
EPFO கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – முக்கிய அறிவுறுத்தல் வெளியீடு!

EPF உறுப்பினர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் அனைத்து சேவைகளையும் பெற விரும்பினால் படிவங்களை தாக்கல் செய்ய வேண்டும். அந்த படிவங்கள் குறித்தான அனைத்து விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

EPFO கணக்கு:

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPFO) அமைப்பு ஓய்வூதியத் திட்ட உறுப்பினர்களுக்கு பலவிதமான சலுகைகளை வழங்கி வருகிறது. இதனிடையே, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஓய்வூதியத் திட்டம் மற்றும் காப்பீட்டுத் திட்டம் ஆகிய இரண்டிற்கும் எதிராக மூன்று சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை நடத்தி வருகிறது. தற்போது ஓய்வூதியத் திட்ட உறுப்பினர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு திட்டத்தின் மூலமாக பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கு உறுப்பினர் தாக்கல் செய்ய வேண்டிய படிவங்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.

முதலில், EPF உறுப்பினர் ஓய்வூதிய தொகை அல்லது திட்டச் சான்றிதழை பெறுவதற்கு படிவம் 10C ஐ தாக்கல் செய்ய வேண்டும். அடுத்ததாக மாதாந்திர ஓய்வூதியத்தை திரும்பப் பெறுவதற்கு படிவம் 10D ஐ தாக்கல் செய்ய வேண்டும். பின்னர், பழைய கணக்கின் இருப்பு தொகையை புதிய கணக்கிற்கு மாற்றம் செய்வதற்கு படிவம் 13 ஐ தாக்கல் செய்ய வேண்டும். அடுத்ததாக குடும்ப உறுப்பினர்களின் நியமனத்திற்காக படிவம் 2யும், EPF உறுப்பினர்கள் முந்தைய சேவையை அறிவிப்பதற்கு படிவம் 11 யும் தாக்கல் செய்ய வேண்டும்.

வங்கி விடுமுறை நாட்களின் முழு பட்டியல் இதோ – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

மேலும், EPF உறுப்பினர் PF கணக்கை ஆதாருடன் இணைக்கப்பட்டிருந்தால் ஆன்லைன் மூலமாகவே கோரிக்கையை தாக்கல் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓய்வூதிய தொகையை திரும்ப பெறவும், PF திரும்பப்பெறாத முன்பணங்களையும் ஆன்லைன் மூலமாக தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு EPF உறுப்பினர் இந்த படிவத்தினை தாக்கல் செய்தால் மட்டுமே உறுப்பினர் இறந்துவிடும் பட்சத்தில் ஓய்வூதிய பணத்தை குடும்பத்தினர்கள் எடுத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!