வங்கி விடுமுறை நாட்களின் முழு பட்டியல் இதோ – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
வங்கி விடுமுறை நாட்களின் முழு பட்டியல் இதோ - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
வங்கி விடுமுறை நாட்களின் முழு பட்டியல் இதோ - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
வங்கி விடுமுறை நாட்களின் முழு பட்டியல் இதோ – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

இந்த மாதம் வங்கிகளுக்கு அதிகமான நாட்கள் விடுமுறை அளிக்கப்பட உள்ளதால், இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் பொது வங்கிகளின் வாடிக்கையாளர்கள் வங்கி பணிகளை முன்னதாகவே திட்டமிட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் மீதமுள்ள வங்கி விடுமுறை நாட்களை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

விடுமுறை பட்டியல்:

வங்கிகள் நமது பணத் தேவையைப் பூர்த்தி செய்யும் இடமாகும். வங்கிகளில் சேமித்து வைத்துள்ள பணத்தை எடுக்கவும், கடன் பெறவும் மற்ற பணப் பரிவர்த்தனைகளுக்கும் வங்கிகள் நம் வாழ்வில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நம்முடைய பணப் பரிவர்த்தனைகளை முன்கூட்டியே திட்டமிட்டு வைத்தால், தேவையற்ற அலைச்சலை தவிர்க்கலாம். எனவே வங்கிகளின் வேலை நாட்கள், விடுமுறை தினம் ஆகியவற்றை முன்கூட்டியே தெரிந்து கொள்வது அவசியம் ஆகும். ஒவ்வொரு பகுதியில் நடக்கும் திருவிழாக்களை பொறுத்து வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு வங்கி கிளைகள் மூடப்பட்டிருக்கும்.

இது தவிர, தேசிய விடுமுறை நாட்களில் தேசிய அளவில் வங்கி விடுமுறைகள் உள்ளன, இதனால் தனியார் மற்றும் பொதுத் துறைகளில் உள்ள அனைத்து கிளைகளும் மூடப்பட்டிருக்கும். அனைத்து பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகளின் கிளைகள் ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களில் மூடப்பட்டிருக்கும். இருப்பினும் நெட் பேங்கிங், ஆன்லைன் வங்கி சேவைகளில் எந்த பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜூலை மாதம் முடித்து, ஆகஸ்ட் மாதம் தொடங்கி 19 நாட்கள் ஆகிவிட்டது. ஒட்டுமொத்தமாக இந்த மாதம் 18 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கடந்த வாரம், தொடர்ந்து மூன்று நாட்கள் வங்கிகள் மூடப்பட்டன. இந்த வாரமும் பல வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்தியா தனது 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் ஆகஸ்ட் 15 அன்று, தேசிய விடுமுறை காரணமாக நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டன. இதையடுத்து இந்த வாரமும் வங்கி விடுமுறையுடன் தொடங்கியது. அதாவது பார்சி புத்தாண்டு (ஷாஹேன்ஷாஹி) காரணமாக செவ்வாய்க்கிழமை சில நகரங்களில் வங்கிகள் மூடப்பட்டன. தொடர்ந்து ஜன்மாஷ்டமியை கொண்டாடும் வகையில் நேற்று மற்றும் இன்றும் வங்கிகள் மூடப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் 4300 மருத்துவக் காலிப்பணியிடங்கள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

ஆகஸ்ட் 18: ஜென்மாஷ்டமி (வியாழன்)

புவனேஸ்வர், டேராடூன், கான்பூர் மற்றும் லக்னோவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்

ஆகஸ்ட் 19: ஜன்மாஷ்டமி (ஷ்ரவண வத்-8)/ கிருஷ்ண ஜெயந்தி (வெள்ளிக்கிழமை)

அகமதாபாத், போபால், சண்டிகர், சென்னை, காங்டாக், ஜெய்ப்பூர், ஜம்மு, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங் மற்றும் சிம்லாவில் வங்கிகள் மூடப்படும்.

ஆகஸ்ட் 20: ஸ்ரீ கிருஷ்ண அஷ்டமி (சனிக்கிழமை)

ஹைதராபாத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்

ஆகஸ்ட் 21: ஞாயிறு

ஆகஸ்ட் 29: ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதி – கவுகாத்தி

ஆகஸ்ட் 31: சம்வத்சரி (சதுர்த்தி பக்ஷா)/கணேஷ் சதுர்த்தி/ வரசித்தி விநாயகர் விரதம்/ விநாயகர் சதுர்த்தி — அகமதாபாத், பேலாபூர், பெங்களூரு, புவனேஸ்வர், சென்னை, ஹைதராபாத், மும்பை, நாக்பூர் மற்றும் பனாஜி

அனைத்து வங்கிகளும் ஞாயிறு மற்றும் இரண்டாவது மற்றும் கடைசி சனிக்கிழமைகளில் மூடப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!