TNPSC கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநர் பணிக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு!

0
TNPSC கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநர் பணிக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு!
TNPSC கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநர் பணிக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு!
TNPSC கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநர் பணிக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்,அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை பல்வேறு போட்டித் தேர்வுகள் வாயிலாக நிரப்பி வருகின்றன. இந்த தேர்வு அடிப்படையில் அரசு பணிக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்நிலையில் கூட்டுறவு தணிக்கைத் துறையில் உதவி இயக்குநர் பணிக்கு ஏப்ரல் 30-ல் எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

முக்கிய அறிவிப்பு:

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தின் காரணமாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எந்த தேர்வுகளையும் நடத்த வில்லை. இருப்பினும் தற்போது நோய் பரவல் கட்டுக்குள் வந்து உள்ளதால், இந்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வந்தவண்ணம் உள்ளது. அந்த வகையில் குரூப் 2, குரூப் 2A (நேர்முகத் தேர்வு பதவிகள் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) பணிகளில் அடங்கிய 5529 பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியானது. இந்த தேர்வுக்கு மார்ச் 23ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பு அடிப்படையில் இத்தேர்வுக்கு விண்ணப்ப பதிவுக்கான கால அவகாசம் முடிந்து விட்டது. இதை தொடர்ந்து குரூப்4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் 29 அன்று வெளியானது.

TN Job “FB  Group” Join Now

குரூப்4 தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 28ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் குரூப் 4 பதவியில் மொத்தம் 7,301 இடங்கள் போட்டி தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து அண்மையில் கூட்டுறவு தணிக்கை துறை சார்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஓன்று வெளியிடப்பட்டது. இதன்படி,கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குனர் (Assistant Director of Co-operative Audit) பணியில் 8 காலிப்பணியிடங்கள் இருந்தது. இப்பணிக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாத சம்பளம் ரூ. 56,100 – 1,77,500 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க 01.07.2022 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும் மற்றும் எம்.ஏ(கூட்டுறவு) அல்லது எம்,காம்., எம்.காம் (கூட்டுறவு) மற்றும் கூட்டுறவு டிப்ளோமா அல்லது ஐசிஏஐ படித்தவராக இருக்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் அடி? டெவோன் கான்வே திடீர் விலகல்! இதற்காக தான்?

இந்த வகையில் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் இப்பணிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குனர் பணிக்கு விண்ணப்பிக்க பிப்.21 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பு அடிப்படையில் ஏராளமானோர் இந்த பணிக்கு விண்ணப்பித்து உள்ளனர். இந்நிலையில் கூட்டுறவுத் தணிக்கைத் துறையில் உதவி இயக்குநர் பதவிக்கு ஏப்ரல் 30 ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிக்கை வெளியிட்டுள்ளது. www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் இருந்து ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. அதே போல், ஜூன் 19 இல் நடைபெறவுள்ள மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பதவி தேர்வுக்கு தமிழ், ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!