சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் அடி? டெவோன் கான்வே திடீர் விலகல்! இதற்காக தான்?
CSK அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே திருமணத்திற்காக தென்னாப்பிரிக்கா சென்றுள்ளதால் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் அவர் கலந்து கொள்ள மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெவோன் கான்வே
நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2022 புள்ளிகள் பட்டியலில் தற்போது 9வது இடத்தில் உள்ளது. இதுவரை நடைபெற்ற 6 ஆட்டங்களில் CSK அணி ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்று இந்த சீசனில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் IPL லீக்கில் தனது எதிராளி அணியான மும்பை இந்தியன்ஸை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று (ஏப்ரல்.21) நடைபெறும் ஆட்டத்தில் நேருக்கு நேர் சந்திக்கிறது. வரலாற்று புகழ் பெற்ற இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மீது பலத்த எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
இப்போது மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல்லின் ‘எல் கிளாசிகோ’ மோதலுக்கு முன்னதாக CSK அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே தென்னாப்பிரிக்காவுக்கு திரும்பி இருக்கிறார். அதாவது, டெவோன் கான்வே தனது காதலி கிம்மை திருமணம் செய்து கொள்ள டி20 லீக்கில் இருந்து வெளியேறி இருக்கும் நிலையில் அவர் ஏப்ரல் 25ம் தேதியன்று பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான அடுத்த போட்டிக்கு முன்னதாக சிஎஸ்கே அணியில் மீண்டும் இணைவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் கான்வே திருமணத்தை முன்னிட்டு CSK அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி உள்ளிட்ட சிஎஸ்கே அணியினர் மும்பையில் உள்ள டீம் ஹோட்டலில் திருமணத்திற்கு முந்தைய விருந்து நிகழ்ச்சியை கொண்டாடி இருக்கிறார்கள். அந்த வகையில் கான்வேயின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களின் வீடியோக்களை சிஎஸ்கே தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இது குறித்த பதிவில், ‘தேவனும் தேவியும்! கிம் & கான்வேக்கு என்றென்றும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துகள்!’ என CSK நிர்வாகம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.