அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – மத்திய அரசின் செயலி! பதிவிறக்கம் செய்வது எப்படி?

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு - மத்திய அரசின் செயலி! பதிவிறக்கம் செய்வது எப்படி?
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு - மத்திய அரசின் செயலி! பதிவிறக்கம் செய்வது எப்படி?
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – மத்திய அரசின் செயலி! பதிவிறக்கம் செய்வது எப்படி?

மத்திய அரசால் தொடங்கப்பட்ட மேரா ரேஷன் செயலி, நாட்டின் ஒரு நாடு ஒரு ரேஷன் கார்டு திட்டத்தின் அங்கமாகும். இந்த செயலியை எப்படி பயன்படுத்துவது, பதிவிறக்கம், முக்கிய அம்சங்கள் மற்றும் வழிமுறைகளை குறித்து இந்த பதிவில் காண்போம்.

மேரா ரேஷன் ஆப்:

பல புதிய விதிமுறைகளை கொண்டு வருவதன் மூலம் டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவிக்க இந்திய அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது. இவ்வாறு செய்வதால் பயனர்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்க உதவுவது மட்டுமல்லாமல், செயல்முறைகளை அங்கீகரிக்கவும் ஒழுங்குபடுத்தவும் அரசிற்கு பணி சுலபமாகியுள்ளது. இதற்கு ஒரு முக்கிய உதாரணமாக இருப்பது மேரா ரேஷன் செயலியாகும். மத்திய அரசு நாட்டில் ‘ஒரே நாடு ஒரு ரேஷன் கார்டு’ முறையை அமல்படுத்தியுள்ள நிலையில், இந்த செயலியின் பயன்பாடு அவசியமாகிறது. வாழ்வாதாரத்திற்காக புதிய இடங்களுக்குச் செல்பவர்கள் தங்கள் ரேஷன் அட்டையின் எந்த பகுதியிலும் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் மீண்டும் வெண்பாவுடன் இணைந்த பாரதி – வைரலாகும் வீடியோ!

இதனால் இந்த பதிவில் மேரா ரேஷன் செயலி பதிவிறக்கம், எப்படி பயன்படுத்துவது மற்றும் பல முக்கிய அம்சங்கள் குறித்து காணலாம்.

செயலியின் விளக்கம்:

இந்திய அரசின் ‘ஒரே நாடு ஒரு ரேஷன் கார்டு’ முயற்சியை எளிதாக்க, இந்த அமைப்பு நாட்டில் உள்ள சுமார் 69 கோடி தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (NFSA) பயனாளிகளை கொண்டுள்ளது. NFS சட்டத்தின் கீழ், PDS எனப்படும் பொது விநியோக முறையின் மூலம் 81 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு ஒரு கிலோவுக்கு 1-3 ரூபாய்க்கு ‘அதிக மானியத்துடன் கூடிய உணவு தானியங்களை’ அரசு வழங்கி வருகிறது. ஆனால் பல புலம்பெயர்ந்தோர் மற்ற மாநிலங்களுக்குச் செல்லும்போது இந்த பலனை அடைய முடியாத நிலை நீடித்து வந்தது. அதனால்தான் மேரா ரேஷன் ஆப் பயனாளிகள் எங்கு சென்றாலும் அவர்கள் சிரமமின்றி சலுகைகளைப் பெறுவதை உறுதி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியின் மூலம் அருகிலுள்ள நியாய விலைக் கடைகளை ஒரு பயனர் எளிதாகக் கண்டறிய முடியும். பயனர்கள் தங்கள் சமீபத்திய பரிவர்த்தனைகள் மற்றும் உரிமை பற்றிய விவரங்களையும் அறிந்து கொள்ள முடியும். நாடு முழுவதும் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரே நாடு ஒரு ரேஷன் கார்டு அமைப்பு மூலம் ரேஷன் கார்டு பெயர்வுத்திறன் சேவைகளை வழங்குகிறது.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு டிச.25 முதல் 9 நாட்கள் விடுமுறை? விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

பதிவிறக்கம் செய்யும் முறை:

மேரா ரேஷன் செயலி தற்போது ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கு மட்டுமே கிடைக்கிறது, மேலும் கூகுள் ப்ளே ஸ்டோருக்குச் சென்று “மேரா ரேஷன் கார்டு ஆப்” என்று பதிவிட்டு தேடி, எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேசிய தகவல் மையம் (NIC) உருவாக்கிய செயலி தற்போது ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் கிடைக்கிறது. இருப்பினும், புலம்பெயர்ந்தோர் பெரும்பாலும் செல்லும் இடங்களின் அடிப்படையில் இந்த செயலியில் 14 வெவ்வேறு மொழிகள் அறிமுகப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

முதலில் நீங்கள் செயலியை பதிவிறக்கம் செய்வதற்கு முன்னதாக ரேஷன் கார்டைப் பெற்ற மாநிலத்தின் உணவு, சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் விவகாரத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று உங்கள் ரேஷன் கார்டு செயலில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் அறிவிப்பு – கைரேகை பதிவில் சிக்கல்! முக்கிய கோரிக்கை!

  • கூகுள் ப்ளே ஸ்டோருக்குச் சென்று மேரா ரேஷன் கார்டு பயன்பாட்டைத் தேடுங்கள்.
  • மேரா ரேஷன் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்.
  • இப்போது, உங்கள் மொபைலில் பயன்பாட்டைத் திறந்து, உங்கள் ரேஷன் கார்டைப் பதிவு செய்ய வேண்டும்.
  • இதற்க்கு, பதிவு விருப்பத்தைத் தட்டி, உங்கள் ரேஷன் கார்டு எண்ணை உள்ளிட்டு “சமர்ப்பி” என்பதை அழுத்த வேண்டும்.
  • பயனர்கள் தங்களின் ரேஷன் கார்டு அல்லது ஆதார் அட்டை எண்ணை உள்ளிட்டு “உங்கள் உரிமை விருப்பத்தை அறியவும்” என்பதைத் தட்டுவதன் மூலம் தங்கள் உரிமையை சரிபார்க்கலாம்.
  • ONORC தகுதியை சரிபார்க்கவும் செயலி அனுமதிக்கிறது. தகுதி அளவுகோல்களைத் தேர்ந்தெடுத்து தேவையான தகவல்களை வழங்குவதன் மூலம் விவரங்களைச் சரிபார்த்து கொள்ளலாம்.

அம்சங்கள் மற்றும் நன்மைகள்:

  • NFSA பயனாளிகள் தங்கள் உணவு தானிய உரிமையை சரிபார்த்துக் கொள்ளலாம்.
  • உங்களின் கடந்த ஆறு மாத பரிவர்த்தனைகள் மற்றும் ஆதார் பதிவின் நிலையைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.
  • செயலி முழுமையான வெளிப்படைத் தன்மையுடன் இருக்கும்.
  • உங்கள் அருகிலுள்ள நியாய விலைக் கடை (FPS) அல்லது அருகிலுள்ள ரேஷன் டீலரை எளிதாக கண்டறியலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!