‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் மீண்டும் வெண்பாவுடன் இணைந்த பாரதி – வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் அடுத்த எபிசோடுகளில் வில்லி வெண்பாவின் என்ட்ரி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பாரதியுடன் வெண்பா இணைந்திருப்பதை போல வெளியான படப்பிடிப்பு வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பாரதி கண்ணம்மா
பல்வேறு புதிய திருப்பங்களுடன் வெளியாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மக்களின் மனம் கவர்ந்த ஒன்றாக இருந்து வருகிறது. ஒரு சிறிய சந்தேகம் காரணமாக இந்த சீரியலில் பல ஆண்டுகளாக பிரிந்திருந்த பாரதி, கண்ணம்மா இருவரும் தற்போது மீண்டுமாக ஒன்றாக சேர்ந்து வாழ துவங்கியுள்ளனர். இதற்கிடையில் பாரதி, கண்ணம்மாவை பிரிப்பதற்கு முயற்சிக்கும் வில்லி வெண்பா ஜெயிலில் இருந்து வரும் காரணத்தால் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் சற்று ஸ்வாரசியமான கதைக்களத்துடன் வெளியாகி கொண்டிருக்கிறது.
சந்தியாவிடம் காதலை சொன்ன சரவணன், மகனை நினைத்து பெருமைப்படும் சிவகாமி – இன்றைய எபிசோட்!
அந்த வகையில் பிரசவத்துக்காக ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து சிறிய இடைவேளை எடுத்திருந்த நடிகை பரினா மீண்டும் வெண்பாவாக களமிறங்க இருக்கிறார். கடந்த வாரத்தில் இருந்து வெண்பா சம்பந்தப்ப காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கண்ணம்மா மீது பயங்கரமான கோபத்துடன் இருந்து வரும் வெண்பா இப்போது சிறையில் இருந்து விடுதலையானால் என்னென்ன அட்டகாசங்களை செய்ய காத்திருக்கிறார் என்பதே ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு டிச.25 முதல் 9 நாட்கள் விடுமுறை? விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
இந்நிலையில் மீண்டுமாக ‘பாரதி கண்ணம்மா’ படப்பிடிப்பில் கலந்து கொண்டு வரும் நடிகை பரினா படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகள், வீடியோக்கள் என அனைத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது நடிகர் அருண் பிரசாத், பாரதியாக நடிக்கும் சில ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பரினா மீண்டும் பாரதியுடன் இணைந்துள்ள தகவலை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி இருக்கிறார். இந்த வீடியோ காட்சியானது ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்