முக்கியமான நிகழ்வுகள் செப்டம்பர் – 07

0

நிகழ்வுகள்:

  • 1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய மக்களை அச்சுறுத்தும் வகையில் ஜெர்மனியினர் லண்டன் நகரில் 300 தொன் கனவெடிகுண்டுகளையும், 13,000 எரிகுண்டுகளையும் வீசினர். 57 நாட்கள் தொடர்ந்து குண்டுவீச்சு இடம்பெற்றது.
  • 1942 – உக்ரேனில் 8,700 யூதர்கள் நாசி ஜேர்மனியரினால் கொலைக்களத்திற்கு அனுப்பப்பட்டனர்.
  • 1943 – டெக்சாசில் உணவுவிடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கிய 55 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1950 – ஸ்கொட்லாந்தில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 13 பேர் கொல்லப்பட்டனர். 116 பேர் காப்பாற்றப்பட்டனர்.
  • 1953 – நிக்கிட்டா குருசேவ் சோவியத் ஒன்றியத்தின் மத்திய குழு தலைவரானார்.
  • 1965 – இந்திய எல்லைகளில் சீனா தனது படைகளைக் குவிக்கப்போவதாக அறிவித்தது.

பிறப்புகள்:

  • 1533 – இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் (இ. 1603)
  • 1867 – சங்கரதாஸ் சுவாமிகள், தமிழக நாடகாசிரியர், நாடக நடிகர் (இ. 1922)
  • 1870 – அலெக்சாண்டர் குப்ரின், உருசிய நாடுகாண் பயணி, எழுத்தாளர் (இ. 1938)
  • 1877 – முகம்மது மாக்கான் மாக்கார், இலங்கை குடியேற்றக்கால அரசியல்வாதி, தொழிலதிபர் (இ. 1952)
  • 1911 – அப்பாக்குட்டி சின்னத்தம்பி, இலங்கை மருத்துவர் (இ. 1986)
  • 1925 – பி. பானுமதி, இந்திய நடிகை, பாடகி, இயக்குநர் (இ. 2005)

இறப்புகள்:

  • 1566 – முதலாம் சுலைமான், உதுமானியப் பேரரசர் (பி. 1494)
  • 1809 – முதலாம் இராமா, தாய்லாந்து மன்னர் (பி. 1737)
  • 1949 – எல்டன் மேயோ, ஆத்திரேலிய உளவியலாளர் (பி. 1880)
  • 1974 – சி. மூ. இராசமாணிக்கம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1913)
  • 1988 – வசுந்தரா தேவி, தமிழ்த் திரைப்பட நடிகை, பரதநாட்டியக் கலைஞர், கருநாடக இசைப் பாடகி (பி. 1917)
  • 1997 – மொபுட்டு செசெ செக்கோ, கொங்கோவின் அரசுத்தலைவர் (பி. 1930)
  • 2008 – நாகி நோடா, சப்பானிய இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1973)
  • 2014 – சு. கிருஷ்ணமூர்த்தி, தமிழக எழுத்தாளர் (பி. 1929)

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!