முக்கியமான நிகழ்வுகள் செப்டம்பர் – 05

0
240

முக்கியமான நிகழ்வுகள் செப்டம்பர் – 05

உலக ஆசிரியர் தினம்

Image result for teachers in tamilnadu

 • உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. கல்வித் தொடர்பாக மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த கல்வியாளர்களையோ, கல்வி சம்பந்தப்பட்ட சிறப்பான நிகழ்வுகளையோ நினைவுக்கூரும் வகையில் ஆசிரியர் தினம் வருகிறது.
 • தன்னுடைய வாழ்வில் ஆசிரியர் பணியை புனிதமாகக் கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக, ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயன்பட முடியும் என்பதை தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, ஒரு மாபெரும் தத்துவமேதையாக உலகிற்குத் தன்னை வெளிப்படுத்திய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை, இந்தியாவில் 1962 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
 • வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான். அத்தகைய எழுச்சிமிக்க மாணவர்களை ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உருவாக்க முடியும்.

டாக்டர் சர்வபள்ளி ராதா கிருஷ்ணன் பிறந்தநாள்

 • இந்திய குடியரசு தலைவராக விளங்கிய டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் செப்டம்பர் 5ம் தேதி பிறந்தார். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ம் தேதி ‘ஆசிரியர் தினம்’ என கொண்டாடப்படுகிறது.
 • 1952ம் ஆண்டு முதல் 1962ம் ஆண்டு வரை இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராக பதவி வகித்தார்.
 • அதன்பின்னர் 1962 முதல் 1967 வரை 5 ஆண்டுகள் இந்தியாவின் குடியரசுத் தலைவராகவும் பதவி வகித்தார்.
 • ராதாகிருஷ்ணனுக்கு இந்தியாவின் மிக உயர்ந்த குடிமகன் விருது பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது, 1984 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆர்டர் ஆப் மெரிட் மற்றும் 1963 ஆம் ஆண்டு மேரிட் விருது வழங்கப்பட்டது. அவர் ஏப்ரல் 17, 1975 இல் காலமானார், இன்றுவரை நோபல் பரிசுக்கு 11 முறை பரிந்துரைக்கப்பட்டார்.
 • இவர் 1975, ஏப்ரல் 17-ம் தேதி மறைந்தார். அவரது சேவையைப் பாராட்டி சென்னையில் அவர் இல்லம் அமைந்துள்ள சாலைக்கு ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை‘ எனப் பெயரிடப்படுள்ளது.
 • ஆசிரியர் தினத்தின் போது ஆசிரியர்களுக்கு மாநில விருதும், தேசிய விருதும் வழங்கிச் சிறப்பிக்கப்படுகின்றன. 1997-ம் ஆண்டு முதல் தமிழக அரசு நல்லாசிரியர் விருதை ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’ என்னும் பெயரில் வழங்கி வருகிறது.

அன்னை தெரேசா நினைவு தினம்

 • அன்னை தெரேசா ஆகஸ்ட் 26, 1910 அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
 • இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும்.
 • 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழை எளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர் இவர்.
 • முதலில் இந்தியா முழுவதும் பின்னர் வெளிநாடுகளுக்கும் பிறர் அன்பின் பணியாளர் சபையினை நிறுவினார்.
 • அன்னை தெரேசா செப்டம்பர் 5, 1997ல் இறந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here