முக்கியமான நிகழ்வுகள் செப்டம்பர் – 23

0

முக்கியமான நிகழ்வுகள் செப்டம்பர் – 23

நவநீதம் பிள்ளை பிறந்தநாள் 

  • நவநீதன் (நவி) பிள்ளை, மனித உரிமைகளுக்கான ஐ.நா.வின் உயர் ஆணையர் 1941 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 அன்று டர்பனில் உள்ள கிளாரிவுட் என்ற இடத்தில் பிறந்தார்.
  • 1941 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் பிறந்த ஒரு தமிழரான நவநீதம் பிள்ளை ஓர் இந்திய வம்சாவளிப் பெண்.
  • தென்னாப்பிரிக்காவின் இனவெறி ஆட்சி முடிவுக்கு வந்ததன் பிறகு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்துக்கு தேர்வுசெய்யப்பட்ட வெள்ளையினத்தவரல்லாத முதல் நீதிபதி என்ற பெருமைக்குரியவர்.
  • இவர் 2008 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையராக பணியாற்றிய தென் ஆப்பிரிக்க நீதிபதியாகவும் இருந்தார்.
  • 1992 இல் பெண்கள் உரிமைக்காகப் போராடும் “சமத்துவம் இப்போது”(Equality Now) என்ற அமைப்பைத் தோற்றுவித்தார்.
  • 1967 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் நட்டால் மாகாணத்தின் முதலாவது பெண் சட்டத்தரணியாக அவர் பணியாற்றத் தொடங்கினார். அவர், தென்னாபிரிக்க விடுதலைப் போராளிகளுக்கும், அவரது கணவர் உட்பட்ட தென்னாபிரிக்க விடுதலைச் செயற்பாட்டாளர்களுக்கும் ஒரு பாதுகாவலராக கடமையாற்றியவர்.

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!