முக்கியமான நிகழ்வுகள் நவம்பர் – 30

0
முக்கியமான நிகழ்வுகள் நவம்பர் - 30
முக்கியமான நிகழ்வுகள் நவம்பர் - 30

கணினி பாதுகாப்புதினம்

  • கணினி பாதுகாப்பு தினம் 1988 ஆம் ஆண்டில் தொடங்கியது, கணினிகள் அந்நாட்களில் வீடுகளில் காணப்படாவிட்டாலும் கூட, அவை பொதுவானதாகிவிட்டன. 1980 களில் கணினிகளின் பயன்பாடு குறிப்பாக வணிகத்திலும் அரசாங்கத்திலும் தான்  அதிகரித்து இருந்தது. அதோடு இணையம் பயன்படுத்த ஆரம்பித்த  காலமாக இருந்தது.
  • இந்த நாட்களில், ஸ்மார்ட் போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் கணினிகள் போன்ற மின்னணு சாதனங்கள் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக அமைந்தது. முன்பை விட தகவல்தொடர்பு எளிதாகவும் திறமையாகவும் மாறிவிட்டாலும், இந்த தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு குறித்த புதிய பிரச்சனைகளையும் கொண்டு வந்துள்ளன. உங்கள் ஆன்லைன் தரவைப் பாதுகாக்கவும் பாதுகாப்பாக வைத்திருக்கவும்  ஒரு விடுமுறை கூட அர்ப்பணிக்கப்பட்டுள்ளது – இது கணினி பாதுகாப்பு தினம் என்று அழைக்கப்படுகிறது.

ஜெகதீஸ் சந்திர போஸ் பிறந்த தினம்

பிறப்பு:

  • நவம்பர் 30, 1858ல் வங்காளதேசத்தில் பிறந்தார்.
See page for author [Public domain], via Wikimedia Commons

சிறப்பு:

  • தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர்.
  • வானொலி அறிவியலின் முன்னோடிகளில் ஒருவர் என IEEE அதிகாரப்பூர்வமாக நூறு வருடங்கள் கழித்து அறிவித்தது.
  • 1885ல் கொல்கத்தா மாநிலக்கல்லூரியில் இயற்பியல் துறையில் துணைப் பேராசிரியராகச் சேர்ந்தார்.
  • மார்க்கோனிக்கு முன்னரே கம்பியில்லா ஒலிபரப்பு அமைப்பினை போஸ் கண்டுபிடித்தார் இருப்பினும் அஃது அறிவியல் உலகினரால் கவனிக்கப் படாமல் போய்விட்டது.
  • 22 மி.மி. முதல் 5 மி.மி. வரையான அலைநீளம் கொண்ட மின்காந்த அலைகளை உருவாக்கவும் அவற்றின் பகுதி-ஒளித்தன்மைகளைக் கண்டறியக் கூடியதுமான ஒரு கருவியைப் போஸ் கண்டுபிடித்தார்.
  • அனைத்து வகையான தூண்டல்களுக்குமான பொதுவான மின் துலங்கல்களையும் கண்டறிந்தார்.
  • போஸ் மிகச் சிறந்த இரு நூல்களை இயற்றி உலகப்புகழ் பெற்றார்.உயிரினங்களின் மற்றும் உயிரற்றவைகளின் துலங்கல் தன்மைஎன்பது ஒரு நூல்.தாவரங்களின் நரம்புச் செயலமைவு என்பது மற்றொரு நூல்.
By The Birth Centenary Committee, printed by P.C. Ray (Acharya Jagadis Chandra Bose, Birth Centenary) [Public domain, Public domain or Public domain], via Wikimedia Commons

இறப்பு:

  • 23 நவம்பர் 1937ல் இறந்தார்(வயது 78).

ஜானகி இராமச்சந்திரன் பிறந்த தினம்

பிறப்பு:

  • நவம்பர் 30, 1923ல் பிறந்தார்.
By Ruwanwiki [CC BY-SA 4.0 (https://creativecommons.org/licenses/by-sa/4.0)], from Wikimedia Commons

சிறப்பு:

  • தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர்.
  • வைக்கம் நாராயணி ஜானகி என்னும் வி. என். ஜானகி முன்னாள் திரைப்பட நடிகை.
  • பிரபல நடிகரும் முன்னாள் தமிழக முதல்வருமாகிய எம். ஜி. இராமச்சந்திரனுக்கு மூன்றாவது மனைவி ஆவார்.
  • M.G.R 1987 டிசம்பர் 24ம் நாள் மரணமடைந்த பின்னர் ஜானகி 1988 ஜனவரி 7ம் நாள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக்கப்பட்டார். ஆனால் சட்ட மன்றத்தில் தனது தலைமை மீதான தனது கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையை மெய்ப்பிக்க இயலாததால் 1988 ஜனவரி 30ம் நாள் ஆட்சிப்பொறுப்பை இழந்தார்.

இறப்பு:

  • மே 19, 1996ல் இறந்தார்(வயது 73).

இந்திர குமார் குஜரால் நினைவு தினம்

பிறப்பு:

  • டிசம்பர் 4,1919ல் மேற்கு பஞ்சாபிலுள்ள ஜீலம் நகரில்பிறந்தார்.இது இப்போது பாகிஸ்தானில் உள்ளது.
By Biswarup Ganguly [CC BY-SA 3.0 (https://creativecommons.org/licenses/by-sa/3.0) or GFDL (http://www.gnu.org/copyleft/fdl.html)], from Wikimedia Commons

சிறப்பு:

  • இந்தியாவின் 12வது பிரதமர் ஆவார். இந்திய சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற இவர் 1942ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
  • குஜ்ரால் 1980களின் நடுவில் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி ஜனதா தளத்தில் இணைந்தார்.
  • 1989 தேர்தலில் ஜலந்தர் தொகுதியிலிருந்து பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • வி.பி.சிங் அமைச்சரவையில் வெளியுறவு துறை அமைச்சராக பணி புரிந்தார்.
  • 1996 தேர்தல் முடிந்து தேவ கௌடா தலைமையில் ஐக்கிய முன்னணி அரசமைந்த பொழுது இரண்டாம் முறையாக வெளியுறவு துறை அமைச்சராக பணி புரிந்தார். அப்போது இவர் குஜ்ரால் திட்டம் என்பதனை முன்மொழிந்தார்.இத்திட்டம் அண்டை நாடுகளுடன் நல்லிணக்கத்தை பேணுவதாகும்.
  • ஐக்கிய முன்னணி குஜ்ராலை புதிய தலைவராக தேர்ந்தெடுத்தது அதைத் தொடர்ந்து குஜ்ரால் 1997 ஏப்ரல் 21 ல் பிரதமராக பதவியேற்றார்.
  • 1997 நவம்பர் 28 காங்கிரஸ் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டதை தொடர்ந்து குஜ்ரால் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
  • தேர்தல் முடிந்து புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை குஜ்ரால் இடைக்கால பிரதமராக நீடித்தார். இடைக்கால பிரதமராக இருந்த 3 மாதங்களையும் சேர்த்து குஜ்ரால் 11 மாதங்கள் பிரதமராக பதவியில் இருந்தார்.
  • மீண்டும் பிரதமராக இருந்தபொழுது 1980 மற்றும் 1990 தொடக்கத்தில் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைக்கான செலவுகளை பஞ்சாப் அரசுடன் இந்திய நடுவண் அரசும் பகிர்ந்து கொள்ளும் என்று அறிவித்தார். இது பஞ்சாப் மீதான பொருளாதார அழுத்தத்தை பெருமளவு குறைத்தது.

இறப்பு:

  • 30 நவம்பர்  2012ல் இறந்தார்.

நிகழ்வுகள்

  • 1962 – பர்மாவைச் சேர்ந்த யூ தாண்ட் ஐக்கிய நாடுகள் சபையின் 3வது பொதுச் செயலராகத் தேர்வானார்.
  • 1995 – வளைகுடாப் போர் முடிவுக்கு வந்தது.
  • 1872 – உலகின் முதலாவது அனைத்துலக கால்பந்துப் போட்டி கிளாஸ்கோவில் ஸ்காட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் இடம்பெற்றது.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!