முக்கியமான நிகழ்வுகள் நவம்பர் – 23

0
முக்கியமான நிகழ்வுகள் நவம்பர் - 23
முக்கியமான நிகழ்வுகள் நவம்பர் - 23

சர்வதேச ஆரா விழிப்புணர்வு தினம்

  • சர்வதேச ஆரா விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 4 ஆம் தேதி சனிக்கிழமை  கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு  சர்வதேச ஆரா விழிப்புணர்வு நாள் நவம்பர் 23 அன்று கொண்டாடப்படுகிறது.
  • ஆரா என்பது ஒரு  மனிதனிடமிருந்தோ அல்லது பொருளிலிருந்தோ வெளிப்படும் ஒரு ஆற்றல் அல்லது தரம். மனித  ஆரா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், மக்களின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை அவர்களின் ஆரா எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கும் சர்வதேச ஆரா விழிப்புணர்வு தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.
  • ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதற்கு ஆரா பெரும்பாலும் பொறுப்பானவை என்பதால்  நம்முடைய வாழ்வில் அதிக நலன்களை வழங்கி பெரும் பங்களிக்கிறது.

சுரதா பிறந்த தினம்

பிறப்பு:

  • நவம்பர் 23, 1921ல் தஞ்சை மாவட்டத்திலுள்ள பழையனூரில் பிறந்தார்.

இயற்பெயர்: இராசகோபாலன்

சிறப்பு:

  • தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார்.
  • தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர்.
  • செய்யுள் மரபு மாறாமல் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.
  • சீர்காழி அருணாசல தேசிகர் என்பவரிடம் தமிழ் இலக்கணங்களைக் கற்றார்.
  • சுரதாவின் சொல்லடா என்னும் தலைப்பில் அமைந்த கவிதையைப் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த பொன்னி என்னும் இதழ் 1947 ஏப்ரல் திங்கள் இதழில் வெளியிட்டு இவரைப் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞராக அறிமுகம் செய்தது.
  • பாவேந்தரின் புரட்சிக்கவி நாடகம் தந்தை பெரியார், கலைவாணர் முன்னிலையில் நடைபெற்ற பொழுது நாடகத்தில் அமைச்சர் வேடத்தில் நடித்த பெருமைக்கு உரியவர் சுரதா.
  • அரசவைக் கவிஞராக நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை இருந்தபொழுது அவரின் உதவியாளராக இருந்தார்.
  • தலைவன் இதழின் துணை ஆசிரியராக பணியாற்றினார்.கவிஞர் திருலோக சீதாராமின் சிவாஜி இதழில் தொடக்கக் காலத்தில் சுரதாவின் கவிதைகள் வெளிவந்துள்ளன.
  • திருச்சிராப்பள்ளி வானொலியில் சுரதாவின் பல கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. 1944ம் ஆண்டு மங்கையர்க்கரசி என்னும் திரைப்படத்திற்கு முதன்முதல் உரையாடல் எழுதினார் 100க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார்.
  • சுரதாவின் முதல் நூல் சாவின் முத்தம்.இதனை வி.ஆர்.எம்.செட்டியார் என்பவர் 1946ல் மார்ச் மாதம் வெளியிட்டார்.
  • 1956ல் பட்டத்தரசி என்ற சிறு காவிய நூலை வெளியிட்டார்.
  • 1954ல் கலைஞர் கருணாநிதியின் முரசொலி இதழில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வந்தார்.
  • 1955ல் காவியம் என்ற வார இதழைத் தொடங்கினார்.இவ்விதழைத் தொடர்ந்து இலக்கியம் (1958), ஊர்வலம் (1963), விண்மீன் (1964), சுரதா (1988) எனக் கவிதை வளர்ச்சிக்குப் பல இதழ்களை வெளியிட்டார்.
  • 1971ம் ஆண்டு ஆனந்தவிகடன் இதழில் சுரதா திரைப்பட நடிகைகளின் அகவாழ்க்கையைப் பற்றி எழுதிய கவிதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
  • பின்னாளில் இக்கவிதைகள் தொகுக்கப்பட்டு சுவரும் சுண்ணாம்பும் என்னும் பெயரில் நூல் வடிவம் பெற்றுள்ளது-1974.

விருதுகள்:

  • 1969ல் தேன்மழை என்ற கவிதை நூலுக்குத் தமிழக அரசின் பரிசு கிடைத்தது.
  • 1972ல் தமிழக அரசு கலைமாமணி என்னும் விருது வழங்கிச் சிறப்பித்தது.
  • 1978ல் ம.கோ.இரா. தலைமையில் அமைந்த அரசு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கிச் சிறப்பித்தது.
  • தமிழக அரசு சுரதாவின் நூல்களை நாட்டுடைமையாக்கி அவர் குடும்பத்திற்குப் பத்து இலட்சம் ரூபாய் பரிவுத்தொகை வழங்கியுள்ளது-2007.
  • 1982ல் சுரதாவின் மணிவிழாவையொட்டி நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் நடந்த விழாவில் ரூபாய் 60,000 பரிசாகத் தரப்பெற்றது.
  • 1982ல் சுரதாவின் கவிதைப் பணிகளைப் பாராட்டிக் குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடந்த விழாவில் கவியரசர் பட்டம் வழங்கப்பட்டது.
  • 1987ல் மலேசியாவில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டிற்குச் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பெற்றார்.
  • 1990ல் கலைஞர் அரசு பாரதிதாசன் விருதினைச் சுரதாவுக்கு வழங்கியது.
  • 1990ல் கேரளாவில் மகாகவி குமரன் ஆசான் விருது சுரதாவுக்குக் கிடைத்தது.
  • சுரதாவின் தேன்மழை நூலுக்குத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ரூபாய் ஒரு இலட்சம் & இராசராஜன் விருது வழங்கப்பட்டுள்ளது.
  • 29.09.2008ல் சென்னையில் சுரதாவுக்கு நினைவுச்சிலை நிறுவப்பட்டு கலைஞர் கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப் பெற்றுள்ளது.
  • சுரதாவின் கவிதைகள் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களின் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன. சுரதாவின் கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

சுரதாவின் படைப்புகள்:

  • தேன்மழை
  • துறைமுகம்
  • அமுதும் தேனும்
  • சுவரும் சுண்ணாம்பும்
  • எப்போதும் இருப்பவர்கள்
  • சாவின் முத்தம்
  • புகழ்மாலை

இறப்பு:

  • ஜூன் 19, 2006ல் இறந்தார்.

ஜெகதீஸ் சந்திர போஸ் நினைவு தினம்

பிறப்பு:

  • நவம்பர் 30, 1858ல் வங்காளதேசத்தில் பிறந்தார்.
By The Birth Centenary Committee, printed by P.C. Ray (Acharya Jagadis Chandra Bose, Birth Centenary) [Public domain, Public domain or Public domain], via Wikimedia Commons

சிறப்பு:

  • தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர்.
  • வானொலி அறிவியலின் முன்னோடிகளில் ஒருவர் என IEEE அதிகாரப்பூர்வமாக நூறு வருடங்கள் கழித்து அறிவித்தது.
  • 1885ல் கொல்கத்தா மாநிலக்கல்லூரியில் இயற்பியல் துறையில் துணைப் பேராசிரியராகச் சேர்ந்தார்.
  • மார்க்கோனிக்கு முன்னரே கம்பியில்லா ஒலிபரப்பு அமைப்பினை போஸ் கண்டுபிடித்தார் இருப்பினும் அஃது அறிவியல் உலகினரால் கவனிக்கப் படாமல் போய்விட்டது.
  • 22 மி.மி. முதல் 5 மி.மி. வரையான அலைநீளம் கொண்ட மின்காந்த அலைகளை உருவாக்கவும் அவற்றின் பகுதி-ஒளித்தன்மைகளைக் கண்டறியக் கூடியதுமான ஒரு கருவியைப் போஸ் கண்டுபிடித்தார்.
  • அனைத்து வகையான தூண்டல்களுக்குமான பொதுவான மின் துலங்கல்களையும் கண்டறிந்தார்.
  • போஸ் மிகச் சிறந்த இரு நூல்களை இயற்றி உலகப்புகழ் பெற்றார்.உயிரினங்களின் மற்றும் உயிரற்றவைகளின் துலங்கல் தன்மைஎன்பது ஒரு நூல்.தாவரங்களின் நரம்புச் செயலமைவு என்பது மற்றொரு நூல்.
By w:Patrick Geddes (https://archive.org/details/cu31924012222778) [Public domain], via Wikimedia Commons

இறப்பு:

  • 23 நவம்பர் 1937ல் இறந்தார்(வயது 78).

பிபோனச்சி தினம்

  • நவம்பர் 23 பிபோனச்சி தினமாக கொண்டாடப்படுகிறது ஏனெனில் இந்த தேதியானது மாதம்/ தேதி வடிவத்தில் (11/23) எழுதப்பட்டிருக்கும் போது தேதியிலுள்ள இலக்கங்கள் பிபோனச்சி வரிசையை உருவாக்குகின்றன: 1,1,2,3.
  • 13ம் நூற்றாண்டில் இத்தாலியக் கணித மேதை Leonardo of Pisa ( Leonardo Fibonacci என்றும் பெயர் உண்டு) என்பவர் வகுத்த எண் வரிசைதான் இந்த Fibonacci number.
  • 0 இல் தொடங்கி, 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34, 55, 89, 144 என்று செல்கிறது இந்த எண் வரிசை.ஒரு எண் தனக்கு முன் உள்ள எண்ணோடு கூட்டப்பட்டு அந்தக் கூட்டுத் தொகையே அடுத்த எண்ணாக இந்த வரிசையில் அமர்கிறது.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!