முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி-28

0

முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி-28

லாலா லஜபதி ராய் பிறந்த தினம்

பிறப்பு:

  • ஜனவரி 28,1865ல் பிறந்தார்.
By Internet Archive Book Images [No restrictions], via Wikimedia Commons

சிறப்பு:

  • ஒரு எழுத்தாளரும் அரசியல் தலைவரும் ஆவார்.
  • இந்திய விடுதலைப் போராட்டத்தில் இவரது பங்குக்காக இவர் பெரிதும் மதிக்கப்படுகிறார்.
  • இவரை மக்கள் பஞ்சாப் சிங்கம் எனவும் அழைப்பதுண்டு.
  • லால்-பால்-பால் என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் இவரும் ஒருவராவார். மற்ற இருவர் பால கங்காதர திலகர் மற்றும் பிபின் சந்திர பால் ஆவர்.
  • ‘லாலா லஜபத் ராய்’ பஞ்சாப் தேசிய வங்கி மற்றும் லட்சுமி காப்புறுதி கம்பெனி ஆகியவற்றை நிறுவியவரும் ஆவார்.
  • பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறைகளை எதிர்த்தார்.முழு அரசியல் விடுதலை மட்டுமே தீர்வு என்று முழங்கினார்.
  • பிரிட்டிஷ் அரசு இவரைக் கைது செய்து பர்மாவுக்கு நாடு கடத்தியது. இதை எதிர்த்து நாடே கொந்தளித்தது. 6 மாதங்களில் விடுதலையானார்.
  • இவர் 1888ம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.
  • 1905ம் ஆண்டின் வங்காளப் பிரிவினை இவரது தேசிய உணர்வைத் தூண்டியதுடன், விடுதலைக்காகப் போராடும் பாதையில் அவரை உறுதியாக நிற்கவும் வைத்தது.
  • ‘யங் இந்தியா’ என்ற நூலை எழுதினார். வெளியிடப்படும் முன்பே இந்தியா & பிரிட்டனில் இந்த நூலை பிரிட்டிஷ் அரசு தடைசெய்தது.
  • இவர் எழுதிய ‘அன்ஹேப்பி இந்தியா’ என்ற நூல் ஆங்கிலேயர் ஆட்சியால் துன்புறும் இந்தியர்களின் நிலையைப் படம்பிடித்துக் காட்டியது.
  • காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டார்.ஒத்துழையாமை இயக்கத்தை காந்திஜி கைவிட்டதால், சுயராஜ்ஜியக் கட்சியில் சேர்ந்தார்.
  • 1928-ல் லாகூர் வந்த சைமன் குழுவுக்கு எதிராக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
By Young India [Public domain], via Wikimedia Commons

இயக்கம்: இந்திய விடுதலை இயக்கம்

இறப்பு:

  • 17 நவம்பர் 1928,ல் இறந்தார்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!