முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி-27

0

முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி-27

சர்வதேச இன அழிப்பு நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூறும் நாள்

  • இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஐரோப்பாவில் வாழ்ந்த யூத மக்களுக்கு எதிராக ஹோலோகாஸ்ட் எனப்படும் யூத இன ஒழிப்பு மற்றும் படுகொலையை நாஜிக்கள் செய்தனர்.
  • சுமார் 60 லட்சம் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
  • சோவியத் படைகள் 1945ஆம் ஆண்டு ஜனவரி 27 அன்று நாஜி மரண முகாமில் இருந்த யூதர்களை விடுவித்தது. இனப்படுகொலை மீண்டும் நடக்காமல் இருக்க ஐ.நா. அமைப்பு இத்தினத்தை கடைப்பிடிக்கிறது.

லூயிஸ் கரோல் பிறந்த தினம்

பிறப்பு:

  • ஜனவரி 27, 1832ல் பிறந்தார்.
[Public domain or Public domain], via Wikimedia Commons

சிறப்பு:

  • லூயிஸ் கரோல் என்ற புனைப்பெயர் கொண்டவர் சார்ல்ஸ் லுட்விக் டாக்ஸ்டன்.
  • இவர் பிரிட்டனில் வசித்த ஆங்கில எழுத்தாளர், கணிதவியலாளர், கிறித்துவப் பாதிரியார் மற்றும் புகைப்படக் கலைஞர்.
  • அவருடைய மிகவும் புகழ்பெற்ற எழுத்துக்கள் ஆலிஸ்’ஸ் அட்வென்சர்ஸ் இன் வொண்டர்லேண்ட், அதன் தொடர்ச்சியான தி டூ தி லுங்-கிளாஸ், கவிதையான “ஜபெர்பொகி”, மற்றும் தி வேட்டும் ஆஃப் தி ஸ்னார்க் என்னும் கவிதை ஆகியவை அடங்கும் .
  • இவர் எழுதிய சிறுவர்களுக்கான இலக்கிய நூல்கள், தீவிர இலக்கியவாதிகளான ஜேம்ஸ் ஜாய்ஸ் மற்றும் ஜார்ஜ் லூயி போர்ஹே போன்றவர்களிடத்தும் மிகப் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது.

கண்டுபிடிப்பு:

  • லூயிஸ் 1889ம் ஆண்டில் “வொண்டர்லேண்ட் தபால் முத்திரை வழக்கு கண்டுபிடித்தார்.

படைப்புகள்:

  • ஆலிஸின் அற்புத உலகம் (Alice’s Adventure in the wonderland)
  • என் கண்ணாடியின் ஊடே (Through my Looking-Glass)
  • யூக்ளிட் & அவரது நவீன நிலைகள்
  • தி அல்பாபெட் சைபர்

இறப்பு:

  • ஜனவரி 14, 1898ல் இறந்தார்.

ரா. வெங்கட்ராமன் நினைவு தினம்

பிறப்பு:

  • டிசம்பர் 2, 1910 ல் பிறந்தார்.
By Jaisingh rathore at English Wikipedia [GFDL (http://www.gnu.org/copyleft/fdl.html), CC-BY-SA-3.0 (http://creativecommons.org/licenses/by-sa/3.0/) or CC BY 2.5 (https://creativecommons.org/licenses/by/2.5)], via Wikimedia Commons

சிறப்பு:

  • இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தவர்.
  • இவர் 1987 முதல் 1992 வரை பதவியில் இருந்தார்.இந்திய அரசியலில் நெருக்கடியான காலகட்டம்.
  • இலங்கைச் சிக்கல், போபர்ஸ் ஊழல், ராஜீவ் காந்தி படுகொலை, பங்குசந்தை ஊழல் என பல்வேறு சிக்கல்களில் நாடு சிக்கியிருந்த ஐந்தாண்டுகளில் 4 பிரதமர்களுடன் பணியாற்றியவர்.
  • பாகிஸ்தானுக்கு பயணம் செய்த முதல் இந்தியக் குடியரசுத் தலைவர். அதற்கு முன் நான்கு ஆண்டுகள் துணைக் குடியரசுத் தலைவராக இருந்தார்.
  • இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். பல அமைச்சர் பதவிகளையும் வகித்து இருக்கின்றார்.
  • இவர் விடுதலைப் போராட்டத்திலும் தீவிரமாக ஈடுபட்டவர். 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது வேலூரில் 2 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர்.
  • தோட்டத் தொழிலாளர்கள், ரயில்வே தொழிலாளர்கள்,உழைக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு சங்கம் அமைத்தவர்.
  • சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் மாநாட்டில் இந்திய பிரதிநிதிகளின் தலைவராக செயல்பட்டவர்.

வகித்த பதவிகள்:

  • நாடாளுமன்ற காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர்
  • தமிழக காங்கிரஸ் கட்சியின் செயலாளர்
  • ஆவடி காங்கிரஸ் மாநாட்டு வரவேற்புக் குழு செயலாளர்
  • திட்டக்குழுவில் தொழில் துறை, தொழிலாளர் நலன், மின்சாரம், போக்குவரத்து, தகவல் தொடர்பு, ரயில்வே ஆகிய துறைகளுக்கு பொறுப்பு வகித்தார்.
  • நடுவண் நிதியமைச்சர்.(1980-82)
  • பாதுகாப்பு அமைச்சர் (1982-84)
  • குடியரசுத் துணைத்தலைவர் (1984)
  • குடியரசுத் தலைவர் 1987-1992

இறப்பு:

  • ஜனவரி 27, 2009ல் இறந்தார்.

மொசார்ட் பிறந்த தினம்

பிறப்பு:

  • ஜனவரி 27,1756ல் பிறந்தார்.
[Public domain], via Wikimedia Commons

சிறப்பு:

  • ஒரு மாபெரும் இசை மேதை.
  • 17ஆவது அகவையில் சால்சுபர்கு அரச இசைக்கலைஞராக நியமிக்கப்பட்டார்.
  • மொசார்ட் விளைவு-மொசார்ட் என்பவரின் சொனாட்டா(Sonata) இசையை 10 நிமிடம் கேட்டால் சாதாரணப் பொருட்களுடன் தொடர்புடைய காலம் மற்றும் இடம் பற்றிய கற்பனைத் திறன் தற்காலிகமாக மேம்படுகிறது என்ற கருத்தாகும்.
  • 1993ல் ரௌச்சர்(Rauscher) என்ற ஆய்வாளர் இதனைக் கூறினார்.இந்த அகநிலை மாற்றம் 10 -15 நிமிடங்களுக்கு மட்டுமே இருந்தது.
  • கற்றலில் குறைபாடு டிஸ்லெக்சியா, கவனச்சிதைவு நோய், ஆட்டிசம், மனமற்றும் உடலியக்கக் குறைபாடுடையோர் மன நோய் உள்ளவர்கள் இசையால் ஓரளவு குணமடைகின்றார்கள்.

இறப்பு:

  • டிசம்பர் 5,1791ல் இறந்தார்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!