முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி – 14

0

முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி – 14

போகி பண்டிகை

தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது.

 • மார்கழி மாதத்தின் இறுதி நாளையே போகிப் பண்டிகையாக தமிழ் நாட்காட்டியில் குறிப்பிடுகிறார்கள்.
 • பரவலாக போகிப் பண்டிகை தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.

 • இந்த நாள் ‘பழையன கழித்து, புதியன புகவிடும்’ நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், பயனற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது.
 • பழந்துயரங்களை அழித்துப் போக்கும் இப்பண்டிகையைப் “போக்கி’ என்றனர்.
 • அந்தச் சொல் நாளடைவில் மருவி “போகி’ என்றாகிவிட்டது. அக்கால வழக்கப்படி ஆண்டின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. கடந்த ஆண்டுக்கு நன்றி சொல்லும் நாள் போகிப் பண்டிகையாகும்.

கார் பந்தய வீரர் நாராயண் (நரேன்) கார்த்திகேயன் பிறந்த தினம்

(ஜனவரி 14, 1977)

 • உலக மோட்டர் பந்தயங்களிலேயே முதன்மையானதாக கருதப்படும் எஃப் 1 போட்டிகளில் கலந்து கொள்ளும் முதல், மற்றும் ஒரே இந்தியர் ஆவார்.
 • ஒரு கார் பந்தய வீரராவார்.
 • சென்னையில் பிறந்தவரும் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர்.
 • சில சமயங்களில் தவறாக நரேன் கார்த்திகேயன் என்றும் அழைக்கப்படுகிறார்.

பார்முலா 3 பந்தயங்கள்:

 • 1998ல் பிரிட்டிஷ் பார்முலா 3 பந்தயங்களில் கார்லின் அணியின் சார்பாக கலந்து கொண்டார். இப்பந்தயங்களில் இரண்டு முறை மூன்றாம் இடத்தில் முடித்தார்.
 • 1999லும் இப்பந்தயங்களில் கலந்து கொண்டு, இரண்டு போட்டிகளில் முதலிடத்தைப் பிடித்தார். 2000 வருடத்திலும் இப்பந்தயங்களில் கலந்து கொண்டு சிறப்பான முறையில் ஓட்டினார்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here