முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி – 13

0
315

முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி – 13

ராகேஷ் சர்மா பிறந்த தினம்

(1949 ஜனவரி 13)

 • விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்தியர்.
 • இவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பாட்டியாலா என்னும் ஊரில் பிறந்தவர்.
 • ராகேஷ் ஷர்மா விண்வெளிக்குச் சென்ற 138-வது மனிதராவார்.
 • இவர் விண்வெளியில் 8 நாட்கள் தங்கியிருந்தார்.

கல்வி:

 • பிறந்தது பஞ்சாப் என்றாலும் தனது பள்ளிப் படிப்பை ஐதராபாத்தில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளியில் முடித்தார்.
 • அதன்பின்னர் 1966-இல் அவர் தேசிய இராணுவப் பள்ளியில் விமானப் படைப் பிரிவில் மாணவராக சேர்ந்து, படிப்பை முடித்தார்.

விருதுகள்:

 • ராகேஷ் சர்மாவுக்கு அவரது பணிகளை பாராட்டி அசோகா சக்ரா விருது கிடைத்தது. சோவியத் ரஷ்யாவின் நாயகன் என்னும் விருதையும் பெற்றார்.

விண்வெளி வீரர் :

 • நூற்றுக்கும் மேற்பட்டோர் விண்வெளிப் பயணத்திற்கு விண்ணப்பத்தில் ராகேஷ் 1982ஆம் ஆண்டு செப்டம்பர் 20 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 • சுமார் ஒன்றரை ஆண்டுகள் அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 1984ஆம் ஆண்டு ஏப்ரல் 2 அன்று அவர் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார்.
 • அவருடன் ரஷ்ய விண்வெளி வீரர்கள் இருவரும் சோயுஸ் டி 11 விண்கலத்தில் பயணம் மேற்கொண்டனர்.
 • சல்யூட் 7 என்ற விண்வெளி மையத்தில் அவர் தங்கி இருந்தார். அங்கே பல அறிவியல் ஆய்வுகளை இந்தக் குழு மேற்கொண்டது.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here