முக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி-7

0

முக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி-7

ஜி. எச். ஹார்டி பிறந்த தினம்

  • ஜி. எச். ஹார்டி(G. H. Hardy) பிப்ரவரி 7,1877 அன்று இங்கிலாந்தில் உள்ள கிரேன்லே, சர்ரேயில் பிறந்தார்.
  • இவர் இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கணித வல்லுநர்.
  • எண் தேற்றம், கணிதப் பகுப்பாய்வு ஆகிய துறைகளில் சிறந்த அறிஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

  • பள்ளி கல்விக்கு பின்னர் ஆர்டி அவரது கணித திறனுக்காக, வின்செச்டர் கல்லூரி சென்று, கல்வி கற்க உதவித்தொகை வழங்கப்பட்டது.
  • 1896 ஆம் ஆண்டு அவர் கேம்ப்ரிட்ச் பல்கலைக்கழகத்தின் ட்ரினிட்டி கல்லூரியில் கணிதவியல் பிரிவில் சேர்ந்தார் இரண்டு ஆண்டு கல்விக்குப்பின் அவர் நான்காவது இடம் பெற்றார். பல்கலைக்கழகத்தில் பயின்ற போது ஆர்டி “கேம்பிரிட்ச் திருத்தூதர்கள்” என்று அழைக்கப்பட்ட அறிவார்ந்த கமுக்கக் குழுவில் ஒரு உறுப்பினராக இணைந்தார்.
  • 1906 முதல் 1942 வரையிலான காலகட்டத்தில் அவர் பல்வேறு கல்லூரிகளில் ஆசிரியராக பணியாற்றினார். இக்காலத்தில் கேம்பிரிட்ச் பல்கலைக்கழகத்தில் அவரின் வாழ்க்கை, இராமானுசனுடனான அவரின் நட்பு முதலியவறை இடேவிட் லேவிட் என்பவர் 2007 ஆம் ஆண்டு தி இந்தியன் கிளார்க் என்ற தலைப்பில் ஒரு புதினமாக வெளியிட்டார்.

சிறப்புகள்

  • இவர் 1940 ஆம் ஆண்டு அவர் எழுதிய கணித அழகியல் சார்ந்த “ஒரு கணிதவியலாலரின் தன்னிலை விளக்கம்” என்ற கட்டுரைக்காக அவர் பெரிதும் மற்றவர்களால் அறியப்படுகின்றார்.
  • மேலும் 1914 ஆம் ஆண்டு அவர் இந்திய கணிதவியல் மேதையான சீனிவாச இராமானுசன் அவர்களுடன் நட்பு பூண்டு அவருக்கு வழிகாட்டியாக விளங்கினார்.
  • பால் ஏர்டோசு என்பவர் ஒரு நேர்காணலின் போது அவரிடம் கணிதத் துறைக்கு அவர் வழங்கிய மிகப்பெரிய பங்களிப்பு என்னவென்று கேட்ட போது சற்றும் தயக்கமின்றி சீனிவாச இராமானுசனைக் கண்டெடுத்ததே என்று பதிலளித்தார்.

விருதுகள் 

  • ஸ்மித்தின் பரிசு (1901)
  • ராயல் மெடல் (1920)
  • டி மோர்கன் பதக்கம் (1929)
  • சௌவென்ட் பரிசு (1932)
  • சில்வெஸ்டர் பதக்கம் (1940)
  • கோப்ளி மெடல் (1940) 1947)

 சாதனைகள்

  • 1910 ஆம் ஆண்டில், 33 வயதில், ஹார்டி அரச சமூகத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • அவர் லண்டன் கணிதவியல் சங்கத்தின் தலைவராக 1926 முதல் 1928 வரை இருந்தார், மீண்டும் 1939 முதல் 1941 வரை இருந்தார்.
  • 1936 இல், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார்.

  இறப்பு

  • ஜி. எச். ஹார்டி(G. H. Hardy) டிசம்பர் 1,1947 அன்று இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் லே,கேம்பிறிட்ஜ்ஷிரே இல் இறந்தார்.

தேவநேயப் பாவாணர்

 (பெப்ரவரி 7, 1902- சனவரி 15, 1981)

மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். இவருடைய ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, சிறப்பாக மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் என்று அழைக்கப்பட்டார்.

தமிழ் உலக மொழிகளில் மூத்ததும் மிகத்தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது எனவும்; திராவிடத்திற்குத் தாயாகவும் ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழியென வாதிட்டவர். கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம் உள்ளிட்டவைகளுக்குத் தன் சொற்கள் பலவற்றை அளித்தது என்று நிறுவியவர் பாவாணர் ஆவார். தமிழின் வேர்ச்சொல் வளத்தையும் செழுமையையும் சுட்டிக்காட்டி, அதன் வளர்ச்சிக்கான வழியையும் அவரின் நூல்களின் வழி உலகிற்கு எடுத்து இயம்பினார்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!