தமிழக பள்ளிகளுக்கான முக்கிய உத்தரவு – பள்ளிக்கல்வித்துறை வெளியீடு!

0
தமிழக பள்ளிகளுக்கான முக்கிய உத்தரவு - பள்ளிக்கல்வித்துறை வெளியீடு!
தமிழக பள்ளிகளுக்கான முக்கிய உத்தரவு - பள்ளிக்கல்வித்துறை வெளியீடு!
தமிழக பள்ளிகளுக்கான முக்கிய உத்தரவு – பள்ளிக்கல்வித்துறை வெளியீடு!

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களில் பள்ளிகள் சரியாக திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2022-2023 ம் கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் கடந்த ஜூன் 13ம் தேதி முதல் சிறப்பான முறையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிகளில் 12.08.2022 முதல் 19.08.2022 வரை விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்க பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விழிப்புணர்வு வாரம்:

தமிழகத்தில் பள்ளிக்கல்வியின் 2022-2023 ஆம்‌ ஆண்டில்‌ அனைத்து வகை அரசு, அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ “விழிப்புணர்வு வாரம்‌ , மாணவர்களின்‌ உடல்‌ / மன நலன்‌ காக்க சிறப்புப்‌ பயிற்சிகள்‌, பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள்‌” குறித்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி ஆணையர் அறிவுரைகள்‌ வழங்கியுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், அரசுப்‌ பள்ளிகளில்‌ கல்வியின்‌ தரம்‌, மாணவர்‌ நலன்‌, மகிழ்ச்சியான கற்றல்‌ சூழல்‌, ஆசிரியர்‌-மாணவர்‌ நல்லுறவு போன்றவை மேம்பட தமிழ்நாடு அரசு பல திட்டங்களை அறிவித்துத்‌ திறம்பட நடைமுறைப்படுத்தி வருகிறது.

Exams Daily Mobile App Download

அதன்‌ ஒரு பகுதியாக, மாணவர்களின்‌ ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கு உதவும்‌ வகையில்‌ உடல்நலன்‌ மற்றும்‌ மனநலத்தின்‌ முக்கியத்துவம்‌ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான அமர்வுகள்‌ பள்ளிகளிலேயே நடத்த தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவையில்‌ 2022-2023 ஆம்‌ ஆண்டிற்கான மானியக்‌ கோரிக்கையின்போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் பல அறிவிப்புகளை வெளியிட்டார். அவை “2022-2023 ஆம்‌ கல்வி ஆண்டின்‌ முதல்‌ வாரத்தில்‌ அரசு மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களுக்கு மனநலம்‌, குழந்தைகள்‌ மீதான வன்முறையைத்‌ தடுத்தல்‌, தன்னம்பிக்கையை வளர்த்தல்‌, போதைப்‌ பொருட்களுக்கு அடிமையாதலைத்‌ தடுத்தல்‌, தன்சுத்தம்‌ பேணுதல்‌ போன்ற பொருண்மைகளில்‌ பள்ளி அளவில்‌ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்‌ நடத்தப்படும்‌” என தெரிவித்தார்.

தமிழகத்தின் 4 தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று ( ஆகஸ்ட் 8) விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மேலும் உடல்‌, மனநலம்‌ பேணும்‌ பள்ளிச்சூழலில்‌ கல்வியைப்‌ பெறும்‌ குழந்தைகள்‌ வாழ்க்கையில்‌ வெற்றி வாய்ப்பைப்‌ பெறுகின்றனர்‌. இதற்கென, அரசுப்பள்ளிகளில்‌ கண்ணொளி காப்போம்‌ திட்டம்‌, 85% திட்டம்‌, 845 திட்டம்‌ எனப்‌ பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதையடுத்து கொரானா பெருந்தொற்றினால்‌ மாணவர்களின்‌ கற்றல்‌ முறைகளில்‌ குறிப்பிடத்‌ தகுந்த மாறுதல்‌ ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்‌ மாணவர்களின்‌ உடல்‌,மனநலனைக்‌ காக்க மருத்துவக்‌ குழுக்களைக்‌ கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தவும்‌, உரிய பரிசோதனைகளைச்‌ செய்யவும்‌, இளைஞர்‌ நீதிச்சட்டம்‌, போக்சோ சட்டம்‌, சாலைப்‌ பாதுகாப்பு, இணையப்‌ பாதுகாப்பு, குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள்‌, போதைப்‌ பொருட்கள்‌ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும்‌, மூவலூர்‌ இராமாமிர்தம்‌ அம்மையார்‌ உயர்‌ கல்வி உறுதித்‌ திட்டம்‌ போன்ற அரசு நலத்திட்டங்கள்‌ குறித்த விழிப்புணர்வைப்‌ பள்ளிகளில்‌ ஏற்படுத்தவும்‌ அரசு உறுதி பூண்டுள்ளது.

மேலும் அனைத்து அரசு, அரசு உதவிபெறும்‌ உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ 11.08.2022 அன்று விழிப்புணர்வு உறுதி மொழி எடுக்கும்‌ நிகழ்வும்‌, 12.08.2022 முதல்‌ 19.08.2022 வரை 1. மக்கள்‌ நல்வாழ்வு மற்றும்‌ குடும்ப நலத்துறை. 2. சமூக நலம்‌ மற்றும்‌ மகளிர்‌ மேம்பாட்டுத்துறை / சமூகப்‌ பாதுகாப்புத்துறை. 3. காவல்‌ துறை.ஆகிய துறைகளுடன்‌ இணைந்து விழிப்புணர்வு வாரத்தைச்‌ செயல்படுத்தவும்‌ திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அனைத்துத்‌ துறைகளையும்‌ ஒருங்கிணைத்து இத்திட்டத்தினைச்‌ செவ்வனே செயல்படுத்திட மாவட்ட ஆட்சியர்‌ தலைமையில்‌ சம்பந்தப்பட்ட துறைத்‌ தலைவர்கள்‌ அடங்கிய குழு ஒன்றை அமைத்து, அனைத்து அரசு, அரசு உதவி பெறும்‌ பள்ளிகளுக்குச்‌ செல்ல வேண்டிய அலுவலர்‌ (மருத்துவர்கள்‌,காவல்‌ உதவி ஆய்வாளர்‌, குழந்தை வளர்ச்சித்‌ திட்ட அலுவலர்‌ எனப்‌ பல்துறை அலுவலர்கள்‌) குறித்தத்‌ தகவல்களையும்‌ அவர்கள்‌ பள்ளிக்குச்‌ செல்லவிருக்கும்‌ நாள்‌ குறித்தத்‌ தகவல்களையும்‌ பள்ளிகளுக்கு முன்கூட்டியே அனுப்பி வைத்து விழிப்புணர்வு வாரத்தைச்‌ சிறந்த முறையில்‌ நடத்தவும்‌, அவற்றை ஆவணப்படுத்தவும்‌ அவ்வறிக்கையை பள்ளிக்‌ கல்வி ஆணையரகத்திற்கு அனுப்பி வைக்கவும்‌ அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!