CBSE மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – SHRESHTA உதவித்தொகைக்கான தகுதித்தேர்வு!

0
CBSE மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு - SHRESHTA உதவித்தொகைக்கான தகுதித்தேர்வு!
CBSE மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு - SHRESHTA உதவித்தொகைக்கான தகுதித்தேர்வு!
CBSE மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – SHRESHTA உதவித்தொகைக்கான தகுதித்தேர்வு!

CBSE பள்ளியில் பயிலும் ஒதுக்கப்பட்ட மாணவர்கள் SHRESHTA என்கிற திட்டத்தின் கீழ் இணைந்து உதவித்தொகை பெற்றுக்கொள்ளலாம். மேலும், இந்த உதவித்தொகை பெறுவதற்கான தகுதித்தேர்வு மே 7 ம் தேதி நடைபெறவுள்ளது.

SHRESHTA உதவித்தொகை:

உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் CBSE மாணவர்களுக்காக குடியிருப்புக் கல்வி திட்டம் (SHRESHTA Scheme) என்கிற ஒரு திட்டம் இந்த நிதியாண்டில் இருந்து அமலுக்கு வந்தது. CBSE பயிலும் ஒதுக்கப்பட்ட பிரிவை சார்ந்த மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் இணைந்து பயன் பெறலாம். 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் கல்விச் செலவுகள் என பல சலுகைகளை வழங்குகிறது. 12 ஆம் வகுப்பு வரையிலான சிபிஎஸ்இ பள்ளிகளுடன் இணைக்கப்பட்டுள்ள ரெசிடென்ஷியல் பள்ளிகளுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை பொருந்தும்.

10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

மேலும், இந்த திட்டத்தின் கீழ் தேசிய தேர்வு முகமை (NTA) SHRESHTA (NETS)-க்கான தேசிய நுழைவுத் தேர்வு மே 7 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே SHRESHTA Scheme சலுகைகளை பெற தகுதியாவார்கள். மேலும், இந்த சலுகைகளை பெற மாணவர்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் 75% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தற்போது CBSE ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது கல்வி உதவித்தொகை பள்ளிக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் என அனைத்து கட்டணமும் இந்த சலுகையில் வரும்.

TN TET தேர்வுக்கு தயாராகி வரும் விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு – முழு பாடத்திட்டம் & தேர்வு முறை!

நடப்பு கல்வியாண்டில் (2021-22) 8 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு படிக்கும் பட்டியல் சாதி சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இந்த தேர்வை எழுதலாம். மேலும், இந்த மாணவரின் பாதுகாவலர் ஆண்டு வருமானம் 2.5 லட்சம் வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தகுதியுள்ள மாணவர்கள் shreshta.gov.in என்கிற இணையதள முகவரிக்கு சென்று பதிவுசெய்துகொள்ளலாம். பதிவு கட்டணம் எதுவும் கிடையாது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!