10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு கிளைகளில் பணிபுரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தகுதியானவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு:

தமிழ்நாட்டில் பரவி வந்த கொரோனா ஊரடங்கின் காரணமாக தமிழக அரசு பல வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிடாமல் வைத்து இருந்தது. இந்நிலையில் தற்போது ஊரடங்கில் நிறைய தளர்வுகளை விடுத்துள்ளது அரசு. அதன் காரணமாக சமீபத்தில் tnpsc குரூப் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் அறிவித்து இருந்தது. அதன் மூலம் நிறைய பட்டதாரிகள் பயன் பெற்று கொள்ளலாம் என்பதால் இந்த அறிவிப்பை அரசு தெரிவித்து உள்ளது.

Post Office சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – ஏப்ரல் 1 முதல் புதிய விதிகள்!

இந்த நிலையில் தற்போது இந்திய அஞ்சல் துறையும் தங்களது காலியிடங்களை வெளியிட்டுள்ளது. அதன் காலியிடங்கள் என்னவென்றால், மதுரை மண்டலத்தைச் சேர்ந்த திண்டுக்கல், காரைக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் காலியாக உள்ள கார் டிரைவர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. மேலும் அந்த வேலைவாய்ப்புக்கான முழு விபரங்களையும் கீழே பார்ப்போம்.

இந்த வேலைக்கான விவரங்கள், கார் ஓட்டுநர் பணியில் வேலை செய்ய கல்வித்தகுதியாக 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். கார் ஓட்டுவதற்கான லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். வயது வரம்பாக 56 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு சம்பளமாக ரூ. 18,000 முதல் 62,000 வரை வாங்கலாம். தேர்வு செய்யப்படும் முறையாக இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விண்ணப்பிக்கும் முறை தங்கள் சுயவிவர குறிப்பு அடங்கிய விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்த தகவலை அனுப்ப வேண்டிய முகவரி The Manager, Mail Motor Service, Tallakulam, Madurai – 625 002. மேலும் இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மே 21 ஆம் தேதி என்றும் அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here